கட்டுரை/பத்தி

0107700210 என்ற எண்ணிலிருந்து கோழையில் குரலும்;கோ.முனியாண்டியும்!

வணக்கம் வல்லினம் வாசகர்களே! கொஞ்ச காலம் முன்பு சை.பீருக்கு  நமது வல்லினம் வெளியிட்ட சிறப்பிதழில் அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டு மழையை மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது அதே மாதிரியான ஒரு பாராட்டு மழையை சித்தியவான் முனியாண்டி சிறப்பிதழில் அவருக்கு வழங்க வல்லினம் முனைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது! சை.பீர் சாமிவேலுவை வைத்து நடத்திய புத்தக வியாபாரத்தை அத்தனை சிறப்பாகப் பாராட்டியிருந்த வல்லினம் – இப்போது சாமிவேலு + ரத்தினவள்ளி அம்மையார் கூட்டணியில் முனியாண்டி நடத்தியுள்ள ராமனின் நிறங்கள் புத்தக வெளியீட்டை சும்மா விடுவார்களா என்ன? குறைந்தது ‘are u so cheap mr muni?’ என்றாவது பாராட்ட தவற மாட்டார்கள் அல்லவா? தங்களை நேர்மையான பாராபட்சம் அற்ற விமர்சகர்களாக நிரூபிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போமே. நன்றி. ஆகஸ்டு மீண்டும் சந்திப்போமா?

அன்புடன் வல்லினம் வாசகர் வட்டம்

Continue reading

மா.சண்முகசிவா : அடையாளம் சுமக்காத ஆளுமை!

  •  

    நான் ச‌ண்முக‌சிவாவைச் ச‌ந்தித்த‌போது காத‌லித்துக்கொண்டிருந்தேன். என் காத‌ல் ப‌ற்றிச் சொல்ல‌தான் நான் ச‌ண்முக‌ சிவாவைச் ச‌ந்தித்த‌தாக‌ச் சொல்ல‌லாம். எதையும் சிந்திக்க‌விடாம‌ல் செய‌ல்ப‌ட‌விடாம‌ல் ச‌தா ந‌ச்ச‌ரித்துக்கொண்டிருந்த‌ காத‌ல் அது. நான் இந்த‌ப் பிர‌ப‌ஞ்ச‌ம் முழுதும் ப‌ர‌வியிருப்ப‌தாக‌ப் பெரும் க‌ற்ப‌னையில் இருந்த‌போது என் கால்க‌ள் த‌ரையில் இருந்த‌தைத் திரும்ப‌த் திரும்ப‌க் காட்டிய‌ காத‌லை நான் உள்ளூர‌ வெறுக்க‌த் தொடங்கியிருந்தேன். என் காத‌லை நான் உள்ளூர வெறுப்ப‌தை வேறு யாராவ‌து சொல்லி நான் கேட்க‌ வேண்டும் போல‌ இருந்த‌து. கார‌ண‌ம் ஒவ்வொரு க‌ன‌மும் நான் காத‌லை நேசிப்ப‌து போன்ற‌தான‌ ஒரு பாத்திர‌த்தில் மிகத் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தேன்.

    Continue reading

    ரஜினியின் தற்கொலை

     

    ‘Ovi yar Raja commit suicides.’

    நண்பர் சந்துருவிடமிருந்து இந்தக் குறுந்தகவலை ஒருதரம் உரக்க வாசித்தபோது வீடு நிசப்தமானது. அந்நிசப்தத்தினூடே நான் சந்துருவை அழைத்துக் கேட்டபோது, விவரம் அவர் சொல்லும் வரை எனக்குத் தெரியாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
    Continue reading

    இலை மறைவில் புது உயிர்கள்!

    21-5-1964-ல் தமிழ் முரசு பத்திரிகையில் முதல் புதுக்கவிதை தோன்றியதாக வரலாறு சொல்கிறது. `கள்ளபார்டுகள்’ என்ற கவிதையை எழுதிய சி. கமலநாதன் பெயர் தொடர்ந்து எல்லா புதுக்கவிதைத் திறனாய்வு கட்டுரைகளிலும் இடம்பெற்று விடுகின்றது. இன்னும் சிலர் அது `கள்ளபார்டுகள்’ இல்லை `காலப்படகுகள்’ எனவும் கூறிவருகின்றனர். அவர் காலகட்டத்தில் புதுக்கவிதைகள் எழுதியபைரோஜி நாராயணன், எம். துரைராஜ், போன்றோர்களின் படைப்புகளும் முறையான பதிவில் இல்லாமல் எங்கோ ஓர் அலிபாபா குகைக்குள் அடைந்து கிடக்கிறது. இப்படி ஆரம்பமே ஆதாரங்கள் குறைந்திருக்கும் புதுக்கவிதை வரலாறு நமக்கு.
    Continue reading

