கட்டுரை/பத்தி

குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே மற்றும் ஜி. நாகராஜனின் ஆணாதிக்கம்!

எனது பதினேழாவது வயதில் புத்தகக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது சம்பந்தமே இல்லாமல் ஒரு தடித்த புத்தகத்தினுள்ளிருந்து வந்து விழுந்தது ‘குறத்தி முடுக்கு’. அப்போது அப்புத்தகத்தின் பெயர் குறத்தி முடுக்கு என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அதன் அட்டை இரண்டாகக் கிழிந்து ‘குறத்தி மு’ என இருந்தது. முகப்பின் ஒரு பக்கம் பின் திரும்பியிருக்கும் ஓர் ஆணின் வரையப்பட்ட படம் மட்டும் தெரிந்தது. எழுத்தாளர் பெயர் இல்லை. கிழிபட்ட பகுதியில் தொலைந்திருக்கலாம். அப்புத்தகத்தை பொறுமையாக அமர்ந்து திறந்து பார்க்க இந்த அம்சங்கள் போதுமானதாக இருந்தன.
Continue reading

தியாக‌ங்க‌ளின் மேல் ஏறி நிற்கும் வெற்றிக‌ள்!

 

வாசிப்பு என‌க்கு உன்ன‌த‌மான‌ ஒரு நிக‌ழ்வு என்ற‌ த‌த்துவ‌த்தோடெல்லாம் அறிமுக‌மாக‌வில்லை. மொழியின் சுவையே நான் புத்த‌க‌ங்க‌ளைத் தேடிப்போக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அதிர்ஷ்ட‌ வ‌ச‌மாக‌ என‌க்கு லுனாஸில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டையிலேயே வேலை கிடைக்க‌ சாண்டில்ய‌ன், க‌ல்கி, அகில‌ன், நா.பார்த்த‌சார‌தி, மு.வ‌ர‌த‌ராச‌ன், த‌மிழ்வாண‌ன், சுஜாதா, பால‌குமார‌ன், ஜெய‌காந்த‌ன், சிவ‌ச‌ங்க‌ரி, வாஸ‌ந்தி, வைர‌முத்து போன்றோரின் நாவ‌ல்க‌ளைத் தொட‌ர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த‌து. நான் ப‌ணியாற்றிய‌ நான்கு மாத‌க் கால‌த்தில் நூற்றுக்கும் மேற்ப‌ட்ட‌ நாவ‌ல்க‌ளை எந்த‌ப் ப‌ட‌ப‌ட‌ப்பும் இல்லாம‌ல் ப‌டித்து முடித்திருந்தேன். புத்த‌க‌க் க‌டை ந‌ஷ்ட‌த்தில் மூட‌ப்ப‌ட்ட‌தும் நூல்க‌ள் வாங்கும் வாய்ப்பு அச்சிற்றூரில் கிடைக்காம‌ல் போன‌து.

பின்னாளில் ஆசிரிய‌ர் ப‌யிற்சி க‌ல்லூரியில் ப‌டித்த‌ மூன்று ஆண்டுக‌ளும் பெரும் வ‌ர‌ட்சி. க‌ற்ற‌ல் க‌ற்பித்த‌லுக்கான‌ நூல்க‌ள் ம‌ட்டும் அங்கு இருந்த‌ன‌வே த‌விர‌ நாவ‌ல்க‌ள் என்று பெரிதாக‌ எதுவும் இல்லை. நான் ப‌டித்து முடித்திருந்த‌ மு.வ‌ர‌த‌ராச‌ன், க‌ல்கி அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த‌ன‌ர். ர‌ம‌ணி ச‌ந்திர‌னை 3 புத்த‌க‌ங்க‌ள் ப‌டித்த‌தோடு அலுத்துவிட்ட‌து. என‌து அறைத்தோழ‌ர் ச‌ங்க‌ இல‌க்கிய‌த்திலும் த‌னித்த‌மிழிலும் ஈடுபாடு காட்டிய‌தால் வேறு வ‌ழியில்லாம‌ல் அ.கி.ப‌ர‌ந்தாம‌னின் ந‌ல்ல‌ த‌மிழ் எழுத‌ வேண்டுமா, திருக்குற‌ள், திரும‌ந்திர‌ம் என‌ வாசித்து அவ்வ‌ப்போது பேசிக்கொண்டிருப்பேன். என்னைக் காட்டிலும் என் அறைத்தோழ‌ர் திருவ‌ருட்பாவையும் திருக்குற‌ளையும் ம‌ன‌ன‌மாக‌ச் சொல்வ‌தில் தேறியிருந்தார்.
Continue reading

