வெறி நாய்களுடன் விளையாடுதல் வெறி நாயுடன் விளையாட முடிவெடுத்தான் வாசகனின்றி திரிந்த ஒரு நகரத்து கவிஞன் வெறிநாய்கள் எதையாவது பார்த்து குரைத்துக்கொண்டே இருக்கும் இடபேதம் தெரியாமல் கால்தூக்கி நனைக்கும் நகரத்து இரைச்சல் எல்லாம் தனக்கான வசையென்று தறிகெட்டு ஓடும் தாய் மகள் தெரியாமல் கடிக்கும் கலவி கொள்ளும் வாசகர்களில்லாதவர்கள் வாழும் நகரத்தில்…
முன்னுரை : கே.பாலமுருகன் கவிதை நூலிலிருந்து…
என் கவிதைக்குள்ளிருந்து எனக்கும் அரசியலுக்குமான தொடர்பு என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அரசியல் உணர்வைத் தூண்டிவிடவே இந்தக் கவிதைகளைத் தொகுத்துள்ளேன். என் நோக்கம் மக்களின் சிந்தனையை அதிகார மையத்தை நோக்கி நகர்த்த வேண்டும் ; ஓர் அரசியல் உரையாடலைத் துவக்கி வைக்க வேண்டும் என்பது மட்டுமே. மற்றபடி கவிதைகள் என்பது அதற்கொரு சாக்குத்தான். குறிப்பிட்ட ஒரு…
முன்னுரை : வெறிநாய்கள் கவிதை தொகுப்பிலிருந்து…
காமம் செப்பாது கண்டது மொழிவோம் எனது இரண்டாவது கவிதை தொகுப்பு இது. எனது கவிதைகள் குறித்து ஒரு வரிகூட நான் பேசப்போவதில்லை. அதை வாசகர்கள்தான் பேச வேண்டும். ஆனால், ஓர் இதழாளனாக , கவிஞனாக நான் சந்திக்கும் பல்வேறு வாசகர்களின் வாசிப்பு மனநிலை குறித்தும் அதன் போதாமைகள் குறித்தும் கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன். ‘எனக்கு…
வெள்ளை வேன் வளர்ந்த கதை
லீனா மணிமேகலையை வல்லினம் இதழுக்காக சிறு நேர்காணல் செய்தேன். தமிழில் கலையில் தீவிரமாக இயங்குபவர்கள் கவனிக்கப்படுவதே இல்லை என்ற எண்ணம் மீண்டும் தோன்றியது. ‘வெள்ளை வேன் கதைகள்’ ஆவணப்படம் உருவான கதை இந்த நேர்காணலில் அத்தனை சுவாரசியமாய் வெளிப்பட்டுள்ளது. தான் இயங்கும் ஒரு கலையின் மீது தீராத காதலும் கட்டற்ற தீவிரமும் கொண்ட ஒருவரால் மட்டுமே…
தமிழ் தேசியம். ஏன்? எப்படி?
