வணக்கம்.
ரௌடிகளாகவும் ஒழுக்கத்தைச் சிதைப்பவர்களாகவும் புனிதங்களைக் கேள்வி எழுப்புபவர்களாகவும் நம்பப்படும் எங்களுக்கு இந்நிகழ்வில் உரையாற்ற வாய்ப்பு வழங்கியமைக்கு முதலில் நன்றிகள்.
வணக்கம்.
ரௌடிகளாகவும் ஒழுக்கத்தைச் சிதைப்பவர்களாகவும் புனிதங்களைக் கேள்வி எழுப்புபவர்களாகவும் நம்பப்படும் எங்களுக்கு இந்நிகழ்வில் உரையாற்ற வாய்ப்பு வழங்கியமைக்கு முதலில் நன்றிகள்.
மலேசியாவில் இருந்து வரும் புதிய இலக்கிய அதிர்வுகளின் பின்னணியில் இருக்கும் இளம் எழுத்தாளர்களில் ம.நவீன் ஒரு முக்கிய ஆழுமை. இலக்கிய வடிவங்களின் பல தளங்களில் இயங்கும் நவீன் மலேசியத் தமிழ் இலக்கிய அசைவின் உந்து சக்தியாகவும் இருந்து வருகிறார். தற்போது இணைய இதழாக வரும் ‘வல்லினம்’ தமிழ் இலக்கியத்தில் முக்கிய தடம் பதித்துள்ளது என்பது மிகையான கூற்றல்ல. இவரது படைப்புலகம் பற்றி – பொதுவான மலேசியத் தமிழ் இலக்கியத் தடம் பற்றி ஒரு பதிவை ஏற்படுத்துவதற்காக ஒரு நீண்ட உரையாடலை நவீனுடன் நிகழ்த்தினோம். ஆசிரியர் வேலை- எழுத்துவேலை -இணைய இதழ் வேலை என்று பல்வேறு வேலைகள் அவர் நேரத்தைக் குடித்தாலும் பொறுமையுடன் உரையாடிமைக்கு -எதிர்- நன்றி சொல்கிறது. அவரது நுணுக்கமான சமூகப் பார்வையையும் இலக்கிய ஆழுமையையும் இந்தச் செவ்வியில் அவர் அளித்திருக்கும் பதில்களிற் காணலாம். –http://ethir.org/–
கடவுள் மீதான நம்பிக்கை எனக்கு என் அம்மாவின் மூலம் வந்திருந்திருக்கக்கூடும். அம்மா ஒரு முருக பக்தை. நானும் அது போல ஆக வேண்டும் என நிறைய ஆசை பட்டார். நான் முருகனின் அருளால் பிறந்த குழந்தை என்றும் கடவுளின் அம்சம் எனக்கிருப்பதாகவும் தீர்க்கமாக நம்பினார்.
நான் சின்ன வயதிலேயே பிள்ளையார் பக்தனாகி விட்டேன். `திருவிளையாடல்’ படத்தில் பிள்ளையார் முருகனை குறுக்குவழியில் வெற்றி கொண்டு ஞானப்பழத்தை பெற்றது அதற்கு முக்கியக் காரணம். எனக்கு நல்ல நன்னெறி பாட ஆசிரியர் கிடைத்ததால், பின்னாளில் முருகன் மீது இரக்கமும் பிள்ளையார் மீது கோபமும் வந்து நானும் தீவிர முருக பக்தனாகி விட்டேன்.
எதிர் வலைத்தளத்தில் என் நேர்காணலின் இறுதிப் பகுதி…
http://ethir.org/?p=1055
காமம் வெல்வது பற்றி
காதலிசொல்லிக்கொண்டிருந்தாள்
முதலில் தனது முகம் மறக்கச் சொன்னாள்
அதில் துளைகள் அதிகம் இருப்பதாகவும்
அவைகளில் அழுக்குகள் வெளியேறக்கூடுமென்றாள் Continue reading
மின்னஞ்சலுக்கு முன்பு:
பொதுவாக உணவுகள் குறித்த தடைகள் என்னிடம் பெரிதாக இருந்ததில்லை. எனது ஜீரண உறுப்புகள் மிகுந்த கறாரானவை. என் உடலுக்குத் தேவையில்லாத உணவு என்றால் நான் உண்ட அடுத்த நிமிடமே ‘வெளியே போ!’ என வந்த வாசல் வழியே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடும். அதை நான் பெரும்பாலும் தடுப்பதில்லை.
கம்பத்தில் வசித்தபோது என் அண்டைவீட்டுக்காரர் வேட்டையாடுவதை தொழிலாகக் கொண்டிருந்ததால் உடும்பு, அலுங்கு, காட்டுப்பன்றி போன்றவை அவ்வப்போது சாப்பிடக்கிடைக்கும். இவற்றையெல்லாம் சாப்பிட முடிந்த என்னால் எவ்வளவு முயன்றும் ஆட்டிறைச்சியைச் சாப்பிட முடிந்ததில்லை. உள்ளே நுழைந்த சிறிது நேரத்திலெல்லாம் அங்கே இங்கே முட்டி மோதி நெஞ்சு கரிப்பெடுத்து வெளியேறிவிடும்.
இளங்கோவன் அறிமுகம் ஆகும் முன்னரே அவர் பெயர் நன்கு அறிமுகமாகியிருந்தது. சில சிங்கை நண்பர்கள் மூலமாக அவர் சிங்கப்பூரில் மிக முக்கிய படைப்பாளி என்பதையும் அறிந்துகொண்டேன். மேடை நாடகம், கவிதை, மொழிப்பெயர்ப்பு என பலவற்றிலும் அவரது ஆளுமையை சிங்கை நண்பர்களுடனான உரையாடலின் மூலம் அறிய முடிந்தது. கூடவே அவர் யாரையும் பார்க்கவும் உரையாடவும் விரும்பமாட்டார் எனவும் தொடர்ந்தார் போல தகவல்களும் வந்து கொண்டிருந்தன.
அப்போது தமிழகச் சிற்றிதழ்களில் தலித் இலக்கியம் பற்றிய விவாதங்கள் வந்து கொண்டிருந்தன. எளிய மனிதர்கள், அவர்கள் வாழ்க்கை, அவர்களின் பால் செலுத்தப்படும் சுரண்டல்கள் போன்றவற்றை வாசித்துக் கொதித்துப் போயிருந்தேன். மலேசியாவில் அம்னோ அரசால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்தின் ஓர் அங்கமான நான், எல்லா அரசியல் செயல்பாடுகளையும் ஒரு தலித் மன நிலையில் இருந்தே சிந்தித்தேன். சிந்திக்கிறேன். முதிர்ச்சியடையாத ஒரு சிந்தனை காலக்கட்டத்தில் சுற்றி நடக்கும் அனைத்திற்குமே அரைகுறையான அரசியல் பார்வையோடு சிந்திக்கும் தன்மை மட்டுமே அப்போது வாய்த்திருந்தது.
‘வரவேண்டாம்’
எனஎன்னை நீ பணித்த
சில நிமிடங்களுக்கு முன் தான்
டிக்கெட் உயிர் பெற்றது.
இன்று மதியம்
சிட்டுக்குருவிகள் சேஷ்டைகளை
ஆழ்ந்து நோக்கிய மாயா
நள்ளிரவில்
தனது ஒற்றை விரலால்
எனதுடலை அழுத்தி
துளை செய்தாள்