கட்டுரை/பத்தி

நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு!

டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். “சித்தர் மார்க்கத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த தாங்கள் இப்போது பக்தி மார்க்கத்தைப் பின் பற்றுகிறீர்கள்… ஏன்?” என் கேள்விக்கு டாக்டர் ஜெயபாரதி எளிதான ஒரு பதிலைச் சொன்னார். “சித்தர் மார்க்கம் முடிவற்றது. அறிவின் தளத்தில் இயங்கும் அதில் எல்லைகள் இல்லை. பக்தி மார்க்கம் அப்படி அல்ல. ‘எல்லாம் சிவம்’ எனச்சொல்லி அமர்ந்துவிடலாம். அதுவே அதன் எல்லை.”

‘புயலிலே ஒரு தோணி’யில் மிக முக்கியமான பகுதி அதில் நடக்கும் விவாதங்கள். அதில், ப.சிங்காரம் பின்வருமாறு எழுதியிருப்பார். “கற்பனையின்றேல் வாழ்க்கையில்லை; கொள்கையில்லை; சமுதாயமில்லை. கற்பு என்ற கற்பனை இன்றேல் குடும்ப வாழ்க்கை – அதாவது லட்சியக் குடும்ப வாழ்க்கை ஏது? அடிப்படை அறிவின் வழி எது? அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு அறிவுக்கும் வெவ்வேறு உண்மை தென்படும். அவரவர் அறிவின் போக்கில் சென்றால் குழப்பமும் அதன் விளைவாக அழிவுமே கிட்டும். ஆகவேதான் கற்பனை முடிவு – அது அறிவுக்கு வரம்பு.”
Continue reading

வல்லினம் வகுப்புகள்

இன்று (14.04.2012) வல்லினம் குழுவினரின் சந்திப்பு கோலாலம்பூரில் நடைப்பெற்றது. நான் (நவீன்), சிவா பெரியண்ணன், பாலமுருகன், மணிமொழி, தயாஜி,யோகி, பூங்குழலி, சந்துரு, ராஜம் ரஞ்சனி, , நித்தியா, தினேஸ்வரி இவர்களோடு வல்லினம் இதழில் ஆலோசகர் மா.சண்முகசிவாவும் கலந்து கொண்டார். மலேசிய இளம் தலைமுறையினர் அடுத்தக்கட்டத்தை நோக்கி இலக்கியத்தையும், சிந்தனையையும் நகர்ந்த தேவையான பயிற்சிகள் வழங்க வேண்டியது பற்றி இன்றைய கலந்துரையாடல் அமைந்தது.

Continue reading

புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம்

ஒருவன் புயலடிக்கும் பெருங்கடலில் தோணி ஓட்டுகிறான். புயல் தோணியைக் கவிழ்க்கப் பார்க்கிறது. தோணி ஓட்டுபவன் அதிலிருந்து மீள பெரும் சாகசத்தில் ஈடுபடுகிறான். அவனுக்கு அந்தச் சாகசம் பிடித்துள்ளது. புயல் எழுப்பும் அலையின் ஆக்ரோசத்தை துடுப்புகளின் லாவகம் கொண்டு சமாளிக்கிறான். புயலின் எதிர்ப்பாராதத் தீவிரத்தாக்குதல்களை, அறிவின் – உடலின் வேகத்தால் எதிர்க்கொள்கிறான். இறுதியில் அந்தப் பெரும் கடலில் , பயங்கரப் புயலில் தோணி கவிழ்கிறது. அதுவரை போராடிய தோணி அங்கு அர்த்தமற்று மூழ்குகிறது. அதற்குப் பின் பெரும் கடல் புயலில் தோணி கவிழ்ந்தது ஒரு ஒற்றை வரி செய்தி. அவனது சாகசத்தை யாரும் வர்ணிக்கப் போவதில்லை. அவன் திறமை கடல் உள்ளவரை கொண்டாடப்பட போவதில்லை. கடலுக்கு முன் அவன் சாகசம் அர்த்தமற்றவை. எளிதில் மறக்கப்பட கூடியவை. அதுதான் அதன் இயல்பு. அதுதான் வாழ்வின் இயல்பும்.
Continue reading

தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை

கடந்த சில வாரங்களாகப் பத்திரிகைகளின் முதன்மைச் செய்திகளில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் நிலைபாடு குறித்த விமர்சனங்கள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. எப்போதோ எழுந்திருக்க வேண்டிய போராட்டம். ஆங்காங்கு மிக மெல்லிய குமுறலாய் இருந்த குரல்கள் இக்காலக் கட்டத்தில் ஒன்றிணைந்துள்ளது வரவேற்கத்தக்கதே. தொடர்ச்சியாக அச்செய்திகளை கவனிப்பதில் பல மலேசியக் கலைஞர்களிடமிருந்து எழும் உள்ளார்ந்த கேள்வியில் முதன்மையாக ஒலிப்பது ஒன்றுதான். ‘ஏன் இன்னமும் மலேசியக் கலை வெளியை தமிழகக் கலைஞர்களைக் கொண்டு நிரப்புகிறார்கள்?’
Continue reading

எழுத்தாளர் சங்கத்தின் புதிய தொடக்கம்…

பொதுவாகவே எழுத்தாளர் சங்க செயல்பாடுகள் குறித்து என்னிடம் மாற்று கருத்துகள் உண்டு. தமிழ்ப்பள்ளிகள் தள்ளாடிக்கொண்டிருக்க சாமிவேலு ‘ஏய்ம்ஸ்’ பல்கலைகழகம் கட்டியது போல இலக்கிய செயல்பாடுகளில் நமது அடிப்படையான பலவீனங்களை களைய முயலாமலேயே அது தனது கால்களை அந்தரத்தில் வைத்துள்ளதாக எனக்குத் தோன்றுவதுண்டு.

