“அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை”

மருத்துவர் மா.சண்முகசிவா மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர். மலேசியாவில் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. 1987 – இல் ‘அகம்’ எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் மூலமாக படைப்பிலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். மலேசிய இலக்கியத்தின் தரமும் படைப்பாளர்கள் தரமும் உயர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இவரிடத்தில் மேலோங்கி இருந்தது. இவருடைய தொடர் முயற்சி இன்றைய…

முன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை

இலக்கிய படைப்புகள் இருவழி தொடர்புள்ளவை. எழுத்தாளனின் உள்ளத்தில் இருந்து விரியும் கற்பனையும் அனுபவமும் வாசகனுக்கு மெய்நிகர் வாழ்க்கை அனுபவமாகிறது. இலக்கிய பிரதியின் வழியே படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் அந்தரங்க உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலின் வழி வாசகன், எழுத்தாளன் காட்டும் அனுபங்களை மென்மேலும் விரித்துக் கொள்ள முடிகிறது. படைப்பிலிருந்து பெரும் அனுபவங்களும் திறப்புகளும் வாசகனின் வாழ்க்கை…

“எல்லா துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது”

மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் தீவிரத் தன்மையுடன் இயங்கி வருபவர் எழுத்தாளர் அ.பாண்டியன். இடைநிலைப்பள்ளியின் ஆசிரியரான அ.பாண்டியன் வல்லினம் இதழின் பொறுப்பாசிரியரும் கூட. வல்லினம் அகப்பக்கத்தில் தொடர்ந்து பல முக்கியமான கட்டுரைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் விமர்சனத் தன்மையைக் கொண்டவை. அவரது முதல் நூலான ‘அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ தேசிய…

“மலேசியாவில் பெண்ணியம் சார்ந்த தமிழ் சினிமாவை நான் பார்த்ததில்லை.”

வல்லினம் ஆசிரியர் குழுவில் ஒருவரான இரா.சரவணதீர்த்தா ஆரம்பக் காலக்கட்டத்தில் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தவர். நாட்டின் தமிழ்ப் பத்திரிக்கைகளில் நிருபராக பணியாற்றியவர். தொடர்ந்து வல்லினம் மேற்கொண்டு வரும் கலை, இலக்கியம், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தீவிரத் தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருப்பவர். இவரது உலக சினிமா குறித்த கட்டுரைகள் வல்லினத்தில் தொடராக வெளி வந்தவை. அவை பலராலும் விரும்பி…

முன்னுரை: கலையின் ஒளிக்குரல்

வல்லினத்தில் தொடர்ந்து வெளிவந்த உலக சினிமா பற்றிய கட்டுரைகள் ‘ஊதா நிறத் தேவதைகள்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. இவை சினிமாவை விமர்சித்துப் பேசும் கட்டுரைகள் அல்ல. சினிமாவின் நுட்பம் பற்றியோ கலைவடிவம் பற்றியோ அதன் ஒளிமொழி குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. நான் திரைக்கதைக்குள் ஒளிந்துள்ள மானுடத்தைக் கவனிப்பவன். அவ்வகையில் இந்தக் கட்டுரைகள்…

வாளாக மாறும் அளவுகோல்

மலேசியாவில் பன்னெடுங்காலமாக இலக்கியத்தில் இயங்கிகொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களிடையே சுயத்தணிக்கை மனப்பான்மை அதிகம் இருப்பதை நூலகராக நான் பல தருணங்களில் அவதானித்ததுண்டு. பெரும்பாலும் குடும்பம், தோட்டம், பாலியம், காமம் என மிகச்சுருங்கிய களங்களில் அவர்கள் சிறுகதைகள் உருவாவதைப் பார்த்துள்ளேன். அதிகாரத்துக்கு எதிராகவோ அரசியல் ஒடுக்குமுறைகளின் எதிர்ப்புக்குரலாகவோ இனரீதியான பாராபட்சங்களுக்கு எதிர்வினையாகவோ இல்லாமல் தங்கள் மனதுக்குள் இருக்கும் ஒரு…

“இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது.”

விஜயலட்சுமி மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகத்தின் நூலகவியலாளர். நவீன தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். நல்ல பயனான கட்டுரைகளைத் தந்தவர். குறிப்பாக மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடம் காணப்படும் அறிவுத்துறை மற்றும் பதிப்புத்துறை சார்ந்த தெளிவின்மையைக் கலைவதற்கான முயற்சியாக ‘துணைக்கால்’ எனும் நூலை வெளியிட்டவர். அந்நூல் பதிப்புத்துறை மற்றும் அறிவுத்துறை சார்ந்த விடயங்களைத் தெளிவுபடுத்தும்…

“எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.”

ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து எவ்வித சமரசமும் இல்லாமதல் நவீன இலக்கியத்தில் தீவிரத்தன்மையுடன்…

முன்னுரை: காற்றில் அலையும் ஓசை

மலேசியாவில் வெளிவரும்  ‘மன்னன்’ மாத இதழுக்கு நேர்காணல்கள் செய்யத் தொடங்கியது 1999களில். அது வெகுசன இதழ். எனவே நேர்காணல்களின் நோக்கம் வாசகர்களை உற்சாகப்படுத்துவதாய் இருந்தது. எனவே சமகாலத்தைய நிகழ்வுகளின், சலசலப்புகளின் அடிப்படையில் நேர்காணல்களில் கேள்விகளை அமைத்திருப்பேன். ‘காதல்’ இலக்கிய இதழ் தொடங்கப்பட்டபோது அதில் மாதம் ஓர் எழுத்தாளரின் நேர்காணலைப் பிரசுரிப்பதென முடிவானதும், அப்பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன்.…

சாளரங்களைத் திறந்து வைக்கும் கலைஞன்

நவீனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’ கதைகளைப் படித்ததும் அவரின் முதன் முதல் எழுதப்பட்ட இரண்டு மூன்று கதைகள் எவை என்றுதான் பார்த்தேன். இலக்கியம் குறித்த பெரிய புரிதல் இல்லாமல், வாசிப்பும் இல்லாமல், ஆசையின் பாற்பட்டோ, சொல்லவேண்டும் என்ற உந்திப்பினாலோ அல்லது எழுத்தின் மீதான ஆர்வத்தாலோ எழுதப்பட்ட கதைகள் எனக்கு முக்கியமானவை. அதிலே சுயம்புவான…

அரூப முதலையின் கால் தடங்கள்

தமிழில், வேறெந்த இலக்கிய வடிவையும்விட உயரிய இடத்தை சிறுகதைகள் அடைந்திருக்கின்றன எனலாம். நூற்றாண்டு கால தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் பேசப்படாத பொருளோ, சோதிக்கப்படாத வடிவமோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு முக்கியமான பரிச்சார்த்த முயற்சிகள் பலவும் இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிறுகதைகளில் அழுந்தத் தடம் பதித்த முன்னோடிகள் பலரும் இயங்கிய களத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே, அதீத பொறுப்பையும்,…