Author: தயாஜி

தொப்பையைக் குறைப்பது எப்படி?

ar-rahman-one-love

தொப்பையை குறைப்பது பற்றி இணையத்தில் தேடும்போது இங்கே வந்திருக்கலாம். நானும் எவ்வளவோ செய்து பார்த்தாச்சி இது வேறயா என வாய்விட்டு பேசி, யாருக்கும் தெரியாமல் இதனை நீங்கள் படிக்கத்தொடங்களாம். ஒவ்வொரு மாதமும் இந்த பக்கத்தில் எந்த சர்ச்சயை கண்டுக்கொள்ளலாம் என இங்கு வந்திருக்கலாம். நீங்கள் செய்துக்கொண்டிருக்கும் பயற்சியோ, செய்துக்கொண்டிருக்கும் முயற்சியோ இத்தலைப்பில் ஒத்துப்போகிறதா என பார்க்க…

நிலையாமையில் தினம் தினம்தான் ஏழை சாகிறான்

tayaji pix

சுந்தர ராமசாமியின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தேன். சு.ரா-வின் ‘நா.பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனித நேயமும்’ என்ற புத்தககம் கிடைத்தது. சுந்தர ராமசாமியின் பெயருக்காகத்தான் அந்த புத்தகத்தை வாங்கினேன்.  புத்தகத்தைப் படித்த போதுதான் நா. பிச்சமூர்த்தி குறித்தும் அவரது எழுத்து குறித்தும் தெரிந்துக் கொண்டேன். ஆனால் அவரின் கவிதைகளோ, சிறுகதைகளோ இங்கே  கிடைப்பது அரிதாக இருந்தது.…

தூப்புக்காரி : மலம் சுமக்கும் மனிதரின் மனம் கனக்கும்.

tuupukari

“அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..” -மலர்வதியின் முன்னுரையிலிருந்து மக்களின் மொழியில்…

கனவுப்பகடை

சமீபத்திய நீண்ட விடுமுறையில் சில புத்தகங்களை படிக்க எடுத்தேன். தொடர்ந்து வாசிப்பதை இயல்பாக கொண்டிருப்பதால் ஒரு புத்தகத்தை தொடர்ந்து அடுத்த புத்தகத்தை எடுப்பதென்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. படித்த முடித்த புத்தகத்தின் அலைகள் அப்போதைய எண்ணங்களை அழுத்திக் கொண்டிருக்கும். அப்படித்தான், எந்த புத்தகம் படிக்கலாம் என யோசனைக்கு பிறகு,‘பொம்மைகளோடு பேசிக் கொண்டிருக்கலாம்’, ‘பதினான்காவது அறை’, ‘கனவுகளுடன்…

பட்டு : புரிந்து கொள்ளாத அன்பு நிரந்தரமானது

கணவன் மனைவி என்னும் உறவு புனிதமாகப் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒருவருகொருவர் எனும் கட்டமைப்பில் வருகிறார்கள். திருமணம் பெண்களை அடிமையாக்குகிறது என்கிறார் தந்தை பெரியார். காதல் என்பதும் ஒன்றுமில்லாதது. வெறுமனே அதற்குப் புனித பிம்பத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பெரியார் சொன்னதாய் படித்த ஞாபகம் இருக்கிறது. காதல் இல்லாத நிலை வந்தால்;…

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்

ilappu

*இந்தச் சிறுகதை பொதுமக்களின் / மாணவர்களின் வாசிப்புக்கு அல்ல. உளவியல் அறிந்தவர்கள் மட்டும் இக்கதையை வாசிக்கலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஜீன்ஸிலேயே சிறுநீர் கழித்திருக்கிறேன். அதன் ஈரம்தான் என்னை எழுப்பியிருக்கவேண்டும். இல்லை நான் எழுந்திருக்கவில்லை. முனகுகிறேன். என்னால் அசைய முடியவில்லை. கண்களைக் கட்டியிருக்கிறார்கள். கை கால்களும் கட்டியிருக்கிறது. என்ன இது இப்படி ஒரு வாடை. குமட்டுகிறது. இது…

