நாரின் மணம்: சிதறடிக்கப்படும் அழகு

cover-10எழுத்து என்பது எனக்கு மிக பிடித்தக் கலைதான். எனினும், அதை எழுத முயன்ற அளவுக்கு வாசிக்க முயன்றதில்லை. அதன் காரணமாகவே எனது முயற்சிகள் பல தோல்வியில் முடிந்திருப்பது இப்போதுதான் புரிகிறது. வாசிப்பது நமக்கான அசல் தன்மையை இழக்கச் செய்யும். நம்மை அறியாமல் நம் எழுத்துகளில் பிறரின் சாயல் வந்தமரும் என நம்பியிருந்தேன். இந்த உச்சநிலை அறியாமையைத் திருத்திக் கொண்ட தளம் வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழாதான். இங்கிருந்துதான் எனக்குப் பத்திகளும் அறிமுகமாயின. கட்டுரைகள் பத்திகளில் இருந்து வேறுபடுவதே எனக்குப் புதிய தகவல்தான்.

Continue reading

பூங்கோதையை யாருக்காவது தெரியுமா?

பூங்கோதை படம்பூங்கோதை என்பவரை அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்காது. நானும் அவரை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அழைத்து கலை இலக்கிய விழாவுக்கு வருவதாகச் சொன்னார். அப்படி நிறைய பேர் அழைத்து முன்பதிவு செய்வதுண்டு. மறுநாளும் அவர் அழைப்பு வந்தது. நிகழ்ச்சிக்கு வருவதில் சிக்கல் இருப்பதாகவும் தனது தம்பி சம்மதித்தால் மட்டுமே அவரும் இணைந்து வர முடியும் என்றார். நிகழ்ச்சிக்கு முன்பு அவரது அழைப்புகள் பலமுறை வந்தன. அனைத்துமே தன்னால் வர முடியுமோ முடியாதோ என்ற தவிப்புகள் அடங்கியவை. நான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இருக்கும்போது அவசியமற்ற அழைப்புகளில் எரிச்சல் அடைவதுண்டு. அழைப்பை எடுக்க தவிர்த்தபோது வட்சப்பில் குரல் பதிவு அனுப்பினார். ‘அன்புள்ள நவீன் சார்’ என தொடங்கியது அந்தக் குரல் பதிவு. தொடர்ந்து அதுபோன்ற பதிவுகள் வந்தன. நிறுத்தி நிதானமாகப் பேசுபவராக இருந்தார். நீளமான குரல் பதிவுகளாக இருந்தன. எனக்கு அதை முழுமையாகக் கேட்பதில் பொறுமை இருக்காது.

Continue reading

தலைமையாசிரியர் மன்றம்: கோஷமும் கொதிப்பும்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

indexவணக்கம் சார். உங்கள் கட்டுரையைப் படித்தேன். என் பள்ளிக் குழுமத்தில் பகிர்ந்தேன். கண்டிக்கப்பட்டேன். என் தோழிகள் பலருக்கும் இது நிகழ்ந்துள்ளது. இப்படித் தனித்தனியாக பேசும்போது பள்ளியில் முடக்கப்படுவோம். ஒன்றாக இணைந்து இப்போட்டியை நிராகரித்தால் என்ன? கடந்த ஆண்டும் இதே போன்ற அறிக்கையே வந்தது. வயிறு எரிகிறது. நிகழ்ச்சி அன்று அனைத்து ஆசிரியர்களும் ஒற்றுமையாக கோஷமிட்டு நிராகரித்தால் உண்டு. முன் வருவார்களா?

மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Continue reading

கடிதங்கள் 2: தலைமை ஆசிரியர் மன்றம்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

நியாயமான மனதின் மனசாட்சியில் உறுத்தலை ஏற்படுத்த வாய்ப்புள்ள கேள்விகள்! பிழைப்புக்கு mail-message-latter-260nw-1067634980முன்பு அனைத்தையும் சரணடைய வைத்துவிட்டஒரு தலைமுறை ஆசிரியர் கூட்டம் இதனையும் எவ்வித எதிர்வினையுமின்றி கள்ள மௌனத்துடன் கடந்து போகலாம். சமூகநலன் சார்ந்த நியாயமான கேள்விகள் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு போவதே   சரி என்பது எனது அபிப்பிராயம்! அதிலும் இது நாம் புழங்குகிற மொழி என்னும் தளம் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு செல்கிற பொறுப்பும் வல்லினத்திற்கு உண்டு என்றே சொல்லலாம்!

எழுத்தாளர் சீ.முத்துசாமி

Continue reading

கடிதம் 1: தலைமை ஆசிரியர் மன்றம்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்ப்பள்ளி வீழ்ச்சியும்

imagesவணக்கம்.  தமிழ் மொழி நம்பவர்களால் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு மட்டும் என் கருத்துரையை எழுதுகிறேன்.

