வைகாசி

வைகாசி பாட்டி என்னமோ  சாதிப் பார்ப்பவள்தான். ஆயினும் எல்லோரிடமும் சகசமாய் பழகும் குணம் அவளுக்கு இருந்தது. யார் வீட்டுக்குப்  போனாலும் சாப்பிடவோ குடிக்கவோ அவளுக்கு மனத்தடை இருந்ததில்லை. அவளைப் பொருத்தவரை திருமணத்திற்கு மட்டும்தான்  சாதிப் பார்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடிருந்தாள். தான் என்ன சாதி என்று தெரிந்த அவளுக்கு  ‘சாதி’ என்றால் என்னவென்று தெரியாது.…

புரியவில்லை என்பதுதான் புரிந்தது

மகிழுந்தில் அமர்ந்தவாறு பள்ளி மாணவர்கள் நுழைவாயிலில் நுழைவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தினமும் பார்ப்பதுதான். எப்போதும் பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை வகுப்பறை வாசல் வரை கொண்டு வந்து விட்டுச் செல்பவர்களும் உண்டு. பள்ளிக்குத் தனித்து வருகின்ற மாணவர்களும் உண்டு. தன் தோழன் அவன் தாய் தந்தையோடு வருவதைப் பார்க்கும்போது அவன் பார்வையில் ஓர் ஏக்கம்…

மலையும் மனிதர்களும்

[ 1 ] எண்ணி எண்ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்ச பின்னாலும் இன்னும் வெட்டு  என்கிறானே வேலையத்த கங்காணி. உதையும் பட்டோம் மிதியும் பட்டோம் இங்க வந்து மானம் கெட்டோம் முட்ட முழிச் சாமி கையால் மூங்கில் கழி அடியும் பட்டோம்… [மலையகக் கூலித்தொழிலாளர்கள் நாட்டுப் பாடலொன்றின் சில வரிகள்.] பாரத நிலத்தை ஆண்டு சுரண்டிச்…

ரிங்கிட் குறுநாவல் விமர்சனம்

(விமர்சனப் போட்டியில் வென்ற கட்டுரை) பணம் என்று வரும்போது ஏழையும் பணக்காரனும் ஒன்றுதான். பணம் தேடுதல் இன்று வாழ்வின் அடிப்படை நோக்கமாக மாறிவிட்டது. இரைதேடலின் நவீன வடிவம். ஆனால் எந்த விலங்கும் தனக்கான சிறையை ஏற்படுத்திக் கொள்வதில்லை. மனிதன் பணம் என்ற ஒன்றை உருவாக்கியதன் மூலம் தன்னைத்தானே அதற்குள் சிறைப்படுத்திக் கொண்டுவிட்டான். தங்கத்தில் கழிவறைத்தாள் வைத்திருப்பவர்…

துளிர்க்கும் சிறகுகள்

(விமர்சன போட்டியில் வென்ற கட்டுரை) மனித வாழ்வின் பொழுதுபோக்கு தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே படைக்கப்படும் ஒரு கலைக்கு ஆயுள் குறைவு. அது ஒரு நுகர்பொருள் மட்டுமே. நுகர் பொருளாக இருப்பதாலேயே அது காலவோட்டத்தில் வணிகப்பொருளாகவும் மாறி விடுகிறது. அதே கலை மனித வாழ்வின் சமத்துவம் சார்ந்த தேவைகளைப் பேசும் குரலாக மாறும்போது அது மக்களுக்குரிய…

அறிவிப்புகள்

‘சமகால சிறுகதையின் செல்நெறிகள்’ எனும் தலைப்பில் வல்லினம் 12.5.2019இல் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் கலந்துகொள்கிறார். 50 பேர் கலந்துகொண்டு கலந்துரையாடும் வண்ணம் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வல்லினம் ஏற்பாடு செய்திருந்த விமர்சனப் போட்டியில் ஶ்ரீதர் ரங்கராஜ் மற்றும் பவித்தாரா ஆகியோரின் கட்டுரைகள் தேர்வு பெற்றுள்ளன. ஊட்டியில்…

வல்லினத்தின் நாவல் இலக்கியம் & யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப்போட்டி பரிசளிப்பு

