பயணம்

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 3

அறையை நோக்கி நடக்கவே அரைநாள் பிடிக்கும்போலத் தோன்றியது. விடுதியின் வரவேற்பறை திடல்போல விரிந்து கிடந்தது. பல இடங்களில் ‘லியாங்சூ கருத்தரங்கின்’ (Liangzhu Forum) அடையாளங்களைப் பார்க்க முடிந்தது. அக்கருத்தரங்கை ஜெஜியாங் பல்கலைக்கழகம் (Zhejiang University) முன்னெடுப்பதால் அப்பல்கலைக்கழக மாணவிகள் ஆங்காங்கு நின்றுக்கொண்டு “தோ இப்படிக்கா போ!” என வழிகாட்டினர். சீன யுவதிகளைப் பார்க்க பொம்மைபோல இருந்தனர். எவ்வளவு நேரமாக அப்படி நிற்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் முகத்தில் சோர்வைக்காட்டாமல் சிரித்து வைத்தனர்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 2

இருளைச் சாம்பல் நிறமாகக் காட்டும் பனிப்படலத்தைக் கிழித்தபடி எங்கள் கார் சென்றுகொண்டிருந்தது. நான் சீனர்களுடன் கலந்திருந்த என் பாலியப் பருவம் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன்.

நான் பதினேழு வயது வரை சீனக்கம்பத்தில்தான் வாழ்ந்து வந்தேன். பெரும்பாலும் சீனர்களின் பண்டிகைகளை அவர்களுடன் இணைந்தே கொண்டாடியுள்ளேன். சீனர்களின் உணவுகளே எனக்குப் பிடித்தமானவையாகவும் இருந்துள்ளன. எப்போதுமே சீனர்கள் சூழவே என் இளமை பருவம்  கழிந்துள்ளது.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 1

“ஏழு மணி நேரம் விமானத்தில் பயணிக்கணுமாக்கும்,” எனச் சீனப்பயணம் குறித்து கேட்பவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். விமானம் ஏறியவுடன்தான் ஐந்து மணி நேரப்பயணம் என்பதே உரைத்தது. இடையில் என் மூளைக்குள் ஏழு மணி நேரம் என யார் புகுத்தினார்கள் என்பது குறித்து அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. நானே எனக்கு அப்படி ஒரு சூனியத்தை வைத்துக்கொள்வது வழக்கம்.

Continue reading

சீனப் பயணம்

இன்று சீனாவுக்குப் புறப்படுகிறேன்.

சீனாவின் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சும் ஜெஜியாங் மாநிலமும் இணைந்து லியான்ஸு கலாசார கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. அக்கருத்தரங்கில் கலந்துகொள்ள சீன அரசாங்கத்தின் அதிகாரத்துவ அழைப்பில், மலேசியாவிலிருந்து புறப்படும் இலக்கியக்குழுவில் நானும் இடம்பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 20

குமாரி தேவிகளைச் சந்தித்து திரும்பும்போது சிறிய சலசலப்பு ஏற்பட்டது. எங்களுடன் வந்த கோமளவள்ளி, சிவலட்சுமி, தேவஜித்தா ஆகியோரைக் காணவில்லை. அவர்கள் மூவரும் குமாரிகளைக் காணும் திட்டத்தில் இணைந்திருக்கவில்லை. அப்பகுதியில் ஷாப்பிங் செய்ய விரும்புவதாக அவர்கள் சொல்லியிருந்ததால் மீண்டும் சந்திக்கும் நேரத்தையும் இடத்தையும் நிர்ணயம் செய்துவிட்டுதான் பிரிந்தோம். திரும்பி வந்தபோதுதான் அவர்கள் அங்கு இல்லாததும் அவர்களைத் தொடர்புகொள்ள வேறு வழிகள் இல்லாததும் எங்களுக்கே உறைத்தது.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 19

