கடந்த 2007ஆம் ஆண்டு கால் அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தபோது உலகின் சிறந்த திரைப்படங்களை எடுத்து வந்தார் நண்பர் காளிதாஸ். அவரிடம் உலகத் திரைப்படங்கள் குறுவட்டுகளாகச் சேமிப்பில் இருந்தன. நகர முடியாமல் கிடந்த அந்த மூன்று மாதங்களில் உலகின் மிகச்சிறந்த சில திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வலியால் வாசிப்பில்…
Category: சினிமா
The Platform: மானுடத்தின் இறுதி நம்பிக்கை
சமூக வாழ்வியல் சிக்கல்களைப் பேசுமிடமெல்லாம் பொதுவாகவே உயரடுக்கு சமூகம், அதனுடன் நெருங்கியத் தொடர்புடைய முதலாளியத்துவம் சார்ந்தும் அச்சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டப் பிரிதொரு சமூகத்தைச் சார்ந்தும் கவனம் குவிமயமாவது இயல்பு. முதலாளியத்துவத்தை எதிர்த்துச் செயல்பாட்டு ரீதியிலும் கருத்தியல் பதிவாகவும் அழுத்தமான எதிர்ப்பை முன்வைத்த கார்ல் மார்ஸ் தொடங்கி இன்று அதன் நீட்சியில் முழுக்கவே சமூகவியல் சிக்கலாக உருமாற்றம் பெற்று…
பி.ரம்லி: கலை – கனவு – கலகம்
‘தூய கனவு நொறுங்கி சிதைந்தது கட்டிய மாளிகை கல்லறை ஆனது இருள் சூழும் வருங்காலம் வருவது நிச்சயம், என் ஆன்மா உழல்கிறது வடக்கும் தெற்கும்’ இது பி.ரம்லியின் வரிகள். அவர் இறுதியாய் எழுதிய மலாய் பாடல் வரிகள். அவர் வாழ்வின் இறுதிப்பகுதியின் அலைக்கழிப்பைச் சொல்லும் வரிகள். 1973 இல் தனது 44வது வயதில் இறப்பதற்கு முன்…
வாட்ஜ்டாவும் பச்சை நிற சைக்கிளும்
பல நூற்றாண்டுகளாக, பெண் உரிமைக்கும் அவர்களுக்கான சுதந்திர வெளிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத சவூதி அரேபியா இன்று பல மாற்றங்களை கண்டு வருவதாக ஊடகங்கள் சொல்கின்றன. சவூதி மன்னன் சல்மான் தலைமையில் நடக்கும் மாற்றத்தின் வேகமும் அவை மேற்கத்திய செய்தி ஊடகங்களில் முதல் பக்கச் செய்திகளாகக் காட்டப்படுவதும் எத்தனை நாள் நீடிக்கும் என்ற சந்தேகங்களை பல அரசியல்…
கொல்லப்படும் குறிகள்
3000 வருடங்களுக்கு முன், எகிப்து மன்னராட்சியின் போது, பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு, பண்டைக்கால பாபிருஸ் ஏட்டில் (Papyrus Salt 124) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக டெய்லிமெய்ல் இணையத்தள செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. Deir el Medina-வில் தங்கியிருந்த பானெப் எனும் சிறந்த கட்டிடக்கலை கைவினைஞர் (Paneb) மேல்…
ஊதா நிற தேவதைகள்
1982-இல், எழுத்தாளர் எலிஸ் வால்கர் எழுதிய ‘The Colour Purple’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் 1985-இல் வெளிவந்தது. இந்நாவலை எழுதிய எலிஸ் வால்கர் நாவலுக்கான PULIZER விருது பெற்ற முதல் ஆப்பிரிக்கர்-அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. Jaws, Indiana Jones, Jurassic Park போன்ற பல வெற்றிப்…
ஆண்கள் அழ வேண்டாம்
தான் ஓர் ஆண் என்று மனதார ஏற்றுக் கொண்ட ஒரு இளம் பெண் சமுதாயத்தின் மத்தியில் ஆணாக வாழ, ஆணாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனையும்போது ஏற்படும் சிக்கல்களையும் கொடூரங்களையும் Boys Don’t Cry எனும் படக் கதையின் வழி காட்டியுள்ளார் இயக்குனர் கிம்பர்லி பியர்ஸ்.( Kimberly Pierce). அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா( Nebraska) மாநிலத்தின் தலைநகரான…
லெஸ்பியன் கடவுள்
