Author: ம. நவீன்

‘தீபாவளிக்கு என் கவிதையை ரேடியோவுல கேட்டீங்களா?’

 

கடந்த தீபாவளி தொடங்கி பொங்கல் இன்னும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை நெருங்கும் போதெல்லாம் வானொலி அறிவிப்பாளர்களிடமிருந்து ஒரே வகையான தொலைப்பேசி அழைப்புகளே வந்தன.

பண்டிகையை ஒட்டி கவிதை எழுதி வாசிக்க வேண்டுமாம். Continue reading →

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 10

நாங்கள் பேசி முடித்தவுடன் கிளம்பி விடலாம் என முடிவெடுத்திருந்தோம். எங்களுக்குப் பின்னர் சை.பீர்முகம்மது பேசுவதாக கேள்விப்பட்டதால் கொஞ்ச நேரம் காத்திருந்தோம். அந்த நேரம் எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை தலைவர் முனைவர் குமரன் மேடையில் ஏறி பேசினார். அவர் பேச்சின் இறுதியில் ‘நவீன் கோரிக்கையை நான் அமுல்படுத்த இந்த மேடையில் உறுதி அளிக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டில் தமிழை மூல மொழியாகக் கொண்ட மாணவர்களை இணைக்கும் வண்ணம் சிறுகதை பட்டறை மற்றும் போட்டிக்கான ஏற்பாட்டினை மலாயா பல்கலைக்கழகத்திலேயே ஏற்பாடு செய்கிறேன்..வல்லினம் கேட்டுக்கொண்ட களம் அவர்களுக்கு அங்குக் கிடைக்கும்.’ என்றார்.

Continue reading →

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 9

 

மேடையில் ஏறியபோது கூட்டம் சோர்ந்திருந்தது. பொதுவாகவே மனிதனின் கவனமாகக் கேட்கும் திறன் 20 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். பள்ளியில் மாணவர்களிடம் போதிக்கும் போதும் இத்தன்மையைக் கண்டதுண்டு. பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் கவனம் பல்வேறு திசைகளுக்குச் சென்றுவிடும். அவர்கள் கவனம் தொடர்ந்து பாடத்தில் இருப்பதற்குதான் பீடிகை, பாடத்துணைப் பொருட்கள் போன்றவை உதவுகின்றனர்.

நேற்றிலிருந்து அமர்ந்து பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருந்த பயிற்சி ஆசிரியர்களின் முகங்கள் சோர்ந்திருந்தனர். அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட புத்தகங்களை அவர்கள் கரங்கள் புரட்டிக்கொண்டிருந்தன. எங்கள் அமர்வின் தொகுப்பாளர் திரு.வாசுதேவன் பேசத்தொடங்கியபோது கூட்டத்தை கவனித்தேன். முதல் பேச்சாளர் நான். நான் பேச வேண்டியது இளம் பயிற்சி ஆசிரியர்களுக்குத்தான் என மனதில் உறுதி செய்துக்கொண்டேன். தங்கள் மூளை நிறைய கருத்துகளைச் சுமந்து கொண்டிருக்கும் அறிஞர்களிடம் நான் சொல்ல ஒன்றும் இருக்கவில்லை. குறிப்பாக அதிகாரத்திடம் சமரசம் செய்துக்கொள்வது பற்றி.

Continue reading →

அவ‌தாரும் ஆத்தாவும்!

 

அவ‌தார் ப‌ட‌த்தை இர‌ண்டாவ‌து முறையாக‌ ‘3டி’ காட்சியில் பார்த்த‌போதும் மன‌ம் அப்ப‌ட‌த்தின் இறுதி க‌ட்ட‌த்திற்கே காத்திருந்த‌து. ம‌ற்றெல்லா காட்சிக‌ளைவிட‌வும் இறுதி காட்சியில் என‌க்கு ஒரு வ‌கையான‌ சிலிர்ப்பு ஏற்ப‌ட்ட‌து. இனி தோல்விதான் என‌ அந்த‌ப் பூமியின் ம‌க்க‌ள் பின்வாங்கும் நிலையில் இந்த‌ வ‌ன‌ம் எங்க‌ளுக்கும் சொந்த‌மான‌துதான் என‌ வில‌ங்குக‌ள் வ‌ந்து யுத்த‌ம் செய்யும் காட்சி ம‌னித‌னின் ஆண‌வ‌த்திற்கு அறைவிழுந்த‌து போல் இருக்கும்.

Continue reading →

கோழைகளின் கூச்சல்

நேற்று ஃபிளோமினா எனும் புனைப்பெயரில் சிங்கப்பூர் Bras Basah Road  அருகில் உள்ள ஒருவர் வெட்டிக்கதை அளந்ததைத் தொடர்ந்து அவர் யாரென்று கண்டுப்பிடிக்கப்பட்டது. கண்டுப்பிடிக்கப்பட்டது தெரிந்தவுடன் ஆள் ஓடிவிட்டார். இந்நிலையில் எனக்கு  ‘ராஜூ’ போலி பெயரில் மற்றுமொரு  மின்னஞ்சல் வந்தது. அதில் மிக முக்கியமானது என் எழுத்து தொடர்பானதல்ல. என் ஆசிரியர் தொழில் சம்பந்தப்பட்டது. அதில் நான் பள்ளிக்கூடத்தில் செய்த தவறுகளுக்காகப் பள்ளி (அரசாங்கத்தால்) மாற்றப்பட்டதாக இருந்தது. மிக விரைவில் அந்த ‘ரகசியம்’ அம்பலப்படுத்தப் படுமாம். நல்லது.

Continue reading →

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 8

காலையில் கண்களைத் திறக்க முடியாத போதுதான் உடல் சோர்வை முழுமையாக உணர முடிந்தது. உடல் களைத்திருந்தாலும் மனம் தெம்பாக இருந்தது. நேற்றிலிருந்து போதுமான நேரம் வழங்கப்பட்டிருந்ததால் நிகழ்வில் என்ன பேச வேண்டும் என மனதில் பதிந்திருந்தது. ஓர் எழுத்தாளனுக்கு 10 நிமிடம் மேடையில் பேசுவது பெரிய விசயமா என்ன?

Continue reading →

நந்தலாலா : மேலும் சில பயணங்கள்

‘நந்தலாலா’ திரைப்படம் குறித்து பல நண்பர்களிடமிருந்தும் நல்லவிதமான கருத்துகள் வரவே ஒரு முறையாவது பார்த்துவிட முடிவெடுத்தேன். இயக்குநர் மிஷ்கின்தான் அப்படத்தை இயக்கி நடித்ருந்தார். அப்படம் ஜப்பான் இயக்குநர் தகேஷி கிடானோ என்பவரால் 1999ல் இயக்கப்பட்ட ‘கிகுஜிரோ’ எனும் படத்தின் தலுவல் என இணையப்பக்கங்களில் செய்திகள் வந்திருந்தன. அதைப் பற்றி எனக்கென்ன கவலை. நான் எந்த ‘ஜிரோ’வையும் அதுவரை பார்க்காத நிலையில் நந்தலாலாவைப் பார்ப்பதில் பெரிய தடைகள் இருக்கவில்லை.

Continue reading →