குமாரியாக சனிரா

ராயல் குமாரி இரண்டாவது மாடியில் இருந்த மையமான சன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது கீழ்த்தளத்தில் அமைதி சூழ்ந்தது. பழுப்பும் கறுப்புமாக இருந்த கட்டடத்திலிருந்து சிவப்புடையுடன் ஓர் ஒளித்துளியாக குமாரி தேவி பிரசன்னமானார். யாரையும் குறிப்பிட்டுப் பார்க்காத கண்கள் குமாரி தேவியுடையது. விழியோரங்களில் கூர்மை கொண்ட மையால் கண்கள் துலங்கி தெரிந்தன. குமாரியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இருக்கக் கூடாது என்பதுதான் விதி. குமாரி தேவி முகத்தில் தோன்றும் சின்னச் சின்ன சலனங்களுக்குக் கூட காரணங்கள் கணிக்கப்படும். புருவத்தை அசைப்பதுகூட அபச குணமாகக் கருதப்படும். குமாரி தேவி அதிக பட்சம் இருபது வினாடிகள் எங்களைப் பார்த்திருப்பார். பின்னர் அமைதியாகத் தன்னை அறையிருளுக்குள் இழுத்துக்கொண்டார்.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 18

இன்றைய குமாரி

காலை மணி பத்தை நெருங்கியபோது என் பதற்றம் உச்சத்தை அடைந்தது. குமாரி தேவி காலை பதினொரு மணிக்குத்தான் பொதுமக்களுக்காகப் பிரசன்னமாவார். இனி எப்போது கிளம்பி எப்போது அவ்விடத்தை அடைவது? எப்படியும் நாங்கள் சேர்வதற்குள் குமாரி தேவி தரிசனம் முடிந்துவிடும். பின்னர் எதற்கு இந்தத் தொடருக்குக் ‘குமாரிகள் கோட்டம்’ எனப் பெயர் வைத்தேன்? எது என்னை அத்தலைப்பை வைக்கத் தூண்டியது?

Continue reading

குமாரிகள் கோட்டம் – 17

மறுநாள் இரவு புறப்பாடு. இன்றே அனைத்துப் பொருள்களையும் முறையாக அடுக்கிக் கட்ட வேண்டியிருந்தது. அதற்கு முன் நினைவு பொருட்களை வாங்க வேண்டும். நான் பச்சை நிற தாரா சிலையை வாங்கத் திட்டமிட்டிருந்தேன். நபராஜ் தன்னை ஒரு வியாபாரி என அறிமுகம் செய்துகொண்டதால் அவர் வழியாகப் பொருள்களை மலிவாக வாங்குவதுதான் எங்கள் திட்டம். எந்தக் கடைக்குச் சென்றாலும் எங்களைத் தென்னிந்திய சுற்றுலாவாசிகள் என விலையை அழுத்தினர். எனவே எங்களுக்கு ஒரு ‘விவரமான’ நேபாளியின் உதவி அவசியமாக இருந்தது.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 16

முதல்நாள் பனிரெண்டு மணிநேரம் பேருந்திலேயே பயணம் செய்த களைப்பு மறுநாள் அனைவரது முகத்திலும் இருந்தது. அந்த நீண்ட நேர பயணத்தை நான் குமாரிகளின் கோட்டத்தின் இரண்டு கட்டுரைகள் எழுதப் பயன்படுத்திக்கொண்டேன். வளைவான குலுங்கும் பாதைகளில் கைப்பேசியை உற்றுப்பார்த்து எழுதுவது சாகசம் நிறைந்ததாக இருந்தது. மேலும் வலது தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த வலி கழுத்துக்குச் சென்றதால் குனிய முடியவில்லை. கழுத்துத் தலையணையை அணிந்தபடி ஒருவாறாகக் கட்டுரைகளை எழுதி முடித்தேன். இடையிடையே குட்டித் தூக்கம். வெளிப்புறக் காட்சிகள் சலிப்பையே ஏற்படுத்தின. ஒரே மாதிரியான வளைவுப் பாதைகள், ஏற்ற இறக்கங்கள், புழுதிகள்.

Continue reading

குமாரிகளின் கோட்டம் – 15

லும்பினி நுழைவாயிலில்

காலையில் உணவுண்டு தயாரானபிறகு புத்தர் பிறந்த இடத்தை நோக்கி நடந்தே சென்றோம். விடுதியின் அருகில்தான் மாயாதேவி கோயில் அமைந்திருந்தது. காலையிலேயே லும்பினி சுடும் நிலமாக உருவெடுத்திருந்தது.

Continue reading