ஒவ்வொரு மதமும் தங்களின் கடவுளைத், தங்களின் மொழி வழியாகவும் கலாச்சாரத்தின் வழியாகவும், நம்பிக்கை வழியாகவும் தொன்று தொட்டு கட்டிக்காத்து வருகிறது. இப்படி தாங்கள் காட்டும் கடவுளே உண்மையானவர் என்றும் தங்களுடைய வேதங்களே இறைவனின் வார்த்தைகள் என்றும் பிரச்சாரம் செய்தும் வருகின்றது. இவ்வுலகம் பாவம் நிறைந்ததாகவும், இந்தப்பாவம் நிறைந்த உலகத்தைக்காப்பற்ற மதபோதகர்களால் இயலும் என்றும் அடிப்படைவாதம் நம்புகிறது.…
பார்ச்: தரிசும் தாகமும்
கடுமையான ஆணாதிக்க வாழ்க்கை முறையை அனுபவித்து வரும் கிராமத்துப் பெண்கள், அவர்களின் ஆசா பாசங்களை சக தோழிகளுடன் பகிர்ந்து கொண்டு எப்படிச் சிரிக்கவும் முடிகிறது என்று தனக்குள் எழுந்த ஆச்சரிய உந்துதலே இயக்குனர் லீனா யாதவின் பார்ச் திரைப்படத்தின் உருவாக்கம். படத்தின் ஆரம்பத்தில் வரும் எழுத்தோட்டத்தில் இயக்குனர், அவரிடம் தங்களின் வாழ்க்கை குறித்தத் தகவல்களை நேர்மையாகப்…
கவிஞனுக்கான சினிமா
தலைசிறந்த ஒரு கவிஞனைப்பற்றிய முழுநீளப் படம் எடுத்தல் என்பது சில இலக்கிய நியதிகளுக்கும், கவிதைசார்ந்த உள்வாங்கலுக்கும் உட்பட்டே அமைதல் வேண்டும் என்பது பலரது கருத்தாகும். (தீவிர இலக்கியவாதிகள்) குறிப்பிட்ட ஒரு கவிஞரைப் பற்றிய பட ஆக்கங்களில் அவர்தம் வாழ்க்கை வரலாறு என்பது தவிர்க்க முடியாத, அதேநேரம் அவரது படைப்புக்களை திரையில் எவ்விதத்தில் பிரயோகிப்பது என்ற விவாதம்…
ஒசாமா: பசியும் பசிக்காத கடவுளும்
சோவியத் யூனியன் படை எடுப்பு, தாலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சி, பின் லாடன் தலைமையிலான அல்காயிதா தீவிரவாதப் படை, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாத ராணுவப் படை, அமெரிக்கா ராணுவம் தலையீடு போன்றவற்றில் சிக்கித் தவித்த ஆப்கானிஸ்தான், மில்லியன் கணக்கில் கைம்பெண்களையும் அனாதைக் குழந்தைகளையும் 30 ஆண்டுகள் நடந்த போரின் வழி உருவாக்கியுள்ளது. இவர்களின் கணவர்கள்…
முஸ்தாங்: விடுதலையின் கலகக்குரல்
துருக்கியில் வாழும் பெண்கள் தங்களுக்கு உரிமைவேண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர். பெண்களின் மேல் செலுத்தப்படும் ஆதிக்கமும் வன்முறையும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலுறவுக் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கான குரல் மறுக்கப்படுகிறது. 2012 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் துருக்கியில் மட்டும் 90,483 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, சிறுவயதுப் பெண்களிடம் பாலியல்…
கோட்பாடுகளும் கௌரவக் கொலைகளும்!
சட்டப்படி குற்றமாகும் கொலைகளுக்கெல்லாம், சட்டப்படி தண்டனை கிடைக்கிறதா? அல்லது கொலைகள் நியாயப்படுத்தப்பட்டு, சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனை குறைக்கப்படுகிறதா? மண், பொன், பெண், ஆகிய மூன்று பழங்குடிக் கோட்பாடுகளைக் காக்கும் கடமையில் இருப்பதாக நம்பிக்கொண்டு வாழும் குடும்பங்கள், குடும்பத் தலைவர்கள், கௌரவக் கொலை என்ற பெயரில் பெண்கள் சமுதாயத்தை அணுவணுவாகக் கொன்று தின்ற பிறகு, மதம் அல்லது பாரம்பரியத்தைக் காரணம் காட்டிச் செய்த…
தி சர்க்கிள்: மனக் காடுகளும் மதக் கோடுகளும்
கிடக்கும் காடுகளைப் போல் மனிதனின் மனங்களுக்குள் அடர்ந்து கிடக்கும் ஆசைகளும் கனவுகளும் மதக் கோடுகளால் எல்லைப்படுத்தப்படும் போது அதனால் விளையும் எதிர்வினைகள் மதக் குற்றங்களாக விசாரணைக்குள் கைதாகிறது. இந்த மனக்காடுகளைச் சுமந்து கொண்டு சமூகத்தில் நடமாடும் மனிதனின் உணர்வுகள் மதக் கோடுகளால் பரிசீலனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மதத்தின் பேரில் பெண்களின் மேல் பாய்ச்சப்படும் பரிசீலனைகள் ஆண்…