2019இல் வல்லினத்தின் முதல் நிகழ்ச்சியானது எதிர்வரும் 31.3.2019 இல் நடைபெறவிருக்கின்றது. ‘நாவல் இலக்கியம்’ எனும் தலைப்பில் இம்முதல் நிகழ்ச்சி நடைவெறவுள்ளது. அமர்வு 1: நாவல் அறிமுகமும் விமர்சனமும் இந்த அமர்வில் வல்லினம் பதிப்பில் வெளியீடு கண்ட ரிங்கிட் (அ.பாண்டியன்), மிச்சமிருப்பவர்கள் (செல்வன் காசிலிங்கம்), மற்றும் கிழக்கு பதிப்பில் வெளிவந்திருக்கும் மலைக்காடு (சீ.முத்துசாமி) ஆகிய நாவல்கள் குறித்த…

ஒரு சொல்லை, ஒரே ஒரு வாக்கியத்தைக் கண்டுப்பிடிக்கவே எழுதுகிறேன்

தனது புனைவுகளில் வாழ்க்கையை அதன் இயல்பில் பதிவு செய்யும் எழுத்தாளர் இமையம். அவர் எழுத்துகளில் கோட்பாடுகளின் தாக்கம் இருப்பதில்லை. அசலான வாழ்க்கை அதன் அத்தனை முரண்களுடனும் பதிவாகியிருக்கும். தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கான தனிபோக்கை உருவாக்கிக் கொண்டவர் இமையம். ‘கோவேறு கழுதைகள்’ தொடங்கி ‘செடல்’, ‘ஆறுமுகம்’, ‘எங் கதெ’, ‘செல்லாத பணம்’ என நாவல்களும் பல…

அணையா அனல் – இமையத்தின் ஐந்து நாவல்களை முன்வைத்து

எழுத்தாளர் இமையம் தமிழின் தற்கால கதைசொல்லிகளில் முதன்மையானவர்களில் ஒருவர். அவருடைய கதைகள் நடுநாடு என்று விளிக்கப்படும் வட தமிழக – புதுச்சேரி நிலப்பரப்பை களமாக கொண்டவை. இயல்புவாதத் தன்மையிலானவை. அந்நிலத்தின் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் கையாள்பவை. இக்கட்டுரை அவருடைய ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங்கதே’ மற்றும் ‘செல்லாத பணம்’  என இதுவரை அவர் எழுதிய…

இமையம் சிறுகதைகள்: அறியப்பட்டதை ஆவணமாக்கும் கலை

(1) “தலித்தியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது.” இது ஒரு நேர்காணலில் வெளிப்பட்ட எழுத்தாளர் இமையத்தின் குரல். அவருடன் தொடர்ந்து…

ஆறுமுகம் : ஒழுக்கவிதிகளுக்கு வெளியில்

சமூகம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் அறிந்த, பழகும், சந்திக்கும் மனிதர்களால் மட்டும் ஆனதல்ல. அல்லது வரலாறு பதிவு செய்துள்ள உன்னத மனிதர்களையும் லட்சியப் புருஷர்களையும் மட்டும் கொண்டதல்ல. நாம் கண்டுகொள்ளாத அல்லது திட்டமிட்டே அறிய விரும்பாத மனிதர்களும் சமூகத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அருவருப்போடு நாம் ஒதுக்கிவைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாழ்க்கை…

செடல்: கைவிடப்படுதலின் துயர்

இயல்புவாதப் படைப்புகளைச் சுருக்கமாகக் கடவுள்கள் இல்லாத படைப்புகள் என்று வகைப்படுத்தலாம். கதைகளில் அற்புதத் தன்மையையும்  யதார்த்தம் கடந்த தன்மையையும் கழித்துவிட்டு எழுதப்படும் கதைகளை இயல்பு மற்றும் யதார்த்தவாதப் படைப்புகளாக அடையாளப்படுத்தலாம். செடல் அப்படியானதொரு இயல்புவாதப்படைப்பு. ஆனால் செடல் இப்படித் தொடங்குவது ஒரு நகைமுரண். ‘சாமி என்னிக்குமே சாவப்போறதில்லெ’ சரியாகச் சொல்வதானால் இந்த நாவல் முழுக்கவே கடவுள்…

பெத்தவன்: நிகழ்த்தப்படும் ஆவணம்

‘பெத்தவன்’ நெடுங்கதை வெறும் நாற்பது பக்கங்கள் மட்டுமே. அந்த நாற்பது பக்கங்களை வாசித்து முடித்தபோது சில மணி நேரம் எந்த வேலையும் செய்ய முடியாமல் தடுமாறிப் போயிருந்தேன். மனித குலத்தில் வேரூன்றியிருக்கும் சாதியத்தையும் அதன் குரூரங்களையும் கதை முழுக்க நிரம்பியிருக்க அதை வாசிக்கும் வாசகன் நிச்சயம் பதைபதைப்புக்கு உள்ளாவான். எழுத்தாளர் இமையம் அவர்களை வல்லினம் மூலமாக…

