எப்போதும் சொல்வதுதான். எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. பிரகாசமான முகத்துடன் என்னை நீங்கள் அன்று தரிசிக்கலாம். கடந்து சென்ற ஒரு வருடத்தை புதிய ஆண்டில் நின்றுகொண்டு அசட்டையாக எட்டிப்பார்ப்பதில் ஒரு ‘திரில்’ உண்டு. ஏதோ அதெல்லாம் யாருக்கோ நடந்ததுபோல. அப்படிப் பார்க்கும்போது, பெரும்பாலும் மகிழ்ச்சியும் துக்கமும் உலகியல் சார்ந்த நிகழ்வுகளில் குவிந்ததில்லை. பணித்துறை, கல்வித்துறை, பொருளாதாராம், குடும்பம் என எதில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களையும் நான் பொருட்படுத்திப் பதிவிட்டதில்லை. ஆனால் என் தாய்மாமாவின் மரணம் என்னை இம்முறை அதிகமே தடுமாற வைத்தது. மூளையில் மூன்று புற்றுக்கட்டிகள். அவற்றைக் கண்டுப்பிடித்த முதல் நாளில் இருந்தே காப்பாற்ற முடியாது என உள்ளூர அறிந்த நிலையிலும் ஏதோ நம்பிக்கையில் வைத்தியம் செய்ய அலைந்துகொண்டிருந்தேன்.
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விருது!
நவம்பர் 2010இல் வல்லினம் இலக்கியக் குழு மற்றும் நவீன இலக்கிய களம் இணைந்து தைப்பிங் நகரில் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தோம். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களை ஒரு தீவிர இலக்கிய வாசகராக நான் அறிந்துகொண்ட சந்திப்பு அது. அதற்கு முன் நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோதே சுவாமியின் ஆசிரமத்துக்கு தேவாரம் பயிலச் செல்வேன். ஓர் ஆன்மிகவாதியாக மட்டுமே அதற்கு முன் எனக்கு அவர் அறிமுகம்.
அக்கினி: அபோதங்களை அணிந்த பறவை
“உன்னைய சின்ன பையனா இளஞ்செல்வன் எங்கிட்ட கைய புடிச்சி ஒப்படைச்சாரு. இப்ப என்னென்னவோ செய்யுற.” அக்கினி சுகுமாறன் – பத்மினி ஆகியோரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த வசனங்களைக் நிச்சயமாக சொல்லிவிடுவர்.
அது உண்மைதான்.
கலைஞனின் தும்பிக்கை
‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது.
சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை
ஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை உருவாக்கி மெல்லதிர்ச்சியைக் கொடுக்கும் சிறுகதைகளைப் புனைந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் வானம்பாடி கவிஞர்களால் ஈர்க்கப்பட்டவர். அவர்கள் போல கவிதைகள் புனைந்தவர். அவர் கதைகளில் மையமாக ஒரு படிமத்தை உருவாக்கி, அந்தப் படிமத்தை வந்தடையும் ஒரு திருப்பம் நிகழும் சம்பவத்தைக் கதையின் முடிவாக்கும் உக்தியை அதிகம் கையாண்டார். அது பரப்பிலக்கிய பாணி. அது இயல்பாக அன்றைய வாசகர்களை ஈர்த்தது. எழுபதுகளில் மலேசியாவில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளரும் அவரே. இவர்களைப் போல சை.பீர்முகம்மதுவும் ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்டு புனைவிலக்கியத்தில் ஈடுபட்டவர்தான்.