    சை.பீரும் அவதூறும் …

    இந்த எதிர்வினையை எழுதுவதற்கு  முன் மிகக் குறைந்த சொற்களை மட்டுமே பயன்படுத்தும் திறன் வாய்க்க வேண்டுமென எனக்குள் ஒருமுறை கூறிக்கொள்கிறேன். சிலருக்கு அதிகச் சொற்களைப் பயன்படுத்துவது விரயம்.
    Continue reading

    த‌மிழ் எழுத்தாளர் ச‌ங்க‌ம் – விருது – எலும்புத்துண்டு

    விஸ்கி ம‌ணிய‌த்தின் ச‌காக்க‌ளும் சாமிவேலுவின் அடிவ‌ருடிக‌ளும் கார‌ணம் இல்லாம‌ல் ஒருவ‌ருக்கொருவ‌ர் ஏற்ப‌டுத்திக்கொள்ளும் ச‌ட‌ங்கு பூர்வ‌மான‌ ச‌ர்ச்சைக‌ள் போல, ம‌லேசிய‌த் த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தை விம‌ர்சிப்ப‌தும் ஒரு குழு சார்ந்த‌ அர‌சிய‌லாக‌ சில‌ ச‌ம‌யங்க‌ளில் அத‌ன் த‌லைவ‌ராலேயே வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் ஆப‌த்து இந்த‌க் க‌ட்டுரைக்கும் நிக‌ழ‌லாம். ப‌ல்வேறு சூழ‌ல்க‌ளில் எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தின் போக்கு குறித்து விம‌ர்சித்த‌தின் ப‌ல‌னாக‌ வ‌ரும் தொலைபேசி அழைப்புக‌ளின் மூல‌ம் காதில் இர‌த்த‌ம் வ‌ழிந்த‌துதான் மிச்ச‌ம். சுய‌ புராண‌ங்க‌ளும்… வெட்டிப் பேச்சுக‌ளும்… அங்க‌லாய்ப்புக‌ளும்… மிர‌ட்ட‌ல்க‌ளும் வெளிப‌டுமே த‌விர‌ நிபுண‌த்துவ‌த்தோடு அவ‌ர்க‌ள் த‌ர‌ப்பு சார்ந்த‌ தெளிவான‌ விள‌க்க‌ம் இதுவ‌ரையில் வெளிவ‌ந்த‌பாடில்லை. ஆச்ச‌ரிய‌மாக‌ நான் ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தின் போக்கு குறித்து ஒரு நேர்காண‌லில் ப‌திவு செய்த‌ என‌து க‌ருத்துக‌ளுக்கு அத‌ன் த‌லைவ‌ர் பெ.இராஜேந்திர‌ன் ப‌திலுரைக்கும் வித‌மாக அதே ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் சில‌ க‌ருத்துக‌ளை முன் வைத்திருந்தார். அதில் ஒரு ஆய்வாள‌னுக்கே உரிய‌ சில‌ புதிய‌ க‌ண்டுபிடிப்புக‌ளின் வ‌ழி த‌ன் அற்புத‌மான‌ க‌ருத்தைப் ப‌திவு செய்திருந்தார். அதில் அவ‌ர் எப்போதும் போல‌ ‘எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தைக் குறை சொல்ப‌வ‌ர்க‌ள் சிறு கூட்ட‌த்தின‌ர்தான். அவ‌ர்க‌ள் 6 அல்ல‌து 7 பேர் ம‌ட்டுமே’ என‌ க‌ண‌க்கெடுப்பெல்லாம் செய்திருந்தார். த‌ந்தை பெரியாருக்குப் பிற‌கு அதிக‌ம் சிந்திக்க‌த்தூண்டும் க‌ருத்துக‌ளைக் கூறுப‌வ‌ர் இராஜேந்திர‌னாக‌த்தான் இருக்க‌ வேண்டும். அந்த‌ நேர்காண‌லில் அவ‌ர் முன் வைத்த‌ க‌ருத்திலிருந்து இந்த‌க் க‌ட்டுரை:
    Continue reading

    மரணத்தை வெல்லும் மந்திரவாதிகள்!