வெளிறு இன்மை அரிது

எனக்கும் கவிதைக்குமான உறவைப்பற்றி பேசுவது… ஏன் நினைப்பதுகூட சங்கடமானது. மற்றவர்களின் சங்கடத்தைப் பற்றி படிப்பது சிலருக்குச் சுவாரசியமாக இருக்கும் என்பதால் மட்டுமே மெனக்கெட்டு கவிதையுடனான எனது மூன்று அனுபவங்களை எழுத விழைகிறேன். Continue reading

தமிழகப் பயணம்

நாளை 31.3.2011 தமிழகத்திற்குச் செல்கிறேன்.  உடன் நண்பர் சிவா. செல்லும் முக்கிய நோக்கம் இயக்குநர்களைச் சந்திப்பது என இப்போதைக்கு முடிவு செய்துள்ளோம். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் எழுத்தாளர்களையும் சந்திப்பதாகத் திட்டம். சுவாரசியத்தில் திட்டம் அப்படியே தலைகீழ் ஆகிவிடுமோ என அச்சமாக உள்ளது. 4.4.2011 திரும்பிவிடுவோம். அநேகமா நான் தனியனாய் திரும்பலாம். சிவா அங்கேயே தங்கிவிட இரண்டு விடயங்கள் காரணங்க இருக்கலாம் .

Continue reading

‘தீபாவளிக்கு என் கவிதையை ரேடியோவுல கேட்டீங்களா?’

 

கடந்த தீபாவளி தொடங்கி பொங்கல் இன்னும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை நெருங்கும் போதெல்லாம் வானொலி அறிவிப்பாளர்களிடமிருந்து ஒரே வகையான தொலைப்பேசி அழைப்புகளே வந்தன.

பண்டிகையை ஒட்டி கவிதை எழுதி வாசிக்க வேண்டுமாம். Continue reading

அவ‌தாரும் ஆத்தாவும்!

 

அவ‌தார் ப‌ட‌த்தை இர‌ண்டாவ‌து முறையாக‌ ‘3டி’ காட்சியில் பார்த்த‌போதும் மன‌ம் அப்ப‌ட‌த்தின் இறுதி க‌ட்ட‌த்திற்கே காத்திருந்த‌து. ம‌ற்றெல்லா காட்சிக‌ளைவிட‌வும் இறுதி காட்சியில் என‌க்கு ஒரு வ‌கையான‌ சிலிர்ப்பு ஏற்ப‌ட்ட‌து. இனி தோல்விதான் என‌ அந்த‌ப் பூமியின் ம‌க்க‌ள் பின்வாங்கும் நிலையில் இந்த‌ வ‌ன‌ம் எங்க‌ளுக்கும் சொந்த‌மான‌துதான் என‌ வில‌ங்குக‌ள் வ‌ந்து யுத்த‌ம் செய்யும் காட்சி ம‌னித‌னின் ஆண‌வ‌த்திற்கு அறைவிழுந்த‌து போல் இருக்கும்.

Continue reading

கோழைகளின் கூச்சல்

நேற்று ஃபிளோமினா எனும் புனைப்பெயரில் சிங்கப்பூர் Bras Basah Road  அருகில் உள்ள ஒருவர் வெட்டிக்கதை அளந்ததைத் தொடர்ந்து அவர் யாரென்று கண்டுப்பிடிக்கப்பட்டது. கண்டுப்பிடிக்கப்பட்டது தெரிந்தவுடன் ஆள் ஓடிவிட்டார். இந்நிலையில் எனக்கு  ‘ராஜூ’ போலி பெயரில் மற்றுமொரு  மின்னஞ்சல் வந்தது. அதில் மிக முக்கியமானது என் எழுத்து தொடர்பானதல்ல. என் ஆசிரியர் தொழில் சம்பந்தப்பட்டது. அதில் நான் பள்ளிக்கூடத்தில் செய்த தவறுகளுக்காகப் பள்ளி (அரசாங்கத்தால்) மாற்றப்பட்டதாக இருந்தது. மிக விரைவில் அந்த ‘ரகசியம்’ அம்பலப்படுத்தப் படுமாம். நல்லது.

Continue reading

முகிலனும் முருங்கைப் பூவும்

தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சிகரமானவர்கள். கல்வியும், நாகரீகமாகிவிட்ட வாழ்வியல் முறையும், எளிதாகிவிட்ட உலகத் தொடர்புகளும் எந்த வகையிலும் அவர்களிடம் மாற்றம் கொண்டுவரவில்லை. திராவிட கழகப் பிண்ணனியில் பெரியாரைத் தவிர்த்து அறிஞர் அண்ணா, கருணாநிதி, போன்றோருடைய அடுக்குமொழியும் அலங்காரமுமான பேச்சில் உணர்ச்சி தூண்டப்பட்டு கொதித்தெழுந்த பரம்பரையின் இரத்தத்தொடர்பு, நமது நாட்டிலும் இன்னும் நீர்த்துப் போகாமல் இருக்கிறது.

Continue reading