எங் கதெ: ஆணின் அகவெளி

“என்னெ மாரியே ஒரு பொம்பள பொலம்புனா கற்புக்கரசி, கண்ணகி, உத்தமி, பத்தினின்னு பட்டம் கொடுப்பாங்க. ஆம்பள பொலம்புனா பொட்டப் பயம்பாங்க. பொழக்க தெரியாதவன்னு சொல்லுவாங்க”, இப்படியாக சமூகத்தின் பார்வையில் பொழக்க தெரியாதவனாகவும் நமது பொதுப்புத்திக்குப் பொட்டப் பயலாகவும் தெரிகிற விநாயகம் என்ற ஆண்மகனின் பத்து வருடத்துக் கதைதான் எங் கதெ. ஓர் ஆணின் கதை என்பது…

பெத்தவன்: வஞ்சிக்கப்படும் அன்பு

அழ வைத்தாலும் என்னுள் ஆழப் பதிந்த கதை, உயிர் வலி உணர்த்திய  கதை. ஓர் உயிர் இன்னோர் உயிரை வதைக்கும் சமத்துவமற்ற நிலையின் உச்சம் இந்தப் பெத்தவன் குறுநாவல். சாதித் தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் ஒரு கிராமத்தில் கதை தொடங்கி அங்கேயே முடிகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆணை (காவல் அதிகாரியை) மூன்று வருடங்களாகக் காதலிக்கிறாள்…

செல்லாத பணம் : அலைந்து எரிந்த நிலம்

பார்த்த இடமெங்கும் கண்குளிரும் பொன்மணல் என் பாதம் பதித்து நடக்கும் இடத்தில் மட்டும் நிழல் தேடி என்னோடு அலைந்து எரிகிறது ஒரு பிடி நிலம். பாலை – பிரமிள் பொன்மணல் விரித்த பாலைவெளி. கண் தீண்டக் குளிர்ச்சி. கால் பதிக்க, தழல்த்தீண்டல். எல்லா உறவுகளும், அதைக் கட்டி வைக்கும் உணர்ச்சிகளும், அது வெளிக்காட்டும் உணர்வுகளும் இந்தப்…

பி.ரம்லி: கலை – கனவு – கலகம்

‘தூய கனவு நொறுங்கி சிதைந்தது கட்டிய மாளிகை கல்லறை ஆனது இருள் சூழும் வருங்காலம் வருவது நிச்சயம், என் ஆன்மா உழல்கிறது வடக்கும் தெற்கும்’ இது பி.ரம்லியின் வரிகள். அவர் இறுதியாய் எழுதிய மலாய் பாடல் வரிகள். அவர் வாழ்வின் இறுதிப்பகுதியின் அலைக்கழிப்பைச் சொல்லும் வரிகள். 1973 இல் தனது 44வது வயதில் இறப்பதற்கு முன்…

ஒரு தருணத்தில்

அவன் தனிமையில் முதுகை கடலுக்குக்  காட்டியபடி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான். கடுமையான காற்று. வானம் மிகப் பிரகாசமாக, மேகத்தின் தடயம் ஏதுமின்றி இருக்கிறது. கடல் நீரில் பிரதிபலிக்கும் மினுங்கும் சூரிய ஒளியில், அவனது முகம் தெளிவாகத் தெரியவில்லை. கிரீச்சிடும் துருவேறிய ஈரமான பெரிய இரும்புக் கதவுகள். எங்கோ அவற்றின் மேற்பகுதியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தத் தடித்த கனத்த…

தீக்கொன்றை

படுக்கைவிளிம்பில் இருந்து அக்காவின் கை நடுக்கத்தோடு விலகி கீழே தொங்கியதில் ரப்பர் குழாயில் மருந்து தடைப்பட்டு இரத்தம் மேலேறியது. சுற்றுக்கு வந்த மருத்துவர் அதை சரி செய்து “அவள் உன்னை காப்பாற்றியதாக எண்ணி தேற்றிக் கொள்,” என்று ஆறுதல் கூறிச் சென்றார். அதுவரை விட்டுவிட்டுத் தோன்றிக் கொண்டிருந்த அபாயகரமான மூச்சுத் திணறலின், உருவெளி மயக்கங்களின் பிடி…