கோட்டையிலிருந்து மீண்டும் தங்கும் விடுதி நோக்கி நடந்தோம். கோட்டைக்கு அருகில் விற்ற கொண்டை கடலையைச் சூடுபறக்க அம்மதியம் சாப்பிட்டது இனிமையான அனுபவம். கடலையை நம்மூர் போல காகிதத்தில் சுற்றிதான் கொடுக்கிறார்கள். ஆனால் அக்காகிதம் மாணவர்களின் நோட்டு புத்தகத்தினுடையவை. பல்வேறு பதார்த்தங்கள் இவ்வாறு நோட்டு புத்தகத்தின் காகிதத்தில் மடித்தே கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் அவை முகம் தெரியாத ஒரு மாணவனை கொண்டுவந்து நிறுத்தியது. அனேகமான நேரங்களில் நான் ஒரு ஆசிரியர் மன நிலையில் இருப்பதில்லை, ஆனால் நோட்டு புத்தகங்களில் காணப்பட்ட மாணவர்களின் எழுத்துகளும் ஆசிரியரின் சிவப்பு மையும் அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பார்க்கும் ஆவலைத் தூண்டியது.
Continue reading