     

    ஆழி சூழ் உலகு

    மலேசிய இலக்கியம் பரந்துபட்ட தளத்தில் வாசிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. வெகுசன எழுத்துகள் அல்லது எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியத்தின் அடையாளமாகக் காட்டப்படுவது அதில் முக்கியமானது. தொடர் உரையாடல்கள், விவாதங்கள் மூலமாக முந்தைய படைப்பிலக்கியங்கள் மற்றுமொரு காலக்கட்டத்தில் விவாதங்கள் மூலம் மீட்கப்படாமல் இருப்பதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். அதேபோல மலேசிய எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளர்களின் பினாமிகள் போல மலேசிய இலக்கியத்தை ஒட்டிய விரிவான வாசிப்பு இல்லாமல் அதன் மீது ஆழமான விமர்சனங்களை வைக்காமல் ‘ஒன்றும் இல்லை’ என மொண்ணையாக கருத்துக்கூறுவதும் மோசமான அரசியல்தான். இதைவிட முக்கியமாக தமிழகத்தில் கா.நா.சு, சு.ரா, ஜெயமோகன், அ.மார்க்ஸ்,  போன்ற ஆளுமைகள் ஒவ்வொரு காலத்திலும் தமிழ் இலக்கியத்தின் மீது தங்களின் ஆழமான பதிவுகளைச் செய்வது போல இலங்கை இலக்கியத்தை ஒட்டிய மதிப்பீடுகள் கைலாசபதி, கா.சிவதம்பி, எம்.ஏ.நுஃமான், மு.தலையசிங்கம் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. மலேசியாவின் இலக்கியத்தை அவ்வாறான ஒரு பரந்த வாசிப்பு மற்றும் தீவிரமான விமர்சன போக்கில் முன்னெடுக்கும் ஆளுமைகள் இல்லை எனலாம். துரதஷ்டவசமாகப் பேராசிரியர்கள் சிலர் அப்பாத்திரத்தை மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் போதிக்கும் ஒரே தகுதியினால் ஏற்கின்றனர்.
    Continue reading

    வல்லினம் வளர்ந்த கதை

     

     

     

    த‌மிழ‌க‌த்தில் க‌விஞ‌ர் ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் இல்ல‌த்தில் இருந்த‌ ஒரு ப‌க‌ல் வேளையில் ‘காத‌ல் இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்ட‌து’ என்ற‌ குறுந்த‌க‌வ‌ல் ம‌ணிமொழியிட‌மிருந்து வ‌ந்த‌து. ம‌லேசியாவிலிருந்து புற‌ப்ப‌டும்போதே ஒரு வ‌ச‌திக்காக‌ மொட்டை அடித்திருந்த‌ ம‌ண்டையில் ‘ந‌ங்’ என யாரோ அடித்த‌து போல‌ உண‌ர்ந்தேன். உட‌னே தொலைப்பேசியில் அழைத்த‌போது மௌன‌ங்க‌ளாலான‌ பெரும் இறுக்க‌த்தை, அழுகையை முடிந்துவிட்ட‌த‌ற்கான‌ அடையாள‌த்தோடு ம‌ணிமொழி வெளிப‌டுத்தினார். ‘காத‌ல்’ இத‌ழ் உருவான‌ கால‌ங்க‌ள் இன்ப‌மான‌வை. மாத‌த்தில் இரண்டு ச‌னிக்கிழ‌மைக‌ள் நான், ம‌ணிமொழி, யுவ‌ராஜ‌ன், ச‌ந்துரு, தோழி, பூங்குழ‌லி என‌ விடிய‌ விடிய‌ இத‌ழை உருவாக்கிய‌ க‌ண‌ங்க‌ள் இன்றும் நினைவில் உள்ள‌ன‌.இர‌ண்டு ம‌ணிநேர‌த்திற்கு ஒரு த‌ர‌ம் க‌டையில் இற‌ங்கி தேநீர் ப‌ருகிவிட்டு காலை ஆறு ம‌ணிக்கு வீடு திரும்புவோம். ப‌டைப்புக‌ளைச் சேக‌ரிப்ப‌து திருத்துவ‌து போன்ற‌ ப‌ணிக‌ளை நானும், அவ‌ற்றை டைப் செய்து திருத்த‌ம் பார்த்து வைப்ப‌தை ம‌ணிமொழியும் செய்ய‌ பொருளாதார‌ம் குறித்தான‌ எந்த‌க் க‌வ‌லையும் இல்லாம‌ல் ‘காத‌ல்’ இத‌ழ் ந‌க‌ர்ந்து கொண்டிருந்தது. ச‌ந்துருவின் ப‌ங்க‌ளிப்பு இதில் முழுமையான‌து. காத‌ல் இத‌ழுக்கு அவ‌ர் அமைத்துக்கொடுத்த‌ ப‌க்க‌ங்க‌ள் த‌னித்துவ‌மான‌வை.

