கருத்து ரீதியாக வாதிடுதல் என்பது என்ன? உங்களிடம் ஒரு கருத்து உண்டு. அதை முன்வைக்கிறீர்கள். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் அந்தக் கருத்து நீங்கள் வாதிடும் சூழலில் இதற்கு முன் அக்கருத்து எவ்வாறான விவாதங்களுக்கு உட்பட்டுள்ளது எனும் முன்னறிவு நமக்கு அவசியமாகிறது. அந்த நகர்வின் சாதக பாதகத்தில் நின்றே நாம் அறிவு ரீதியான…
Month: January 2014
அதிகாரத்தின் துர்வாசனை
ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி…
கலைக்கு மரியாதை செய்யத் தெரிந்தவர்கள்
‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற கதையை எழுதியதற்காக தயாஜி மீது கலாசார போலிஸ்களால் தொடுக்கப்படும் தாக்குதலும் தயாஜியை அவர் பணியாற்றிய அரசு நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்ததும் கடுமையான கண்டனத்திற்குரியது. கடவுள் மீதும், பெற்றவர்கள் மீதும், பெற்ற பிள்ளைகள் மீதும் காமுறுவது இலக்கியத்திற்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் புதியதல்ல. இல்லாதவொன்றை தாயாஜி சொல்லிவிடவில்லை. அவ்வாறு இல்லையென்றே வைத்துக்கொண்டாலும் இல்லாததைத்…
படைப்பாளி தண்டிக்கப்படலாகாது
கடந்த சில வாரங்களாக, தமிழ் பத்திரிகைகளை அலங்கரித்த வல்லினத்தின் சிறுகதை ஒன்றின் கண்டன எழுத்துகளை அனைவரும் அறிந்ததுதான். கதையில் என்ன உள்ளது என்கிற விலாவரியான விளக்கங்களையெல்லாம் பலர் சொல்லியாகிவிட்டது. புதிதாக விமர்சனம் என்கிற பெயரில் அதை மீண்டும் நான் கிழித்துத்தொங்கப் போடுவதால் சீர்கெட்ட சமூதாயம் திருந்தி நல்லவர்களாக மாறிவிடப்போவதில்லை. ஒரு சிந்தனை எழுத்து வடிவம் பெறுகிறபோது…
கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்: சிறுகதை விமர்சனம்
பத்திரிகைகளில் இக்கதைக்கான விமர்சனங்களைப் பார்த்தேன்.மிகக் கடுமையான கண்டனத்திற்கும் உட்ச பட்ச தாக்குதலுக்கும் இழிவிற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகி இருந்தது. இதற்குப் பின்னால் பழிவாங்கும் நுண்ணிய அரசியல் இருந்தாலும் அதனை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து இக்கதைக்கான விமர்சனத்தை உண்மையான வார்த்தைகளோடு பதிவு செய்கிறேன். இதுவொரு மனப்பிறழ்வுக்கானவனின் கதை என்பதை ஒரு முறை வாசித்து முடியும் போது புரிந்துவிடக்கூடிய…
கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் – எனது பார்வை
முதலில் இந்தச் சிறுகதையை எழுதிய நண்பர் தயாஜியை மனதார பாராட்டுகிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறுகதை அதிகம் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன் முறை. இம்மாதிரியான கருவை கையில் எடுத்துக்கொண்டு எழுதுவது என்பது சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்ள ஒரு ‘தில்’ வேண்டும். அது தயாஜிடம் இருப்பதை எண்ணி பெருமை…
எளிய கேள்விகளும் எளிய பதில்களும் – கே.பாலமுருகன்
புனைவுகள் குறித்த அபத்தமான கருத்துகள் பல்வேறு தரப்பிடம் இருந்து வருகின்ற சூழலில் வல்லினத்தின் சிறுகதை பொறுப்பாசிரியர் கே.பாலமுருகன் பொதுவாக எழும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார். ஒரு இலக்கிய படைப்பில் கூறப்படும் கருத்தை ஒட்டியே அதை படைத்த படைப்பாளின் குணமும் இருக்கும் என்று கூறப்படுகிறதே, இது சரியா? உதாரணமாக போதை பழக்கத்துக்கு அடிமையானவனின் வாழ்க்கையை கூற முனையும்…