Continue reading

நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை

ஆதவன் தீட்சண்யா மூலமாகவே தேவா அறிமுகமானார். ‘குழந்தை போராளி’ எனும் சுயசரிதையை, டச்சு மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்த்தவர். அதே போல ‘அனொனிமா’ எனும் நூலை ஜெர்மன் மொழியிலிருந்து மொழிப்பெயர்த்துள்ளார். இரண்டு முறை தொலைபேசியில் பேசினோம். அப்போது அந்தப் புத்தகம் குறித்த கருத்துரைகளை வாசித்திருப்பதாகவும் நூலை இன்னும் வாசிக்கவில்லை என உண்மையை ஒப்புக்கொண்டேன். இறுதி தமிழகப்பயணத்தில்தான் அந்நூலை நீலகண்டனிடம் வாங்கினேன். தொடர்ச்சியாகத் தமிழ் நாவல்கள் குறித்த கவனத்தில் இருப்பதால் இன்னும் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஓர் எழுத்தாளரின் ஒரு படைப்பைக்கூட படிக்காமல் அவருடன் உரையாடுவது குற்ற உணர்வையே எழச்செய்யும். ஆனால் வேறு வழி இல்லாமல் அதைதான் செய்ய நேர்ந்தது.
Continue reading

அஞ்சலி – எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!

 

எம்.குமாரன்

எல்லோர் போலவும் எழுத்தாளர் எம்.குமாரனின் மரணச்செய்தியும் எவ்வித விசேட ஓலங்களை எழுப்பாமல் குறுஞ்செய்தியில் வந்து சேர்ந்தது. முதலில் இயக்குநர் சஞ்சைதான் தகவல் அனுப்பினார். பின்னர் சை.பீர் முகம்மதுவிடமிருந்து சற்று விரிவான தகவலுடன் வந்தது. அதில் ‘பிரபல எழுத்தாளர் எம்.குமாரன்’ எனும் அடைமொழி இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் சந்துரு அவர் பணிபுரியும் நாளிதழிலிருந்து அழைத்து எம்.குமாரன் படம் கிடைக்குமா எனக் கேட்டார். இணையத்தில் சுத்தமாக இல்லை. மலேசியாவில் ‘பிரபலமான எழுத்தாளர்களின்’ நிலையை எண்ணி வருந்திக்கொண்டேன்.

எம்.குமாரன் இறுதியாகக் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வு ‘3-வது வல்லினம் கலை இலக்கிய விழா’வாகத்தான் இருக்க வேண்டும். இறுதியாக அவரைச் சந்தித்த போது மலேசிய இலக்கிய சூழல் குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது முற்றிலும் மலேசிய இலக்கிய சூழல் குறித்த அதிருப்தியான மனநிலையில் இருந்தார். வல்லினத்தின் வருகை அவருக்கு உற்சாகம் தருவதாய் இருந்தது. இனி தான் எழுதினால் அது வல்லினத்துக்கு மட்டும்தான் என்றார்.
Continue reading

ஜெயமோகன்; விஷ்ணுபுரம் விருது; எழுத்தாளனை போற்றுதல்


தமிழக எழுத்தாளர்களில் நேரில் அதிக நெருக்கமாக நான் உரையாடியது ஜெயமோகன் மற்றும் மனுஷ்ய புத்திரனிடம்தான். இருவரும் மலேசியா வந்துள்ளனர். இருவருடனும் நெடும்பயணங்கள் செய்துள்ளேன். இருவருக்கும் உள்ள ஒற்றுமையாக நான் கருதுவது பிற படைப்பாளிகள் குறித்த அவர்களின் அக்கறை.
Continue reading

சோளகர் தொட்டி : வதையும் வன்முறையும்

‘சோளகர் தொட்டி’ குறித்து எழுத தடையாக வந்தமைவது எது என்ற கேள்வியை நான் இந்த வாக்கியத்தைத் தொடங்கும் போதும் கேட்டுப் பார்க்கிறேன். ஒருவேளை இந்நாவலை விவரிக்கத் தொடங்கும் போது உறுவி எடுக்க முடியாமல் விரவி கிடக்கும், அதன் அடர்த்தியான வாழ்வு ஒருவித தயக்கத்தைக் கொடுக்கலாமோ என்று தோன்றுகிறது. வெவ்வேறு சம்பவங்களைக் கொண்டிருக்கும் ஒரு பிரதியை விவரிக்க முனையும் போது சம்பவங்களைச் சொல்லி கதையை உணர்த்துதல் எளிது. ஆனால் ‘சோளகர் தொட்டி’ மானுட விரோதத்துக்கான எதிர்ப்புணர்வை வெவ்வேறு தொணியின் மூலம் அதன் ஆழம்வரை கொண்டு செல்ல முனைகிறது.

Continue reading

கறுப்பனாக இருப்பதின் பிரச்சனைகள்: கோ.முனியாண்டி

இலங்கையிலிருந்து திரும்பிய களைப்பு இன்னமும் தீரவில்லை. காலம் தாழ்த்தியே கோ.முனியாண்டியின் எதிர்வினைகள் கண்ணில் பட்டன. பொதுவாகவே எதிர்வினைகளையும் மாற்று கருத்துகளையும் வரவேற்பவன் நான். தொடர்ந்த உரையாடல்கள் மூலமாக மட்டுமே ஒரு சமகால அரசியல் சூழ்நிலையை பல்வேறு கோணங்களில் காண முடியும்; முடிந்திருக்கிறது. துரதஷ்டவசமாக மலேசியாவில் மாற்று கருத்துகளை பலரும் விரும்புவதில்லை. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் கோ.முனியாண்டி.
Continue reading