‘குவர்னிகா’வும் ஷோபாசக்தியுடனான கலந்துரையாடலும்

shobasakthi

முதன் முறையாக மலேசியப் படைப்பாளர்களில் எழுத்துகளும் 41-வது இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலான ‘குவர்னிகாவில்’ சேர்க்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய படைப்புகள் குறித்து பேசவும் இங்கே குவர்னிகா குறித்த அறிமுகத்தை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். ‘புத்தகச்சிறகுகள்’ ஏற்பாட்டில் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆதரவில் ஷோபாசக்தியுடன் கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. சில நாட்களுக்கு…

எலி பொறியில் எழுத்தாளர் சங்கம்

mousetrap

பூனை கழுத்தில் மணி கட்டுவது யார் ஏன் ஓடி ஒளியவா? நூறு எலிகள் பூனையின் கழுத்தை கடித்துக் குதறுவோம்… – காசி ஆனந்தன் படித்ததும் கொஞ்சம் பதட்டம் வந்தது. யோசிக்கத் தோன்றியது. நேரம் எடுக்க நினைத்தேன். பதட்டம் குறைந்தது. இப்போது எழுத தொடங்குகிறேன். பதட்டமின்றி எழுதுகிறேன். ஆனால், ஒரு மாத கால இடைவேளிவிட்டு பதில் எழுதுவதற்கு…

மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறோம்..!

06

நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். மிக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்; இதுவரையில் பெண்களுக்கு எழுத்தாளர் சங்கம் கொடுத்து வந்த மரியாதை, பரிசு , முக்கியத்துவமெல்லாம், அவர்களின் எழுத்துகளை படித்ததால்தான் என நினைந்திருந்த அவர்களுக்கும் சரி, இன்னமும் எழுத்தாளர் சங்கத்தில் அதி பயங்கரமாக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் சரி… சரியாக புரிய வைத்துவிட்டார் சங்கத்தலைவர். இதுவரையில், ‘கொடுத்தது’…

நமக்கான குரல்களை நசுக்கி எவ்வளவு தூரம் ஓடிடுவோம்

தயாஜி படம்

வானொலியில் அறிவிப்பாளராய் இருப்பதால் அவ்வபோது, அடையாளைப்படுத்துவும், நானும் இருக்கிறேன் என்பதை காட்டவும் சிலவற்றை செய்யவேண்டியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னால் பேட்டி எடுக்க வந்திருந்தார்கள் ; வழக்கமான கேள்விகளுடன். பொதுவாக இப்படி பேட்டி எடுக்க வருகின்றவர்களிடம் சிலவற்றை கவனிக்கலாம். நம்மை பேட்டி எடுக்க வந்து, நம்மை பற்றி நாம்மையே சொல்ல வைப்பார்கள். நாம் சொல்வதை கவனிக்காமல், அடுத்தடுத்த…

தறுதலை புத்தி என்பது யாதெனில்

thayaji

இது கதை என்று நான் முன்னெச்சரிக்கையாக சொல்கிறேன். படித்து முடித்ததும் முதல் வாக்கியத்தின் சத்தியமின்மையை நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் அல்லது பாதிப்பை கொடுப்பதில் ஒருவர். இதனை எழுதுவதால் எனக்கு ஏற்படப்போகும் பிரச்சனைக்கு நான் மட்டும் பொறுப்பல்ல. என்னுடன் சுந்தர ராமசாமியும்தான் பொறுப்பு. அவரின் கட்டுரை ஒன்றில் புதுமை பித்தனை இப்படி குறிப்பிடுகின்றார்; “சுற்றிவரக்…

அம்மா தாயே புக்கு போடனும்; பிச்சை போடுங்க!

book

இனி பக்கம் பக்கமாக எழுதி உங்களிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது. இனி முடிவு உங்கள் கையில். இதற்கிடையில் கதையொன்றை உங்களுக்கு சொல்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் கதை. ஒவ்வொரு எழுத்தும் காரசாராமத்தான் இருக்கும். அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வபோது எழுதி அனைவருக்கும் தான் இருப்பதாக காட்டிவிடுவது அவரது வழக்கம். பத்திரிக்கைகளும் எழுத்தாளர் சங்கமும் கூட அதற்கு உற்ற…