நாசரை ‘நடிகர்’ என்பதை மீறி ஒரு கலைஞராகவே அடையாளம் கண்டுவைத்திருந்தேன். ‘அவதாரம்’ திரைப்படம் அவருக்குள் இருக்கின்ற கலைத்தன்மையை அடையாளம் காட்டியிருந்தது. அதை தவிர்த்து பல படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களை ரசிகனின் முன் வைக்கும் விதத்தில் அவர் நடிப்பாற்றல் மிளிர்ந்திருக்கிறது. சிங்கை இளங்கோவன் நாசர் பற்றி பேசும்போதெல்லாம் ‘தமிழ்த்திரையுலகில் ஒரு வித்தியாசமான கலைஞன்’ எனப் பாராட்டுவார். அவர்களுக்குள் நட்பு இருந்தது. இளங்கோவன் ஒருவரை அப்படிச் சொல்வது சாதாரணம் அல்ல. அவர் கலையையும் கலைஞனையும் எவ்வித சமரசமும் இன்றி அணுகக்கூடியவர்.
Continue reading


