
வெலிங்டன் விடுதியின் காப்பாளர் பங்களாவுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் பனைமரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. அடர்ந்த பனைமரத் தூர்களின் அடியில் முற்றி உதிர்ந்த நுங்குகள் கிடக்கின்றன. வெட்டி இறக்கப்படாத நுங்கு குலையாகத் தெரித்து மட்டைகளின் இடையில் தொங்குகின்றன. பாதையில் சிதறிக்கிடக்கும் இரண்டு பெரிய நுங்குகளில் பளபளப்பு மங்கி மஞ்சள் நிறக்கோடுகள் விழுந்திருக்கின்றன. டேனியல் விஜயகுமாரின் அம்மா…