    Continue reading

    நான்கு வாழ்வும் வரலாறும்

    ‘நாடு விட்டு நா டு’ எனும் முத்தம்மாள் பழனிசாமி எழுதிய தன் வரலாற்று புத்தகம் குறித்து எழுதத்தான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினேன். ஆயினும் அப்புத்தகத்தை வாசித்து முடித்தப்பின் ஒரு சுய வரலாறு எதற்காக எழுதப்பட வேண்டும் என்ற கேள்வி முன் வந்து நின்றது. அதன் அடிப்படையில் ஏற்கனவே நாவலாகவும் சுயவரலாறாகவும் எழுதப்பட்ட சில பிரதிகள் உடனடியாக நினைவுக்கு வந்தன.

    இதில் பாமாவின் ‘கருக்கு’ சுயவரலாற்று தொணியில் இயற்றப்பட்ட நாவலாக இருக்கிறது. முதல் வாசிப்பில் ‘கருக்கு’ ஒரு நாவலாக என் மனதில் பதிய சிரமமாக இருந்தது. தன் வரலாறு பாணியில் பின்னப்பட்ட அக்கதை புனைவின் சாத்தியங்களை நிராகரித்துவிட்டு ஒளிவு மறைவற்ற நிஜத்தின் உக்கிரத்துடன் என் முன் பேசுவதாக உணர்ந்தேன். கடந்த ஆண்டு அதை மறுவாசிப்பு செய்யும் போது அது பாமா என்ற ஒரு தனிமனிதரின் கதையாக மட்டுமல்லாமல் தலித் மக்களின் வாழ்வில் எல்லா சூழல்களிலும் ஏற்படும் நிராகரிப்புகளை, ஏக்கங்களை, சுகதுக்கங்களை, தீண்டாமைகளை, பாசாங்கில்லாமல் பேசும் ஒரு முக்கியப் பிரதியாகத் தோன்றியது.
    Continue reading

    சா. ஆ. அன்பானந்தன், அ. ரங்கசாமி மற்றும் மரவள்ளிக்கிழங்கு!

    சின்ன வயதிலிருந்தே நான் மலேசியாவில் ஜப்பானியர் ஆட்சி குறித்த சுவாரசியமான சம்பவங்களை என் ஆத்தாவின் பேச்சின் வழிக் கேட்டதுண்டு. ஆத்தா என் அம்மாவின் அம்மா. அவர் நினைவில் ஜப்பானியர்கள் குறித்த சில சம்பவங்கள் மிக அழுத்தமாகப் பதிவாகியிருந்தன. அவர்கள் ‘குரா குரா’ எனும் ஓசையெழப் பேசுவார்கள் என்பது அதில் சுவாரசியமானது. ஆத்தா எப்போதும் ஜப்பானியர்களைக் கொஞ்சம் உயர்த்திதான் பேசுவார். அவரின் அப்பாவுக்கு ஓரளவு ஜப்பான் மொழி தெரிந்ததால் ஜப்பானியர்களிடம் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதன் பலனாக ஜப்பானியர்கள் காலத்தில் எல்லோருக்கும் கிடைத்த சுண்ணாம்பு அரிசி ஆத்தா குடும்பத்துக்கு வழங்கப்படாமல் நல்ல அரிசி கிடைத்திருகிறது. நல்ல அரிசி கிடைத்த நன்றி அவருக்கு இன்றுவரை உண்டு. மற்றபடி சயாம் மரண ரயில் குறித்தெல்லாம் அவர் கேள்விப்பட்டதோடு சரி.
    Continue reading