Category: அறிவிப்பு

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கான ‘யாழ்’ சிறுகதைப் போட்டி – நாள் நீட்டிப்பு

மலேசியா முழுவதும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதை போட்டியை யாழ் பதிப்பகம் ஏற்று நடத்துவதை அறிவீர்கள். இப்போட்டிக்கான இறுதி நாள் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 28.2.2019 திகதிக்குள் ஆசிரியர்கள் தங்கள் சிறுகதைகளை yazlstory@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.  ‘யாழ்’ சிறுகதைப் போட்டி விதிமுறைகளும் விளக்கங்களும். 1.யாழ் சிறுகதைப் போட்டியில் மலேசியாவில் தற்போது…

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கான ‘யாழ்’ சிறுகதைப் போட்டி

யாழ் பதிப்பகம் திட்டமிட்டபடி 2019-ஆம் ஆண்டு மலேசிய ஆசிரியர்களுக்கான தமிழ் சிறுகதைப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளது. இப்போட்டியின் முன் ஆயத்தமாக கடந்த 18/11/2019 – இல் சிறுகதைப் பட்டறை ஒன்றும் எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை மூலம் நடத்தப்பட்டது. இப்பட்டறையில் பல ஆசிரியர்கள் கலந்து பலன் அடைந்தனர்.   ‘யாழ்’ சிறுகதைப் போட்டி விதிமுறைகளும்…

கலை இலக்கிய விழா 10

இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கான ஏற்பாடுகள் மிக உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படமும் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் ‘கலை இலக்கிய விழா 10’ மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்துக்கான மேலும் ஒரு படிக்கல்லாகத்…

மதுரையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்

மலேசிய இலக்கியத்தைப் பரவலான கவனத்திற்குக் கொண்டுச் செல்லும் முயற்சியில் யாவரும் பதிப்பக ஏற்பாட்டில் மூன்று மலேசிய  நூல்களின் அறிமுக விழா 21.10.2018 (ஞாயிறு) பிரேம் நிவாஸ் மஹாலில் நடைபெறுகிறது. மா.சண்முகசிவாவின் சிறுகதை நூல் குறித்து எழுத்தாளர் இமையம், விஜயலட்சுமி மொழிப்பெயர்ப்பில் வெளிவரும் கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகள் குறித்து பவா. செல்லதுரை மற்றும் ம.நவீன் தொகுத்த மீண்டு நிலைத்த…

வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்ட முடிவு

வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டம் 2017 இல் தொடங்கியது. எழுத்தாளர்களைக் குறுநாவல் எழுதவைத்து அதனை செறிவாக்கம் செய்து நூலாகப் பதிப்பிக்க வேண்டும் என்பதே வல்லினம் குழுவின் அடிப்படையான நோக்கம். இது போட்டியல்ல. சோர்வடைந்திருக்கும் மலேசிய நாவல் இலக்கிய வளர்ச்சியைப் புத்தாக்கம் பெற வைப்பதே வல்லினம் குழுவின் அடிப்படை நோக்கம். இந்தக் குறுநாவல் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்களுக்கு…

சென்னையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்

‘யாவரும்’  தொடர்ந்து நவீன இலக்கியச் சூழலில் கவனம் பெற்றுவரும் பதிப்பகம். தூயனின் இருமுனை, சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை, எம்.கே.குமாரின் 5.12 P.M என இப்பதிப்பகம் வெளியிட்ட சிறுகதை நூல்கள் விருதுகள் மூலமும் விமர்சகர்கள் மூலமும் பரந்த கவனத்தைப் பெற்றன. வல்லினம் இவ்வருடம் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து 10 நூல்களைப் பதிப்பிக்கிறது. இவ்விரு பதிப்பகங்களும் இணைந்து வெளியிடும்…

இலக்கிய விழாவில் சு.வேணுகோபால்.

வழக்கம் போலவே இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கும் தமிழகத்தில் இருந்து முக்கியப் படைப்பாளிகள் இருவர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சு.வேணுகோபால். நுண்வெளி கிரகணங்கள், கூந்தப்பனை, ஆட்டம்,  நிலம் எனும் நல்லாள், பால்கனிகள், வலசை போன்ற நாவல்கள் – வெண்ணிலை, ஒரு துளி துயரம், களவு போகும் புரவிகள், பூமிக்குள் ஓடுகிறது நதி எனும் சிறுகதை தொகுப்புகள் –…

யாழ் பதிப்பகத்தின் மலேசிய ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதை போட்டி – 2018

மலேசிய கல்வி பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களை பதிப்பித்து வருவதோடு அரசாங்க  தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்பு திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசிய தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில்  தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சி…

ஏன் சடக்கு?

‘சடக்கு’ இணையத்தளம் மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் முகத்தை படங்கள், துண்டு பிரசுரங்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் வாயிலாக ஆவணப்படுத்தி பொது பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது ஒருவகை புரிதல். ஆவணப்படுத்துதல் எனும் பதத்தைவிட  காப்பகப்படுத்துதல் எனும் பதம்தான் இவ்விணையத்தள உருவாக்கத்திற்கு மிகப் பொருத்தமான பதமாக இருக்கும். ஆவணப்படுத்துதல் என்பது பயன்மதிப்புமிக்க…

வல்லினத்தின் குறுநாவல் பதிப்புத்திட்டம் நாள் நீட்டிப்பு

மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்குத் தனது பங்களிப்பைத் தொடர்ந்து ஆற்றிவரும் வல்லினம் இவ்வருடம் குறுநாவல் பதிப்புத்திட்டத்தில் காலக்கேடு 28 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத்திட்டத்தின் மூலம்: பதிப்பிக்கப்பட்ட குறுநாவல்கள் உலகம் முழுதும் உள்ள தமிழ் வாசகர்கள் மத்தியில் சென்று சேரும். நூலாக்கப்பட்ட குறுநாவல்களை ஒட்டிய தொடர் கலந்துரையாடல்கள் நாடு முழுவதும்…

விஷ்ணுபுரம் விருது 2017

2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது. 16 ஆம்தேதி காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 ஆம்தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி…

கலை இலக்கிய விழா 9

வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…

வல்லினம் போட்டி படைப்பு முடிவுகள்

வாசகர்களும் எழுத்தாளர்களும் வழக்கமாக வல்லினத்துக்கு அனுப்பும் படைப்புகளையே ஒரு போட்டியாக நடத்தி, அதன் வழி சிறந்த படைப்புகளை வெளிக்கொணரலாம் என்ற திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கம்பாரில், நண்பரும் வல்லினம் குழு எழுத்தாளருமான கங்காதுரையின் வீட்டில் நடந்த சந்திப்பில் முடிவானது. வல்லினம் போட்டி படைப்புகள் குறித்த அறிவிப்பு வந்தது முதலே வாசகர்களிடம் நல்ல வரவேற்பு…

சிங்கை ஆளுமைகள் பற்றிய ஆவணப்பட வெளியீடும் இலக்கியச் சொற்பொழிவும்

சிங்கப்பூரில் தமிழ்ச்சூழலில் இயங்கும் மூத்த எழுத்தாளர்கள் பி.கிருஷ்ணன், இராம கண்ணபிரான், மா.இளங்கண்ணன் ஆகியோரின் ஆவணப்படங்களைச் சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆதரவில் வல்லினம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் சிறப்பு வருகை புரிகின்றனர். ஆவணப்பட வெளியீட்டுடன் பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியச் சொற்பொழிவும் இடம்பெறும் இந்நிகழ்ச்சி…