விமர்சனம்

மண்டை ஓடி: மண்ணின் மணத்தை நிறைத்திருக்கும் கதைகள்

11873758_1041742255838852_3368109114859042634_nஓர் எழுத்தாளனாகப் பிறர் நூலை விமர்சனம் செய்யும் அளவுக்குத் தகுதி கொண்டிருக்கவில்லையென்றே நம்புகின்றேன். இதுவரையிலும் சிறுகதை இலக்கியம் என் கைக்கு அடங்காதொரு கலையாக இருக்கும் பட்சத்தில் ம.நவீனின் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பை ஒரு வாசகனின் பார்வையிலிருந்து விமர்சனம் செய்வது சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.

Continue reading

நவீனின் மலேசியக் கவிதைகள்: உலகத் தமிழினத்தின் ரகசியம்

tamizhavanம.நவீன் என்ற பெயரில் மலேசிய இலக்கியச் சூழலில் புதிய இலக்கியச் செயல்பாடுகளில், தொடர்புபடுத்தி வருபவரும், இளைய வயதும், ஆழ்ந்த இலக்கிய அக்கரையும் கொண்டவரும் ஆன கவிஞரின் அபூர்வமான கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் வாய்த்தது.

Continue reading

லதா சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள் (5)

லதா

லதா

தமிழகத்தில் ஒருமாதம் தங்கியிருந்த காலம் எனக்கு முக்கியமானது. அக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருந்த முக்கிய வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வதில் முழு ஈடுபாடு காட்டினேன். அழைத்துச்செல்லும் நண்பர்களிடம் வைத்த கட்டளை ஒன்றுதான். தமிழகத்தில் சராசரி பக்தன் ஒருவன் எவ்வகையில் மூலஸ்தானத்தை அடைய அவகாசம் எடுக்கிறானோ அந்த வழிதான் எனக்கு வேண்டும் என்றேன். மலேசியாவிலிருந்து தமிழகக் கோயில்களுக்குச் செல்பவர்கள் ‘எக்ஸ்பிரஸ் பாதை’ என தனியாக ஒதுக்கப்பட்ட பாதைகளில் கூடுதலான கட்டணம் செலுத்தி வழிபட்ட சிறப்புகளையெல்லாம் வாயில் எச்சில் ஒழுகச் சொல்வதைக் கேட்டுள்ளேன். நான் செல்வது கடவுளை அறிய அல்ல; அங்குள்ள மனிதர்களை அறிய  என்பதில் கவனமாகவே இருந்தேன். வழிபாட்டின் இறுதி இடமாக திருப்பதிக்கும் சென்று யாரோ கால்மட்டில் படுத்துக்கிடந்து மலேசியா வந்து சேர்ந்தேன்.

Continue reading

மாதங்கி சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள் (4)

mathangiஅண்மையில் ‘எங் கதெ’ என்ற இமையத்தின் நாவல் குறித்து நண்பர்கள் பலரிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். நாவலின் உள்ளடகத்தில் எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தாலும் என்னை வியக்க வைத்தது அவரது மொழி. மிகக் கடினமான உளவியல் இறுக்கங்களை ஒரு டால்பின் மீன் போல கடலில் சலனத்தை படரவிட்டு தாவித்தாவி கடந்துவிடுகிறார். அது இலக்கியத்திற்குத் தேவையான மொழி.

Continue reading

கடிதம் : கவிதையை வாசித்தல்…

வணக்கம் நவீன். நலமா?

தீபாவளி வாழ்த்துகள்.

இதற்கு முன் வல்லினத்திற்கு ஒரு கவிதை அனுப்பி அது குறித்து மெயிலில் உரையாடி இருக்கிறோம். அதன் பின் சிங்கை வரும் போது சந்திக்க நினைத்தேன், பணிச்சூழல் சந்திக்க வாய்க்கவில்லை.தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது உங்கள் பக்கம் வழி ஒரு பக்க உரையாடலை நிகழ்த்தி வருபவன்,

Continue reading

கமலாதேவி அரவிந்தன் படைப்புலகம் : இறுதி பாகம்

last nedகமலாதேவி அரவிந்தன் சிறுகதை தொகுப்புகள் மூன்றையும் வாசித்த அளவில் அதன் தன்மைகளை இவ்வாறு பட்டியலிடலாம்.

