18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.
சு.வேணுகோபாலின் புனைவை உள்வாங்க கவனம் சிதறாத வாசிப்பு தேவை. பின்னர் அதற்கு முன் இருந்த வாழ்வு குறித்தான நம்பிக்கைகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் துணிவு வேண்டும். இல்லாத பட்சத்தில் அவை வெறும் குழப்பத்தையும் ஒழுக்க அதிச்சியையும் மட்டுமே ஏற்படுத்தும். பொழுது போக்கு வாசகர்களுக்கு சு.வேணுகோபாலின் கதைகளின் நுட்பம் அகப்படுவதே இல்லை.
யாக்கை சிறுகதை மேலோட்டமாகப் பார்க்கையில் மரணத்திற்கெதிரான ஒருவரின்
போராட்டமாகத் தென்பட்டாலும் உண்மையில் அது இருவருடைய யாக்கைப் போராட்டமாகத்தான் விரிகிறது. ஈத்தனின் யாக்கைப் போராட்டத்தை அவரது மகள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே வரும் கதைசொல்லி ஒரு கட்டத்தில் ஈத்தனுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கிறான். தன்னை அண்டவந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடிந்த ஈத்தன் தானே மரணத்தைச் சென்றுதொடும் புள்ளியில் உறைந்து போகும் கதைசொல்லி ஈத்தனாகத் தன்னையும், கடலாக அந்தப் பெண்ணையும் பாவித்துக்கொள்ளும் தருணத்தில் கதை நிறைவுறுகிறது.
Continue reading →