
வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும் ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் கட்டுரை தொகுப்பின் முன்னுரை உன்னதமான ஒரு நிகழ்வு என்ற தத்துவத்தோடெல்லாம் வாசிப்பு எனக்கு அறிமுகமாகவில்லை. மொழியின் சுவையே நான் புத்தகங்களைத் தேடிப்போகக் காரணமாக இருந்தது. அதிர்ஷ்ட வசமாக எனக்கு லுனாஸில் இருந்த புத்தகக் கடையிலேயே வேலை கிடைக்க சாண்டில்யன், கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, மு.வரதராசன்,…