மொழியைக் குறித்து தாழ்வு மனப்பான்மை முதலாவது காரணம். இன்று ஏறக்குறைய தமிழில் உரையாடினால்/ எழுதினால் மதிப்பில்லை என்று தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மணிமன்றங்கள், திராவிடர் சங்கங்கள், இந்து சங்கங்கள் என்று எல்லா நிலையிலுமான தலைவர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். எனவே, மிக எளிதாக மலாய்/ ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். இதைக் குறித்து யாரும் கேள்வி கேட்டால், ‘தமிழ் எல்லாருக்கும் புரியாது’, என்ற அலட்சியமான பதிலைச் சொல்வார்கள். என்னைப் போன்றவர்கள் கேட்டால், ‘வெள்ளைக்கார பெயரைக் கொண்ட உனக்கு தமிழ் மீது என்ன அக்கறை?’ என்று கேட்பார்கள்.

Continue reading

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

001தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ்மொழிப் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் வட்டார ரீதியில் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பர். அதில் தேர்வு பெறுபவர் மாநிலத்தைப் பிரதிநிதித்து தேசிய அளவில் நடக்கும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்வார்கள். இப்படி நடக்கும் போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து அடங்குவதுமுண்டு. அதில் அடிப்படையான சர்ச்சைகள் இரண்டு.

Continue reading

சட்ட: விளையாட்டு ரௌடிகளும் விபரீத கலை முயற்சியும்

Untitled‘சட்ட’ திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வந்தது முதல், சென்று பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். மலேசியத் திரைப்படங்களைச் சில காலமாகவே தாமதித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவதுண்டு. திரையரங்கில் சென்று பார்க்கும்போது அவசியம் இல்லாமல் அது குறித்து ஏதும் கருத்து சொல்ல வேண்டி வரும் (வாயை மூடிக்கொண்டும் இருக்க முடியாது அல்லவா) அப்படி ஏதாவது மலேசியப்படத்தைப் பற்றி எதிர்மறையாக எழுதிவிட்டால் மலேசியாவில் திரைப்படத்துறை வளராமல் இருக்க என்னைப் போன்றவர்கள்தான் நண்டுகளாக இருந்து செயல்படுவதாக வசைகள் பறக்கும். எதற்கு வம்பு?!

Continue reading

பேரன்பு: யாரைக்காட்டிலும் பாப்பா ஆசீர்வதிக்கப்பட்டவள்

CsNf84LWAAEtCyW_15398ராமின் திரைப்படங்களின் கதை என்பது வாழ்வில் நாம் கண்டுகொள்ளாமல் அல்லது கண்டுகொள்ள விரும்பாமல் அகலும் தருணங்களை கேள்விகளாக முன்னிறுத்துபவை. அந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தேடி ஆராய்வதே அவரது திரைக்கதை. திரைப்படத் தொழில்நுட்ப நுணுக்கங்கள் பற்றியும் அதைச் சார்ந்த இசை மற்றும் ஒளிப்பதிவின் பாங்கு பற்றியும் அறியாத நான் சினிமா எனும் கலை வடிவத்தின் மொழி என்னுள் கடத்தும் உணர்ச்சிகளையும் திரைக்கதை தன்னுள்ளே கொண்டுள்ள அரசியலுக்கும் உளவியலுக்கும் எவ்வளவு நேர்மையாக உள்ளது என்பதையும் மட்டுமே கவனிக்கிறேன். தொடர்ந்து ராமின் திரைப்படங்களைப் பார்த்து வருபவனாக எனக்கு அவர் நேர்மையான இயக்குநர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Continue reading

கடிதம்: மீண்டும் கேரளம்

13நண்பர் நவீனுக்கு,

தங்களின் மீண்டும் கேரளம் பயணக்கட்டுரையை வாசித்தேன். தொடக்கத்திலேயே கன்னங்களில் வலிக்க தொடங்கியது. முகம் விட்டு சிரித்து பல நாட்கள் ஆகிவிட்டதை உணர்ந்தேன். விமானத்தில் இடம் மாற்றிக்கொள்ளாமல் கறார் செய்த முதியவர் தொடங்கி, கரப்பான் பூச்சி கலவரம் மற்றும் கடல் உணவு கடையில் நடந்த ‘ருசி’ ஏமாற்றம் என  தங்களுக்கே உரிய நகைச்சுவை கலாட்டாக்களோடு  எழுதியுள்ளீர்கள் கட்டுரையை.

Continue reading

மீண்டும் கேரளம்

04இன்றுதான் கேரளாவில் இருந்து அதிகாலை 6 மணிக்கு வந்திறங்கினேன். வீட்டுக்கு வந்து சேர்ந்து மலேசியனாக மாறியபோது காலை மணி 9. உடனே கொச்சியில் உள்ள Globe Trotters Inn விடுதியின் மீது புகார் கடிதம் அனுப்பிவிட்டுதான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். ஏன் புகார் கடிதம் எனத் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். இவனுக்கு இதே வேலை எனச் சலித்துக்கொள்பவர்கள் ஆகக் கீழே உள்ள தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு சிறப்பான முறையில் கேரளா சென்று வரலாம்.

Continue reading