
மீன்பிடி உபகரணங்கள் விற்கும் புதிய கடையொன்றை கடந்து செல்கிறேன். காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகைப்பட்ட தூண்டில்கள், தாத்தாவை நினைவூட்ட, அவருக்கு ஒன்று வாங்க வேண்டுமென எண்ணுகிறேன். இறக்குமதி செய்யப்பட்டதென முத்திரை பொறித்த ஒரு பத்துப் பாகங்களைக் கொண்ட தூண்டிலொன்று. பத்துப் பகுதிகளும், ஒன்றின் மேல் மற்றொன்று படிந்து, அநேகமாய், இறுதியில் ஒரு துப்பாகியின் பிடி போன்றமைந்த,…