துரத்தியடிக்கப்பட்டவர்களின் கதை

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும் கே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ சிறுகதை தொகுப்பின் முன்னுரை “தோட்டங்களிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.” ‘எழுத்தாளனின் முடிவுகள் தயக்கத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்துதான் உருவாகின்றன’. என்னுடைய எல்லாம் கதைகளிலும் தீர்வுகளும் முடிவுகளும் சொல்லப்படவில்லையென்றாலும், நான் சேகரித்து வைத்திருந்த ஒரு வாழ்க்கையின்…

நிகழ்வது நிமித்தமாக

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும் பூங்குழலி வீரனின் ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ எனும் கவிதை தொகுப்பின் முன்னுரை கவிதை எனப்படுவது நிகழ்தல்; நிகழ்தல் வழி பிறக்கும் பதிவுகள். நிழல்படங்களைப் போல்தான் கவிதையும். ஒரு நினைவிற்காக பத்திரப்படுத்தி வைக்கும் நிழல்படங்களில் நம்மை மட்டும் பார்க்கின்றோம். கவிதைகளில் நம்மையும் நாம் உணர்ந்தவற்றையும் பார்க்கிறோம். என்னைக் கடந்த போன காலத்தைத்தான் நான் என்…

விருந்தாளிகளின் வாழ்வு

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும்  ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் கட்டுரை தொகுப்பின் முன்னுரை உன்ன‌த‌மான‌ ஒரு நிக‌ழ்வு என்ற‌ த‌த்துவ‌த்தோடெல்லாம் வாசிப்பு என‌க்கு அறிமுக‌மாக‌வில்லை. மொழியின் சுவையே நான் புத்த‌க‌ங்க‌ளைத் தேடிப்போக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அதிர்ஷ்ட‌ வ‌ச‌மாக‌ என‌க்கு லுனாஸில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டையிலேயே வேலை கிடைக்க‌ சாண்டில்ய‌ன், க‌ல்கி, அகில‌ன், நா.பார்த்த‌சார‌தி, மு.வ‌ர‌த‌ராச‌ன்,…

எலி பொறியில் எழுத்தாளர் சங்கம்

பூனை கழுத்தில் மணி கட்டுவது யார் ஏன் ஓடி ஒளியவா? நூறு எலிகள் பூனையின் கழுத்தை கடித்துக் குதறுவோம்… – காசி ஆனந்தன் படித்ததும் கொஞ்சம் பதட்டம் வந்தது. யோசிக்கத் தோன்றியது. நேரம் எடுக்க நினைத்தேன். பதட்டம் குறைந்தது. இப்போது எழுத தொடங்குகிறேன். பதட்டமின்றி எழுதுகிறேன். ஆனால், ஒரு மாத கால இடைவேளிவிட்டு பதில் எழுதுவதற்கு…

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திடீர் முடிவு – ஒரு தனி நபர் தாக்குதல்

தினக்குரல் நாளிதழில் (15.8.2013) மலேசிய எழுத்தாளர் சங்க சார்பாக அதன் செயலாளர் திரு. குணநாதன் வெளியிட்டிருக்கும் அறிக்கையை கண்ணுற்றேன். பலரும் அச்செய்தியை வாசித்து வருத்தமுற்றிருக்கலாம். தனிப்பட்ட முறையில் தயாஜிமேல் ஆத்திரமும் பட்டிருக்கலாம். இச்செய்தி பற்றி எனது கருத்தைக் கூறுவதற்கு முன் அதன் சாராம்சத்தை விளங்கிக் கொள்ளுதல் நலம். 1. எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் காலாண்டு…

ஒரு மசாலா அறிக்கைக்கு பதில்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டு சிறுகதை தேர்வு நிறுத்தப்படுகிறது என்ற எழுத்தாளர் சங்க செயலாளர் குணநாதனின் அறிக்கையைப் படிக்க நேர்ந்தது. சுரண்டலுக்குப் பின்பான எல்லாவித பாதுகாப்பு அம்சங்களைவிடவும் கழிவிரக்கத்தைத் தேடிக்கொள்வது பொதுவாகவே நடப்பில் உள்ள தப்பிக்கும் சூழல்தான். எழுத்தாளர் சங்கம், குணநாதன் மூலம் அதை மீண்டும் நிரூபித்துள்ளது. நான் ஆசிரியராக இருந்து வழிநடத்தும் வல்லினம்.கோம்…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய மோசடி!

கடந்த 15.08.2013 ஆம் நாள் மக்கள் ஓசையில் வெளிவந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அறியாமைகள், இயலாமைகள் குறித்த அதன் செயலாளர் ஆ. குணநாதனின் அறிக்கையைப் படித்தோம். இத்தனைநாள் எழுத்தாளர்களின் காப்பிரைட் சட்டத்திட்டங்கள் குறித்து அறியாமல் இருந்தது சங்கத்தின் மிகப்பெரிய குற்றமாகும். 5 ஆண்டுகளாக வருடாந்திர சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பு போடும் செயல்பாட்டில் தன்னை ஈடுப்படுத்தி வந்த…

12 ஜூலை 2013 அன்று க. பாக்கியம் ஏற்பாட்டில் ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன் அவர்களும் மலாயா பல்கலைக்கழக இணைபேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்தன. அதற்கான எதிர்வினைகளை வல்லினம் இங்கே பதிவு செய்கிறது…

பெ. ராஜேந்திரன் உரை & முனைவர் கிருஷ்ணன் மணியம் உரை

ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்!

12 ஜூலையில் க.பாக்கியம் ஏற்பாட்டில்  ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. அந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்ததன. அதன் எதிரொலியாக ராஜேந்திரன் மன்னிப்புக்கேட்கும் வரை எழுத்தாளர் சங்க நிகழ்வுகளைப் புறக்கணிப்பது…

சுயகௌரவம் இழக்கும் எழுத்தாளர்கள்…

எனக்கு தமிழில் கெட்ட (கொச்சை) வார்த்தைகள் தெரியும். நான் பேசதான் மாட்டேன். நேரடியாக ஒருவர் மீது எனக்கு கோபம் வரும் போது, நான் பேசும் வசனம்இது. கோபம் மேலும் தலைக்குமேல் ஏறும் போது நான் பேசும் வசனம்தான் இது. என் கோபத்தை மேலும் அதிகப்படுத்தினால் பேசிவிடுவேன் மிகச்சிறந்த கொச்சையை. இப்படியான ஒரு கோபம்தான் எனக்கு ஏற்பட்டது…

இலக்கியத்திற்கு பால் பேதங்கள் தேவையற்ற ஒன்று

முதலில் இவைகளைப் படியுங்கள் : – * கள்ளக்காதலனுடன் தாய் சல்லாபம், அதைப்பார்த்துவிட்ட மகனை காதலனும் அந்தத்தாயும் கொலை செய்தனர். *கணவர் தமது மனைவியை மாதவிடாய் காலகட்டத்தின் போது உடலுறவு கொள்ள அழைத்ததால்- மனைவி அவனை விவாகத்து செய்தாள். *குழந்தையை பால்வல்லுறவு செய்துவிட்டு, அதனின் பிறப்புறுப்புக்குள் நீண்ட குச்சியை சொரூகிய காமுகன். *வாய்வழி புணரும்போது கணவன்…