முன்னுரை

மலேசிய இலக்கியச் சூழலில் சிறுகதைக்கான முக்கியத்துவம் தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது. மலேசியாவைத் தாண்டி தமிழர்கள் வாழும் வேறு நாடுகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் கவனம் பெறுவதுடன் பரிசுகளையும் பெற்றுள்ளன. நாவல் மற்றும் நவீன கவிதைகளைவிட சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை மலேசியப் படைப்பாளிகள் செய்துள்ளனர். விமர்சன மரபு இல்லாத இந்நாட்டில் எழுதப்படும் அனைத்துமே படைப்புதான் எனும் மனநிலையில் எழுத்தாளர்கள் திளைத்திருக்கும் சூழலில், மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் வரலாற்றை ஒரு கழுகுப் பார்வையில் அறிவதும் அதில் எவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் நடந்துள்ளன என ஆராய்வதுமே அடுத்தகட்ட நகர்வுக்கு வழி சமைக்கும்.
Continue reading



ஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை உருவாக்கி மெல்லதிர்ச்சியைக் கொடுக்கும் சிறுகதைகளைப் புனைந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் வானம்பாடி கவிஞர்களால் ஈர்க்கப்பட்டவர். அவர்கள் போல கவிதைகள் புனைந்தவர். அவர் கதைகளில் மையமாக ஒரு படிமத்தை உருவாக்கி, அந்தப் படிமத்தை வந்தடையும் ஒரு திருப்பம் நிகழும் சம்பவத்தைக் கதையின் முடிவாக்கும் உக்தியை அதிகம் கையாண்டார். அது பரப்பிலக்கிய பாணி. அது இயல்பாக அன்றைய வாசகர்களை ஈர்த்தது. எழுபதுகளில் மலேசியாவில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளரும் அவரே. இவர்களைப் போல சை.பீர்முகம்மதுவும் ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்டு புனைவிலக்கியத்தில் ஈடுபட்டவர்தான்.



டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். “சித்தர் மார்க்கத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த தாங்கள் இப்போது பக்தி மார்க்கத்தைப் பின் பற்றுகிறீர்கள்… ஏன்?” என் கேள்விக்கு டாக்டர் ஜெயபாரதி எளிதான ஒரு பதிலைச் சொன்னார். “சித்தர் மார்க்கம் முடிவற்றது. அறிவின் தளத்தில் இயங்கும் அதில் எல்லைகள் இல்லை. பக்தி மார்க்கம் அப்படி அல்ல. ‘எல்லாம் சிவம்’ எனச்சொல்லி அமர்ந்துவிடலாம். அதுவே அதன் எல்லை.”