Author: அபிராமி கணேசன்

தாரா: அனைத்து புத்தர்களின் தாய்

மனித வரலாற்றின் பரிணாமத்தில், பெண் தெய்வ வழிபாடு காலங்கள் கடந்தும் மாறாமல் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பெண் தெய்வ வழிபாடு மனித நாகரிகங்கள், கலாச்சாரங்கள் நம்பிக்கை போன்றவற்றைச் சார்ந்த அமைப்புகளை வடிவமைத்ததில் முக்கிய அம்சமாகவே இருந்துள்ளது. வெவ்வேறு பெயர்கள், முகங்கள் சின்னங்களால் அடையாளப்படுத்தப்பட்டாலும், இந்த மரியாதைக்குரிய போற்றுதல் அனைத்தும் பெண் புனிதமானவள் என்ற ஒரு புள்ளியிலே…

குவான் யின்: பேரன்பும் பெண்ணான தெய்வமும்

உருவ வழிபாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களின் பிரதிபலிப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு தாக்கத்தால் உருவ வழிபாடு பலதரப்பட்ட வடிவங்களை எடுத்து, தற்போது 21-ஆம் நூற்றாண்டிலும் மக்களால் தீவிரமான மத வழிபாடாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பல கடவுள் கொள்கை (polytheistic) கொண்ட நாகரிகங்களான மெசொப்பொதாமியா (Mesopotamia),…

சரவாக் பழங்குடியின மக்கள் (பகுதி 2)

சரவாக் பழங்குடிகள் பல்வேறு குறுங்குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்களிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அதிகமாக உள்ளதைக் காண முடிகிறது. இருப்பினும், சரவாக் பழங்குடியின் சிறுபான்மை குழு மக்களின் முக்கியமாக  கவனிக்கப்பட வேண்டிய வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்ற தகவல்கள் மிகவும் அரிதாகவே ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. வாய்மொழி பதிவுகளாகவும் செவிவழிச் செய்திகளாகவும் கிடைக்கும் சில தகவல்களையும் அடிப்படையாகக்…

சரவாக் பழங்குடியின மக்கள்

(பகுதி 1) மனித உரிமை மீதான பார்வை சமீப காலக்கட்டத்தில் அதிகரித்து உள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் மக்களுக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வுகள் பல வழிகளில் போதிக்கப்பட்டு வருகின்றது. மக்களுக்கான மனித உரிமை பாதுக்காக்கப்பட வேண்டி இங்கு நிறைய விவாதங்களும் பேச்சுகளும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. ஆனால், இங்கு முக்கியமாக…

சிசில் ராஜேந்திரா: உள்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படும் கவிஞர்

முன்னோட்டம் மனிதனின் அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமான ஒன்று கருத்து சுதந்திரம். ஒருவர் தன் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த மற்றும் கற்பிக்க எவ்வித தணிக்கையும் தடையும் இல்லாமல்  செயல்பட முடியுமானால் அதுவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எனப்படுகிறது. மலேசியாவில் பெரும்பாலான நாடுகளைப் போலவே பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு வந்தாலும் அவை சில…

பறவையின் உமிழ்நீரில் நனைந்த பணம்

இயற்கை எழில் நிறைந்த மலேசியாவில் சூழலியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமானது. சூழலியல் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகளின் தேடல்கள் அதனால் மனிதனுக்கான நன்மை, தீமைகள், அல்லது நாட்டின் பொருளாதரத்திற்கு அதன் பங்கு என்ற நிலையிலேயே இருக்கும். இயற்கைக்கும் அது சார்ந்த உயிரினங்களுக்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் அவற்றைக் கலைவதற்கான வழிகள் குறித்தும்…

‘மஹ் மேரி’ (Mah Meri) பழங்குடி மக்கள்

பழங்குடியினரின் சிறப்பு அம்சமாக திகழ்வது அவர்கள் வாழும் சுற்றுச் சுழலே ஆகும். அவர்கள் வாழும் இடமானது எப்பொழுதும் பல்லுயிரியம் மிகுந்த வளமான ஒரு பகுதியாக இருக்கும். ஆனால், தற்காலத்தில் அவ்வாறான இடங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து கொண்டே வருகின்றன. பழங்குடி மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய வாழ்க்கை அமைப்புக்கு முற்றிலும் விரோதமான ஒரு சுற்றுச்சூழலை எதிர்…