Continue reading

கமலாதேவி அரவிந்தன்: (பாகம் 2)

kamalamவணிக எழுத்தும் தீவிர எழுத்தும்

சிங்கப்பூரின் சமகால சிறுகதைகள் குறித்து எழுதத்தொடங்கியதிலிருந்து பல்வேறு விதமான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில, குறிப்பிட்ட படைப்பாளியின் மேல் தங்களுக்கு இருக்கும் சுய வெறுப்பின் காரணமாகத் தன்னையும் அந்த விமர்சனத்தின் பங்காளியாக இணைத்துக்கொள்ள முயல்பவை. பொதுவாக இதுபோன்ற குரல்களுக்கு நான் செவி கொடுப்பதில்லை. விமர்சனம் முன்முடிவுகளுடன் உருவாவதிலும் சுய வெறுப்பின் வசைகளுக்கான மாற்று வடிவாகவும் தனது அறிவுஜீவிதத்தைக் காட்டும் தளமாகவும் இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை. விமர்சனம் என்பது தீர்ப்புகள் அல்ல. சக வாசகனுடன் விவாதிக்கும் ஒரு முறை. இந்த விவாதங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கியும் முரண்பட்டும் ஒரு சமூகத்தின் முன் திரட்டப்பட்ட கருத்துகளாக எப்போதும் இருக்கின்றன ; நிலைப்பதில்லை. இன்னொரு காலத்தில் இன்னொரு விமர்சகனால் அது மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட்டு புதிய முறையில் ஒரு படைப்பு அணுகப்படலாம்.

Continue reading

கமலாதேவி அரவிந்தான் : சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் (3)

kamaladevi_newஇலக்கியமும் வாசிப்பும்

பலகாலமாக எழுதி வரும் அல்லது வாசித்து வரும் நண்பர்களிடம் நான் சில குழப்பங்களைக் கவனித்ததுண்டு. ஓர் இலக்கிய வாசிப்பு எப்படி நிகழ்கிறது; அது பொதுவான பிற வாசிப்பிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் இல்லாமலேயே பலகாலமாக தங்கள் வாசிப்புப் பணியை மேற்கொள்வர். ‘ஒரு பிரதியில் உள்ள சொற்றொடர்களை வாசித்தால் புரிகிறது’ எனும் ரீதியில் அவர்கள் பதில்கள் இருக்கும்.

Continue reading

ஷாநவாஸ் : சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் (2)

மலேசியா – சிங்கப்பூரின் புனைவு எழுத்துக்கான தளம்

ஷாநவாஸ்

ஷாநவாஸ்

மலேசிய சிங்கப்பூர் சூழலில் பெரும்பாலான சிறுகதைகள் ஞாயிறு நாளிதழ்களில்தான் பிரசுரிக்கப்படுகின்றன. சில சமயங்களில் வானொலியிலும் ஒலிபரப்பப்படுவதுண்டு. இந்த இரு ஊடகங்களுக்கும் பொதுவான சில கட்டுபாடுகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட வாழ்வையும் மொழியையும் மட்டுமே இவ்விரு ஊடகங்களிலும் எழுதும் எழுத்தாளர்கள் கையாள வேண்டும். பொது புத்திக்கும் பொது நீதிக்கும் மாற்றான ஒரு குரல் எப்போதுமே ஆபத்தாகக் கருதப்பட்டு தணிகைச் செய்யப்படவும் முற்றாக நிராகரிக்கப்படவும் செய்கின்றன. போட்டிகளுக்கு அனுப்பப்படும் சிறுகதைகளுக்கும் இந்த நிலைதான். எனவே நீதி நெறிகளை சம்பவங்கள் மூலம் விரிவாக்கும் எழுத்துமுறையே இங்கு இலக்கியமாகிவிட்டது.

Continue reading

அழகு நிலா :சிங்கப்பூரின் சமகாலப் படைப்புகள் (1)

azaku nilaஇன்றைய விமர்சன சூழல்

மலேசியச் சூழலில் சமகாலத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து நான் எனது அபிப்பிராயங்களை அவ்வப்போது  கூறியே வருகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளை மட்டுமே பிடிவாதமாக மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கும் சூழலில், பிறர் படைப்புகள் குறித்து பேசுவதில் பகையைச் சம்பாதித்ததுதான் அதிகம் என்றாலும்  எனக்கு அது முக்கியமான பணியாகவே தெரிகிறது. பொதுவாகவே மலேசியச் சூழலில் சமகாலப் படைப்புக் குறித்த எவ்வித உரையாடலும் நடப்பதில்லை. நூல் வெளியீடுகளில் ‘முகஸ்துதிக்கு’ நாகரீகமான பெயராக நூல் விமர்சனம் என்ற பகுதியை இணைத்துவிடுகிறார்கள்.  யார் மிக அதிகமாக ‘பட்டர்’ பூசுவார்கள் என்று கணக்கெடுப்பெல்லாம் எடுத்து, அதில் அதிகப் புள்ளிகள் பெறுபவரே நூல் விமர்சகராக பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Continue reading