பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுதான் பழமொழி.
பெண்ணே பேயானால், அது ஈவிரக்கமேயற்றுப் போகும் என்பதுதான் நடைமுறை மொழி. பெண் சாபம் பொல்லாதது என்பது பழமொழி. அது மட்டும் புது மொழியிலும் மாறாதது; அதுவேதான். பெண்ணின் மன வேதனை, அதில் அவள் நெஞ்சுக்குள் கனன்றிக் குமுறும் கனல் அது தன் கொழுந்து விட்டெறியும் தீ நாக்குகள் அடங்கும் வரை ஓயாது. அவளுடைய இந்தக் குமுறல் அவளுக்கு மனதாலும், உடலாலும் தீங்கிழைப்பவர்களை ஜென்ம ஜென்மமாகத் தொடர்ந்து அழிக்கிறது. இதை மண்ணோடு மறைந்த அந்தப் பெண்ணும் அறிவதில்லை. அழிக்கப்படுபவனுக்கும் என்ன தவறு தான் செய்தோம் எனத் தெரிவதில்லை. தன் வாழ்க்கையில் நடைபெறும் சுகக் கேடுகளை வைத்து, சரிவுகளை வைத்து, நிம்மதியிழப்புகளை வைத்துப் பின்னர் அறிந்து கொள்கிறான். கர்ம வினைகள் எனும் ஞானம் பெறுகிறான். ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிந்து போகும் தருணத்திலோ, மேலும் மேலும் துன்பங்களில் உழலும்போதோ மட்டுமே அவனுக்குப் புரிகிறது. இதை ஆரம்பத்திலேயே புரிந்து கொள்பவன் இந்த ஜென்மத்திலாவது நல்வினைகளைப் புரிவோம் என்று தெளிகிறான்.
Continue reading →