Tag: தாரா

தாரா: அனைத்து புத்தர்களின் தாய்

மனித வரலாற்றின் பரிணாமத்தில், பெண் தெய்வ வழிபாடு காலங்கள் கடந்தும் மாறாமல் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பெண் தெய்வ வழிபாடு மனித நாகரிகங்கள், கலாச்சாரங்கள் நம்பிக்கை போன்றவற்றைச் சார்ந்த அமைப்புகளை வடிவமைத்ததில் முக்கிய அம்சமாகவே இருந்துள்ளது. வெவ்வேறு பெயர்கள், முகங்கள் சின்னங்களால் அடையாளப்படுத்தப்பட்டாலும், இந்த மரியாதைக்குரிய போற்றுதல் அனைத்தும் பெண் புனிதமானவள் என்ற ஒரு புள்ளியிலே…

அத்வைத்த கதைகளை நினைவுறுத்தும் தாரா

(ஜனவரி 28 சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூர் வாசகர் வட்டம் முன்னெடுத்த நடந்த தாரா நாவல் வெளியீட்டில் எழுத்தாளர் மஹேஷ் குமார் பேசிய உரையின் எழுத்து வடிவம்,) நவீனின் ‘தாரா’ நாவல் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. இது போன்ற வாசிப்பனுபவங்கள் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தவையே. மறு வாசிப்பில் முற்றிலும் வேறொரு அனுபவத்தையும் கொடுக்கலாம்.  அத்வைதக்…

தாராவின் அரசியல்

பொதுவாகவே எனக்கு தமிழ்நாட்டு நாவல்களை வாசிப்பதைக் காட்டிலும் மலேசிய நாவல்கள் வாசிப்பது மிகப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நாவல்களில் காட்டப்படுகின்ற வாழ்க்கைக்கு நெருக்கமான அல்லது பழகிவிட்ட மலேசியச் சூழல்கள், மலேசிய எழுத்தாளர்களின் எளிய வாசிப்புக்கு உகந்த எழுத்து நடை, பலத்தரப்படாத வாசிப்பு நிலை, வெகுஜன இரசனையை எதிர்பார்க்கும் வாசிப்பு மனம் என எதை…

தாரா: ஓர் அறச்சீற்றம்

ம.நவீனுடைய ‘தாரா’ நாவலை வாசித்து முடித்தபின் எனக்கு முதலில் தோன்றியது இந்த உணர்வுதான். ‘தாரா ஓர் அறச்சீற்றம்’ நாவலில் வரும் பழங்குடிகளின் தலைவனின் கூற்றான,“தலைவனிடம் அறம் இல்லாததில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அதுவே அக்குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என்பதை மறவாதே. உன் குலப்…

மலேசியாவின் இரு சமகால நாவல்கள்: மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீன் & அ. பாண்டியன்

2023 இல் மலேசியாவில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரண்டு நாவல்களான ‘தாரா’ & ‘கரிப்புத் துளிகள்’ குறித்த கலந்துரையாடல். மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீனையும், அ. பாண்டியனையும் நேரில் சந்திக்க வாருங்கள். எழுத்தாளர்கள் குறிப்பு: ம.நவீன் ம.நவீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை…

பச்சை நாயகி

நேபாள் என்றாலே எனக்குப் புத்தர்தான் நினைவுக்கு வருவார். நேபாளத்தில் புத்தர் பிறந்த இடம் லும்பினி. லும்பினி அதற்கு மட்டும் பிரபலம் அல்ல. பல நாட்டு புத்த நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பௌத்த மடாலயங்கள் லும்பினியில் உள்ளன. அங்குச் சென்றால், ஒவ்வொரு நாட்டிலும் பௌத்த மத வழிபாடுகள் எவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன என்பதைக் காணலாம். பெரும்பாலோர் புத்தர் வழிபாடு…