
பேய்ச்சி நாவல் வந்தவுடன் பல கண்டனங்கள் முகநூலிலும் புலனங்களிலும் நாளிதழ்களிலும் வந்த வண்ணம் இருந்தன. என்னதான் அப்படி எழுதக்கூடாததும் சொல்லக்கூடாததும் இந்த நாவலில் இருக்கிறது என்பதற்காக வாசித்தேன். பேய்ச்சி நாவல் வாசித்து முடித்ததும் எனக்குள் பலவிதமான எண்ண உணர்வுகள் தோன்றின. இந்த நாவலைப்பற்றிக் கருத்துத் தெரிவித்தவர்கள் இந்த நாவலை முழுமையாக வாசித்தனரா? அல்லது புலனத்தில் வந்த செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு கருத்துரைத்தனரா என்றுத் தெரியவில்லை. ஒரு வாசிப்பாளனாக எனக்குள் எழுந்தவைகளை இங்கு எழுத வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.





