ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்!

12 ஜூலையில் க.பாக்கியம் ஏற்பாட்டில்  ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. அந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்ததன. அதன் எதிரொலியாக ராஜேந்திரன் மன்னிப்புக்கேட்கும் வரை எழுத்தாளர் சங்க நிகழ்வுகளைப் புறக்கணிப்பது என இளம் தலைமுறை எழுத்தாளர்கள் முடிவெடுத்தது வரவேற்புக்குறியது. அதிலும் கடந்த வருடத்தில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 19 பேரில் கே.பாலமுருகன், தயாஜி, அ.பாண்டியன், சுதந்திரன் போன்றவர்கள் இச்சூழலை எதிர்க்கும் முகமாக தங்களுக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கீகாரம்  தேவை இல்லை எனக்கூறியுள்ளது நடப்பு இலக்கியச் சூழலின் மேல் நம்பிக்கையைப் பாய்க்கிறது.

Continue reading

அவதூறுக்கு பதில் சொல்லதான் வேண்டுமா?

மொட்டைக் கடிதங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் மொட்டைக் கடிதங்கள் பெரும்பாலும் இயலாதவர்களின் குரலாக இருக்கும் போது அதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. சமூகத்தால் ஒடுக்கப்படும் ஒரு சிறுமியிடமிருந்துகூட தன் உரிமையைக் கேட்டு மொட்டைக் கடிதம் வரலாம். எல்லாவற்றையும் சீர்த்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது. கடிதத்தின் ஆதாரமான நோக்கத்தை ஆராய வேண்டியுள்ளது.

Continue reading

இழப்பு

படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர்  உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக் கொண்டு வயிறோடு ஒட்டியபடி இருந்த பந்தை மூடி கண்ணாடியில் பார்த்தேன்.  அம்மாவின் வயிறும் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் இருந்தது. ஆனால் அவள் அப்போதெல்லாம் என்னைப்போல சுறுசுறுப்பாக இல்லை. அவசரத்துக்கு எழ மாட்டாள். தரையில் ஒருக்கழித்து உட்கார்ந்தபடி என்னிடம்தான் வேலைகளை ஏவி விடுவாள். எல்லாவற்றுக்கும் வைவாள்.

Continue reading

தங்க மீன்கள் ; குளம் கானலாகிய கதை

திட்டமிடப்படாமல் பதிவாகும் நமது புகைப்படம் நமக்கு அத்தனை நெகிழ்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் சலிக்காமல் நாம் அதை பார்க்கிறோம். அதில் தெரிவது நாம் புரிந்து வைத்திருக்கும் நாம் அல்ல. சிரிப்பில், அழுகையில், மௌனத்தில் , கோபத்தில் நமது முகம் வேறொன்றாக இருக்கிறது. நாம் நமது வேறொரு முகத்தைப் பார்க்கிறோம். அதில் அவ்வளவு இஷ்டம் காட்டுகிறோம். அதில்தான் உண்மை நெருக்கமாக உள்ளது. அதிலும் பிரக்ஞையற்ற நமது குழந்தை பருவங்களின் புகைப் படங்கள் நமது பாதுகாப்பில் எப்போதும் இருக்கின்றன.

Continue reading

எனவே ஆணாக இருப்போம்

மாநாட்டின் இறுதியில்

தங்கள் ஆண் என நிரூபிக்க

ஆகச்சிறந்த ஒரே வழியாக

ஆண்குறியை வெளியே தொங்கவிடுவது

சட்டமாக்கப்பட்டது.

 

வெளியில் வெறிச்சோடி கிடக்கும்

ஆண்குறிக்கு

இனி ஜிப் தேவையில்லை என ஒரு சாரார் மகிழ்ந்தனர்.

 

Continue reading

மலேசியாவில் பெண் எழுத்தாளர்கள் இயங்குவதே ஆண்களின் பெருந்தன்மையினால்தான்!

இப்போது காலை மணி ஏழு. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் மூன்றாவது நாளாக காட்டுக்குள் முகாமுக்குச் செல்லவேண்டும். எந்தத் தொடர்பும் இருக்காது. நாளை இதுகுறித்து பேசும் அளவுக்கு மனம் இன்னும் அமைதியாகவில்லை. ஒரு நிமிடம் மலேசிய இலக்கியத்தின் நிலை குறித்த வேதனையும் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் குறித்த கோபமுமே மிஞ்சியிருந்தது.
Continue reading

முட்டாள் மனங்களின் மூன்று கேள்விகள்!

அயல்நாட்டில் தமிழன் போரிட்டால் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு ‘தமிழன்டா’ என வெட்டிப்பெருமை பேசி, தனது நாட்டு பிரச்னைக்குத் தொடை நடுங்கும்  தமிழர்களிடம்  இவ்வாறான ஒரு தொணியில்தான் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது.

Continue reading

மலேசியத் தமிழர்கள் மடையர்களாக இருந்தால் இனி ஹிண்ட்ராப்பை நம்புவார்கள்!

 

HINDRAF MEETS PMஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள்.  அவர்கள் தொணி இவ்வாறு இருந்தது.

Continue reading