கலை இலக்கிய விழா 10

இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கான ஏற்பாடுகள் மிக உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படமும் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் ‘கலை இலக்கிய விழா 10’ மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்துக்கான மேலும் ஒரு படிக்கல்லாகத்…

மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில்…

“அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை”

மருத்துவர் மா.சண்முகசிவா மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர். மலேசியாவில் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. 1987 – இல் ‘அகம்’ எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் மூலமாக படைப்பிலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். மலேசிய இலக்கியத்தின் தரமும் படைப்பாளர்கள் தரமும் உயர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இவரிடத்தில் மேலோங்கி இருந்தது. இவருடைய தொடர் முயற்சி இன்றைய…

முன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை

இலக்கிய படைப்புகள் இருவழி தொடர்புள்ளவை. எழுத்தாளனின் உள்ளத்தில் இருந்து விரியும் கற்பனையும் அனுபவமும் வாசகனுக்கு மெய்நிகர் வாழ்க்கை அனுபவமாகிறது. இலக்கிய பிரதியின் வழியே படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் அந்தரங்க உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலின் வழி வாசகன், எழுத்தாளன் காட்டும் அனுபங்களை மென்மேலும் விரித்துக் கொள்ள முடிகிறது. படைப்பிலிருந்து பெரும் அனுபவங்களும் திறப்புகளும் வாசகனின் வாழ்க்கை…

“எல்லா துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது”

மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் தீவிரத் தன்மையுடன் இயங்கி வருபவர் எழுத்தாளர் அ.பாண்டியன். இடைநிலைப்பள்ளியின் ஆசிரியரான அ.பாண்டியன் வல்லினம் இதழின் பொறுப்பாசிரியரும் கூட. வல்லினம் அகப்பக்கத்தில் தொடர்ந்து பல முக்கியமான கட்டுரைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் விமர்சனத் தன்மையைக் கொண்டவை. அவரது முதல் நூலான ‘அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ தேசிய…