மெட்ரோ மாலை: தாவலை வேண்டும் கலை
சென்னையில் நான்கு நாட்கள்
23.11.2019 (சனிக்கிழமை)
எல்லாம் முடித்து உள்ளே நுழைய எத்தனித்தபோது தோள்பையில் கூடுதலாக மூன்று கிலோ இருந்தது. மூன்று கிலோவை குறைத்துவிட்டு வந்தால்தான் உள்ளே நுழைய அனுமதி என வாயிலில் நிற்கும் காவலர் கறாராகவே சொல்லிவிட்டார். என்ன செய்வதென தெரியாமல் வெளியே வந்தபோது ஒரு தமிழகத்துக்காரர் “என்னா பேக்கு பாரமுன்னு சொல்லிட்டான்னா. என்னோட வா,” என்றார். ‘நம்ம பிரச்சினையில இவர் காசு சம்பாரிக்க பாக்குறாரோ’ என சந்தேகம் எழுந்தாலும் அப்போதைக்கு வேறு திட்டங்கள் இல்லாததால் பின் தொடர்ந்தேன். அவர் பெட்டிகளைப் பாதுகாப்பாகப் பையால் சுற்றி அனுப்பும் வேலை செய்பவர். பையைத் திறக்கச் சொன்னார். திறந்தேன். உள்ளே இருந்த சாம்பல் நிற பையைக் கையில் எடுத்தவுடன் பெட்டியில் மூன்று கிலோ குறைந்து ஏழு கிலோவென காட்டியது.
சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்
சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை.
வல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன. விருதென்பது எல்லா விமர்சனங்களையும் அழித்துவிட்டு வழங்கப்படும் ஒன்றல்ல. ஓர் ஆளுமையை அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுடன் அணுகி; அவற்றுடனேயே அவரை ஏற்றுக்கொண்டு கௌரவிப்பது. அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால், விருது பெறும் துறையில் ஒருவரது ஆளுமை மேம்பட்டு இருக்க வேண்டும். சை.பீர்முகம்மதுவின் ஆளுமை அத்தகையதுதான் என்பது எங்களின் பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.
மகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும்
சுனில் கிருஷ்ணன் பருந்துப் பார்வை என்ற தற்காப்புக் கவசத்துடன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். (மகரந்த வெளி) மலேசிய / சிங்கப்பூர் பகுதிகளில் விடுபட்டுப்போனது போலவே இலங்கையின் பகுதியும் பாதியில் தொங்குகிறது.
இலங்கை மலையகப் படைப்புகளில் மாத்தளை சோமுவின் படைப்புகள் ஆய்வில் தவிர்க்க முடியாதவை. ஒரு தோட்டத்து நாதஸ்வரம், சொந்த நாட்டு அகதிகள், கருவறை மற்றும் அவரது சிறுகதைகளை விட்டுவிட்டு இந்தக் கட்டுரை நகர்ந்துள்ளது. அதேபோல எஸ்.பொவை தவிர்த்து நீங்கள் இலங்கை இலக்கியத்தைச் சொல்ல முடியாது. எஸ்.பொவின் கடைசியாக வெளிவந்த யாழினி நாவல் தற்கால அரசியலை முன்வைத்துப் பேசுகிறது. எவ்வகை இலக்கிய விவாதத்திலும் எஸ்.பொன்னுத்துரையின் சிறுகதை, நாவல்களின் வீச்சைத் தவிர்க்கவே முடியாது.
சுனில் கிருஷ்ணனின் மகரந்த வெளி – கடிதம்
‘மகரந்த வெளி’ கட்டுரையை காலையில் வாசித்தவுடன் இதை எழுதுகிறேன். சுனில் கிருஷ்ணனின் உழைப்பின் மீது கொண்டுள்ள மரியாதை அவரது ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதிகரிக்கிறது. சிங்கை – மலேசியப் பயணத்தில் இன்னும் பல அனுபவங்களை இக்கட்டுரையில் அவர் தொகுத்து அளித்துள்ளார். அது மலேசிய – சிங்கை படைப்புகளை இன்னும் நெருக்கமாக அறிய வழியமைத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவான இலக்கிய வடிவங்களை ஒட்டிய பார்வையாக இக்கட்டுரை இடம்பெற்றிருந்தால் இன்னும் கூர்மையான அவதானிப்புகள் கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது. பெயர்களைப் பட்டியலிடுகையில் விடுபடல்கள் சாத்தியம் என்றாலும் ஈழ இலக்கியத்தில் எஸ்.பொவின் பெயர் விடுபடல் கூடாது என்றே எண்ணிக்கொண்டேன்.