Tag: பெருமாள்முருகன்

”விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவதும் விழுமிய மீறல்களைக் கவனம் எடுத்துப் பரிசீலிப்பதும் நவீன இலக்கியம்”

உலக இலக்கிய வாசகர்கள் அறிந்து வைத்துள்ள தமிழ் எழுத்தாளர்களில் பெருமாள்முருகன் குறிப்பிடத்தக்கவர். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் கண்டுள்ளன. போலிஷ், ஜெர்மன், செக் போன்ற உலக மொழிகளிலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இவரது புனைவுகள் மொழியாக்கம் கண்டு வாசிக்கப்படுகின்றன. எழுத்தாளராக மட்டுமல்லாது கவிஞராகவும் ஆய்வறிஞராகவும் அறியப்படும் பெருமாள்முருகனிடம்…

ஆலவாயன் – அர்த்தநாரி: இரு நாவல்களில் ஒரு பார்வை

குடியானவர்களின் வாழ்க்கை முறையை ஆங்கிலேயர் ஆட்சி காலப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள கதை ‘ஆலவாயன்’. காளி, பொன்னா, வல்லாயி, சிராயி, முத்து, வெங்காயி, நல்லையன் என ஒவ்வொருவரும் சேர்ந்து கதையை நகர்த்தியுள்ளார்கள். நாவலின் தொடக்கத்தில் காளியின் தற்கொலை மிரட்டும் தொனியில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டது போலவே நாவலின் பல பகுதிகளில் சித்தரிப்புகள் ஒரு விதப் பதற்றத்தைக் கொடுக்கக்கூடியவை. காளியின்…

மனங்களின் நகர்வு மாதொருபாகன்

‘மாதொருபாகன்’ நாவல் பிறழ் உறவு கொண்ட மனித மனத்தைக் கூர்மையாக ஆராய்கிறது. பிறழ் உறவு சமூகத்தின் நெறி முறைகள், மரபுகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது.  எது சரி, எது தவறு என்ற விவாதத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் நம்மை நாமே நம்முடைய சொந்த நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் மறுபரிசீலனைச்…

தற்காலிக நிழல்

நவீன தமிழர் வாழ்வில் மிகப் பெரிய தக்கத்தை ஏற்படுத்திய ஊடகமாக திரைப்படத்துறை விளங்குகின்றது. மேடை நடகம், தெருக்கூத்து போன்ற கலைகளை அடிப்படையாக கொண்டு தமிழ் திரைப்படத்துறை உருவானாலும், அது தன் கவர்ச்சிகரமான ஈர்ப்பால் அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கையும் விரைவில் பெற்று தமிழர் சிந்தனை, பண்பாடு, அரசியல் என பலவற்றிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கி…

நாய், பூனை மற்றும் மனிதன்

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் ‘வேல்’ சிறுகதைத் தொகுப்பு 2024-இல் வெளியிடப்பட்ட நூலாகும். இத்தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன. தொகுப்பில் உள்ள கதைகள் இதற்கு முன்னறே இதழ்களில் வெளியாகி அதன்பின் காலச்சுவடு பதிப்பகத்தின் வழி நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகள் ஒரு பொருள் (பாடுபொருள், பாத்திரங்கள், கதை சொல்லும்…

போண்டு – சமூக விலங்குகளின் உளவியல் தொகுப்பு

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதனின் விலங்கியல் இயல்புகளைச் செல்லப்பிராணிகளைக் கொண்டு விவரிக்க இயலும் முயற்சிதான் ‘போண்டு’ சிறுகதை தொகுப்பு. பெருமாள் முருகனின் ‘வேல்’ எனும் சிறுகதை தொகுப்பைத் தொடர்ந்து,  ‘போண்டு’  பதினொன்று சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளியாகி உள்ளது. வளர்ப்பு பிராணிகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தாலும் அதை வளர்க்கும் மனித விலங்கினைப் பற்றிய கதைகளாகவே என்னால் இக்கதைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனிதன் என்பவன்…

காலமாற்றங்களின் கதை

கொரோனா காலகட்டத்தைப் பின்புலமாக கொண்ட ‘நெடுநேரம்’ நாவலை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். முந்தைய தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை எனும் இரு வேறு காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் காதலையும் அதன் மாற்றங்களையும், வாழ்வின் யதார்த்தத்தையும் பேசுவதோடு மட்டுமில்லாமல் எல்லா காலகட்டத்திலும் கருப்பு, வெள்ளை என இரண்டும் இணைந்த சாம்பல் நிற அகம் பொருந்திய மனிதர்களை…