மதியம் உறங்கி எழுந்தால் பெரும்பாரத்தொடு மனம் கனத்துவிடுகிறது. விடுமுறை நாளில் வெறிச்சோடி நீண்டுகிடக்கிறது வீதி. கதவுஜன்னல் சாத்திய வீடு படுத்துக்கிடக்கும் தெருநாய் நகராது நிற்கும் வாகனம் என அசைவற்றது எதைக்கண்டாலும் கூடிவிடுகிறது விசனம். கிளைகள் அசையக் குலுங்குகிறது பட்டுபோய்விட்ட மரம். ஏதொயிரு கிளைகள் நடுவே குடியிருந்ததற்கு சாட்சியாய் கட்டிய கூட்டை விட்டுப்போன பறவை…
போர்வைக்குள்
மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு யூகிக்கமுடியவில்லை. கட்டில்மீது குவிந்துகிடக்கும் போர்வைக்குள் பதுங்கியிருக்கிறது ஏதோ ஒரு ஜந்து. விளிம்புதாண்டியும் நீண்டிருக்கின்றன கால்கள். நகங்களில்லை. போர்வையின் நுனிபற்றி உயர்த்திப் பிடிக்கிறேன். கால்களை உள்ளிழுத்துக்கொள்கிறது. கரம் நுழைத்துத் துழாவியும் அகப்படவில்லை.கடிக்கவுமில்லை. இன்னமும் உயர்த்துகிறேன். உள்ளோடி ஒளிந்துகொள்கிறது. சரிதான்.வெளிச்சம்கண்டு பயப்படுகிறது போலும். விளக்கை அணைத்தால் வெளிவரக்கூடும். சுவிட்சைத்…
கலை இலக்கிய விழாவை தொடர்ந்து செப்டம்பர் முழுக்க வல்லினத்தின் தொடர் இலக்கிய நிகழ்வுகள்

வல்லினம் குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ‘கலை இலக்கிய விழா’வின் உற்சாகம் இவ்வருடமும் தொடங்கிவிட்டது. வழக்கமான நூல் வெளியீடுகளோடு செப்டம்பர் மாதம் முழுக்கவே இலக்கிய கலந்துரையாடல்களாக நிகழ்த்த இவ்வருடம் வல்லினம் திட்டமிட்டுள்ளது. வல்லினம் பட்டறை ‘செம்பருத்தி’ இதழ் ஆதரவுடன் ‘வல்லினம்’ தொடர்ச்சியாக நடத்திவரும் பட்டறையுடன் இவ்வருட கலை இலக்கிய விழா தொடங்குகிறது. பேராசிரியர் அ. மார்க்ஸ்…
இழப்பு

படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர் உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக் கொண்டு வயிறோடு ஒட்டியபடி இருந்த பந்தை மூடி கண்ணாடியில் பார்த்தேன். அம்மாவின் வயிறும் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் இருந்தது. ஆனால் அவள் அப்போதெல்லாம் என்னைப்போல சுறுசுறுப்பாக இல்லை. அவசரத்துக்கு எழ மாட்டாள். தரையில்…
மாலதி மைத்ரி பதில்கள்

பகுதி 1 கேள்வி: அன்பின் மாலதி, ஓர் எழுத்தாளர் தன் படைப்பைப் பிரசுரிக்க இதழ்களைத் தேர்ந்தெடுக்கவேண்டுமா? நீங்கள் எல்லா இதழ்களிலும் எழுதுவதுண்டா? அதற்கான தேர்வு உண்டா? –வரன், கனடா. பதில்: நான் என்னுடைய படைப்புகளைப் பிரசுரிக்க இதழ்களை மிகக்கவனமாகத் தேர்வு செய்தே அனுப்புகிறேன். இங்குபெரும்பான்மையான சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்கள் மற்றும் மின்னிதழ்கள் புரவலர்களின் ஆதரவால், அரசியல்வாதிகளின் ஆதரவால்,கறுப்புப்பணத்தைக் கொண்டோ,தொண்டு நிறுவன…
சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் போலியான இலக்கிய புரிதல்களை என் கதைகள் உடைக்கும்

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய சிறுகதை உலகில் முக்கிய ஆளுமையாக இருக்கும் கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார். கேள்வி : உங்களுடைய தனி அடையாளமே…
கவிதைகள் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து கொஞ்ச காலம் விடுபடச் செய்திருக்கிறது!

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. பூங்குழலி வீரன் அவர்களின் ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ எனும் கவிதை தொகுப்பும் அதில் ஒன்று. அவருடனான சந்திப்பு… கேள்வி: வல்லினம் வெளியீடாக வரவிருக்கும் உங்கள் கவிதை நூல் பற்றி அறிமுகம் செய்யுங்கள். வல்லினம்…
தீவிரமான ஒரு வாசிப்பு தளத்தை நோக்கி சக வாசகர்களை நகர்த்தும் முயற்சியே என் கட்டுரைகள்

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய மற்றும் தமிழக நாவல்கள் தொடர்பான மனப்பதிவுகளை முன்வைத்து ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் ம. நவீன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார். கேள்வி…
கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ (சிறுகதைத் தொகுப்பு)

இந்நாட்டின் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் பரவலான கவனத்திற்குட்பட்ட படைப்பாளி கே. பாலமுருகன். கெடா மாநிலத்தைச் சேர்ந்த இவர் படைப்புகள் பல, உலக தமிழ் வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. உள்நாட்டில் பல இலக்கிய போட்டிகளில் அவரது படைப்புகள் வாகை சூடியுள்ளன. அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனமும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது…
வார்த்தைகளுக்குள் உலகைப் பூட்டி வைத்தவள்- கவிஞர் பூங்குழலியின் நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – ஒரு பார்வை

கவிஞர் பூங்குழலி மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆண்டு கவிதை போட்டியின் வழியே எனக்கு முதலில் அறிமுகம் ஆனார். 2007ஆம் ஆண்டு நடந்த அப்போட்டியில் பூங்குழலியின் 7 கவிதைகள் பரிசுக்குரியதாகத் தேர்வுப் பெற்று முதல் மூன்று இடங்களையும் அவரே பெற்றிருந்தார். நான் அறிந்தவரை அதுதான் மலேசிய இலக்கியப் போட்டிகளில் முதன்முறையாக நிகழ்ந்த மிகப்பெரிய சாதனையாகும். ஆனாலும், கவிஞர்…
நாவல்கள் குறித்த பகிர்வில் ஒரு புதிய பரிணாமம் – ம. நவீனின் விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு

வல்லினம் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக ம. நவீனின் விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு எனும் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவிருக்கிறது. இந்நூலின் முன்னுரையில் நவீன் பதிவு செய்திருக்கும் கருத்துடன் இக்கட்டுரையைத் தொடங்குவது இத்தொகுப்பு குறித்து சிறந்த அறிமுகத்தினை வாசகர்களுக்கு வழங்கும். “வாசிப்பின் புரிதல் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுவதுபோல் வாசிக்கும் நோக்கமும் வாசிப்பை எதிர்கொள்ளும் விதமும் அறிவின் முதிர்ச்சிக்கு…