பறவைகளின் வலசை

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘விசும்பு’ சிறுகதையை வாசித்தபோது பறவைகளின் வேடந்தாங்கல் குறித்த ஆச்சரியம் விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. மலேசியாவில் வேடந்தாங்கலுக்கான சரணாலயங்கள் பல உள்ளன. ஃபிரேசர் மலை அதில் ஒன்றாக இருப்பது பலரும் அறிந்த தகவல்தான். பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்திருக்கும் பிரேசர் மலை (Fraser’s Hill) 1950ஆம் ஆண்டு தொடங்கியே பறவைகள் சரணாலயமாக அடையாளப்…

மலேசியாவில் செம்பனை பயிரிடலும் அதன் விளைவுகளும்

விவசாயம் உலகம் முழுதும் இருக்கும் மனிதனின் உணவு தேவைக்கும் பிழைப்புக்கும் வழி செய்கிறது. இருப்பினும், கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளுக்கு அப்பால் விவசாயத்தினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாயத்தின் துலக்கத்தினால் விரும்பிய முன்னேற்றத்தை நாம் உண்மையிலேயே அடைந்துள்ளோமா என சமீப காலங்களில் பல மானுடவியலாளர்களும் வரலாற்றாசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக 2015ஆம் ஆண்டு வரலாற்றாசிரியரான ‘யுவல்…

தமிழ் எங்கள் உயிர் (பாகம் 2)

‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்குச் சிறுகச் சிறுக பணம் சேரத் தொடங்கியது. இந்நிதிக்கு மேலும் அதிக அளவில் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றெண்ணி தமிழ் முரசு பத்திரிகையில் இது தொடர்பாகப் பல வகையில் விளம்பரங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. “உலகோர் போற்றும் உயர் தமிழ் சீரிளமை மாறாத செந்தமிழ் தமிழர்க்கு உயிர் தாய்மொழி தமிழ்…

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்

மலாயாவில் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர்) மொழிசார் வேர்களை ஆராயும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் இரு விடயங்கள்; (1) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை; (2) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை நூலகம். மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவும் அதன் நூலகமும் உருவாவதில் பலரும் பலவகைகளில் செயல்பட்டிருந்தாலும்கூட அக்காலப்பகுதியில் முதன்மை ஊடகமாக…

“குறைந்தபட்சம் பதற்றமாவது கொள்ளுங்கள் – கிரெட்டா”

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொரு சவாலை மனிதன் எதிர்கொண்டு, கடந்து வருவது எதார்த்தம். ஆரம்பத்தில் மிருகங்களிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் தன்னை தற்காத்து கொள்வது மனிதனுக்கு பெரும் சவாலாக இருந்தது, பின் ஒரு சமூகமாகவும் நாடாகவும் மாறியபோது போர், சுதந்திரம், ஏற்ற தாழ்வு, இன வேறுபாடு, வறுமை, அடக்குமுறை, தொழில்நுட்ப தேவை, மருத்துவத்தில் மேம்பாடு, வளங்களின் பற்றாக்குறை போன்ற பல…

வனத்தின் குரல்

ஆதியிலிருந்து இன்றுவரை மனிதனுடைய வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் இயற்கையைக் கொண்டே வாழ கற்றுக் கொண்டுள்ளான். இயற்கையில் இருந்தே மனிதன் தன் அடிப்படைத் தேவைகளாகிய நிலம், காற்று, நீர், உணவு, உடை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான். இது மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும். இப்படியாக எல்லா இடங்களிலும் உயிர்கள் அனைத்தையும் இயற்கை ஒன்றிணைக்கிறது. இரத்தமும்…

புருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம்

உலகின் மூன்றாவது பெரிய தீவு போர்னியோ தீவு. கடும் காடு அடர்ந்த போர்னியோ தீவை, தெற்கே 73 விழுக்காடு இந்தோனேசியாவும், மத்தியில் 26 விழுக்காடு மலேசியாவும் (சபா, சரவாக் மாநிலங்கள்), வடக்கே 1 விழுக்காடு புருணையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளன. இப்பிரிவுகளுக்கு உட்பட்டு போர்னியோ காடு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களும் டச்சு ஆட்சியாளர்களும் அத்தீவுக்கு…

கே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல்

பரந்த இவ்வுலகத்தில் பலவிதமான மக்கள் மொழி, இனம், மதம், கலாச்சாரம், பழக்கவழக்கம் என்று பிளவுப்பட்டுள்ளனர். இவையனைத்தும் ஆதியிலிருந்து உருவாகியவை அல்ல. தொடக்கத்தில் மனிதன், மிருகம், இயற்கை இம்மூன்றைக் கொண்டு இவ்வுலகம் இயங்கியது. நாளடைவில் மனிதன் பரிணாம வளர்ச்சியை நோக்கி செல்லும்போது தனக்கான தேவைகள் என்னவென்று உணரத் தொடங்குகிறான். அதன்பின், மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்டதுதான் மொழி,…