உலக தமிழர் அரசியலோடும் பண்பாட்டு அசைவுகளோடும் அணுக்கமான தொடர்பு கொண்டிருக்கும் பலரின் சமகால சிந்தனை, தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கத்தைத் தொடர்ந்து விவாதித்து வருவதை அறியமுடிகிறது. இன்றைய நிலையில் தமிழ் தேசியம், தமிழ் ஆர்வளர்கள் என்று தங்களை முன்னிருத்தும் பலரின் பாடுபொருளாக இருப்பது கண்கூடு. தீவிர ஆதரவுக்கும் பலத்த எதிர்ப்புக்கும் நடுவில் சிக்கி மக்களின் கவனத்தை…
ISBN மற்றும் CIP மாற்றங்களும் தேவைகளும்
வியாபார தேவைக்கேற்பவும் நூல் வர்த்தகத் துறையின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளுக்கு ஏற்பவும் கடந்த நாற்பது ஆண்டுகளில் மட்டும் புத்தகங்களின் ‘title-page’- நூல் முகப்பு பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது நூல் முகப்பு பக்கத்தில் இடம்பெறும் ISBN (International Standard Book Numbering) எனும் சர்வதேச புத்தக தர எண் மற்றும்…
விண்மீன்களற்ற இரவு
மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை (மூலம் : ஏ. சமாட் சைட் | தமிழில் : சல்மா தினேசுவரி) அன்றைய இரவு, வானத்தில் விண்மீன்களே இல்லை. கரு மேகங்கள் சூழ்ந்திருந்தன. தொட்டு வருடியும் மூர்க்கமாகவும் மோதிச் சென்ற காற்று நிச்சயம் கனத்த மழை பெய்யும் என்பதை அடையாளப்படுத்தியது. பகலின் வெயில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. தகிக்கும் வெயிலால்…
மலேசியத் திரைவிமர்சனம்: மெல்லத் திறந்தது கதவு
கார்த்திக் ஷாமளன் என்கிற மலேசிய இளைஞரால் இயக்கப்பட்டு டிவிடியின் மூலம் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வியாபாரம் மலேசிய சூழலில் கொஞ்சம் வித்தியாசமானது. நண்பர்கள், முகநூல் மூலம் இப்படம் தொடர்பான பகிர்வுகள், விமர்சனங்கள் பரவியப்படியே உள்ளன. இன்று பதாகைகளோ அல்லது பத்திரிகைகளோ அவையனைத்தையும்விட முகநூல், தகவல்களைச் சேர்ப்பதிலும் மக்களை இணைப்பதிலும் முதன்மை வகித்து வருகின்றது. கார்த்திக் ஷாமளனால்…
வேராய் ஒளித்து வைக்கும் மொழி – கலாப்பிரியா கவிதைகள்
எப்போதுமே எனக்கு கலாப்பிரியாவின் கவிதைகளின் மேல் தனியானதொரு காதல் உண்டு. அவரது பரந்து விரிந்த கவிதைக்களமும் கவிதையும் கவித்துவமும் மிக அழகானது. மீண்டும் மீண்டும் சிலாகிக்க வைக்கும் தனியொரு சக்தி அவரது கவிதைகளுக்கு உண்டு. அவரது மொழி ஆளுமை அபாரமானது. ஓரிரு வார்த்தைகளை ஒன்று சேர்த்து புதியதொரு பொருளைக் கொடுக்கும் அதிசயத்தை அவரது கவிதைகள் நிகழ்த்திக்…
கனவுப்பகடை
சமீபத்திய நீண்ட விடுமுறையில் சில புத்தகங்களை படிக்க எடுத்தேன். தொடர்ந்து வாசிப்பதை இயல்பாக கொண்டிருப்பதால் ஒரு புத்தகத்தை தொடர்ந்து அடுத்த புத்தகத்தை எடுப்பதென்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. படித்த முடித்த புத்தகத்தின் அலைகள் அப்போதைய எண்ணங்களை அழுத்திக் கொண்டிருக்கும். அப்படித்தான், எந்த புத்தகம் படிக்கலாம் என யோசனைக்கு பிறகு,‘பொம்மைகளோடு பேசிக் கொண்டிருக்கலாம்’, ‘பதினான்காவது அறை’, ‘கனவுகளுடன்…
பட்டு : புரிந்து கொள்ளாத அன்பு நிரந்தரமானது
கணவன் மனைவி என்னும் உறவு புனிதமாகப் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒருவருகொருவர் எனும் கட்டமைப்பில் வருகிறார்கள். திருமணம் பெண்களை அடிமையாக்குகிறது என்கிறார் தந்தை பெரியார். காதல் என்பதும் ஒன்றுமில்லாதது. வெறுமனே அதற்குப் புனித பிம்பத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பெரியார் சொன்னதாய் படித்த ஞாபகம் இருக்கிறது. காதல் இல்லாத நிலை வந்தால்;…