வாயில் விழைச்சு
ஒவ்வோர் ஆண்டும் பெரும் நிறுவனங்களில் ஜனவரி தொடங்கி மார்ச் வரை நிதிக் கணக்குகள் முடிக்கப்படும் காலம் என்பதால் முசுவாக இருப்பார்கள். அதுபோலக் கல்வி நிறுவனங்களில் இது கருத்தரங்கக் காலம். முன்பு பல்கலைக்கழகங்களில்தான் கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெறும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல பயிலரங்குகளுக்கும் கருத்தரங்குகளுக்கும் நிதி உதவி செய்வதால் கல்லூரிகளிலும் இன்று ஆய்வுகள்…
கண்றாவிகளைச் சுமக்கும் கலாச்சாரம்
நேற்று முன்தினம் முக நூலில் என் அன்புக்கினிய தோழி மாலா ஒரு கேள்வியை முன்வைத்தாள். ” மலேசிய நாட்டில் இதுபோன்ற கலாச்சாரங்களை வரவேற்கலாமா?” என்பது அக்கேள்வியின் சாரமாக இருந்தது. தாயாஜியின் சிறுகதையே இவரின் கேள்விக்குப் பின்னணியாக இருந்தது. இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்குப் பதிலாக அவளிடம் நான் கேள்வியை எழுப்பினேன். “மலேசியா நாட்டில் ஏய்ட்ஸ் நோய்…
எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கருத்துகள்
இலக்கியம் புனிதங்களை உடைக்கலாமா? இருப்பதை மாற்றுவது (change the status quo) என்பதும் இலக்கியத்தின் நோக்கங்களில் ஒன்றுதான் என்பதால் விமர்சனமே தவறாகாது. ஆனால் இலக்கியம் என்பது கருத்து மட்டுமல்ல, மொழியும்தான். பண்பட்ட மொழியைப் புறக்கணிக்கும் எதுவும் இலக்கியமாகிவிடாது. இலக்கியம் என்பது வக்கரங்களுக்கான வடிகால் அல்ல. அது மாற்றத்திற்கான போர் வாள். மாலன் ———————– மதம், புனிதம்,…
சர்வதிகாரி ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த அதே காலப் பகுதியிலே (1940) சார்ளி சாப்ளினும் வாழ்ந்தார். ஹிட்லரைக் கண்டு முழு உலகமும் நடுங்கிய போதும் சார்ளி சாப்ளினோ (The Great Dictator) ‘சிறந்த சர்வாதிகாரி’ என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் ஹிட்லர் மனநோயாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுபவனே கலைஞன். இவ்விதழ் அந்தக் கலைஞனுக்குச் சமர்பணம்.
‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ : தீர்ப்பு உங்கள் கையில்
கடந்த சில வாரங்களை மிகவும் முக்கியமான நாட்களாக உணர்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. மலேசிய இலக்கிய வாசகர்கள் பலருக்கும் இவை முக்கியமான நாட்கள்தான். காரணம் வல்லினத்தில் வெளிவந்த தாயாஜியின் சிறுகதை தான். ஒரு மலேசிய படைப்பாளி எழுதிய இலக்கிய படைப்பை முன்வைத்து பரவரலான கருத்தாடல்கள் இடம்பெருவது என்பது இந்நாட்டு இலக்கிய பரப்பில் அபூர்வமானது. வாசித்தோம் வாயை…
தயாஜியின் சிறுகதை நிற்கும் – கருணாகரன்.
தயாஜியின் சிறுகதை – “கழிவழியும் பழிவாங்கும் வழிமுறையும்“ ஒரு நல்ல இலக்கியப்பிரதி. எந்த இலக்கியப்பிரதியும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதுண்டு. அதன் கலைப்பெறுமானம், கருத்தியல் என்ற இரண்டு பிரதான விசயங்களில் பெரும்பாலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் “ கருத்தியல்ரீதியாக விவாதிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. இதுகூட ஒன்றும் புதியதல்ல. இலக்கியத்திலும் மனித வரலாற்றிலும் இத்தகைய வினைகளுக்கெதிரான மறுப்புகள் இருந்து…