மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்

01pic-269x300மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில் எழுந்த குரல் சண்முகசிவாவினுடையது.

Continue reading

பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண ஆளுமை

“யார்தான் சாக முடியும்? உடம்பு மண்ணுக்குப் போறது, சாவா? நினைவுகளுள்ள மனுஷர் என்னைக்குமே ஜீவிக்க முடியுமே… அதுதான் அமரத்துவம்.” – பிரபஞ்சன் (அமரத்துவம் சிறுகதையில்)

பிரபஞ்சன் 01ஓர் எழுத்தாளர் இறந்தவுடன் ஏற்படும் வெறுமையின் தவிப்பில் அவரது வாசகர்கள் பல சமயங்களில் மிக அதிகமாகவே அவ்வாளுமையைக் கொண்டாடித் தீர்த்துவிடுவதுண்டு. படைப்புகளின் எண்ணிக்கை, அந்த எழுத்தாளர் என்னவாக வாழ்ந்தார், நட்பில் அவர் காட்டிய நெருக்கம், இலக்கியத்தில் நேர்மை, சமரசமற்ற போக்கு, எளிமை என அனைத்துமே கலந்த நினைவுகள் உருவாக்கும் சமநிலையற்ற மனம், மிதமிஞ்சிய சொற்களால் அவரைப் போற்றத் துடிக்கும். இலக்கியவாதி கொண்டாடப்பட வேண்டியவன்தான். அதுவும் கடைசிக் காலம் வரை இலக்கியத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த பிரபஞ்சன் போன்ற ஆளுமைகள், இளம் தலைமுறையினருக்கு என்றுமே நல்லுதாரணங்கள். ஆனால் ஓர் இலக்கிய வாசகனின் கவனம் இலக்கியவாதியின் மரணத்திற்குப் பின்பும் அவரது படைப்பில்தான் குவிந்திருக்கும். அதன் வழியாக மட்டுமே அவன் அவரது ஆளுமையைத் தனக்குள் சமநிலையுடன் கட்டமைப்பவனாக இருக்கிறான்.

Continue reading

கடிதம்: வெள்ளைப் பாப்பாத்தி

indexநிஜத்தில் ஒரு பாப்பாத்தி என் மீது  சில கனங்கள் வந்து அமர்ந்துவிட்டுச் சென்றது போல இந்தக் கதையை வாசித்த நிமிடங்கள் முழுக்க  தோன்றியது. ஒரு பாப்பத்தியோடு கதைப் பேசிய உணர்வுதான் அது. ஒரு குழந்தையின் வெண்மையான மனப்போக்கிற்கும், கரை படியாத சிந்தனைக்கும் நீங்கள் தெரிவு செய்த அந்தப் பாப்பத்தியின் வெள்ளை நிறம் எத்தனைப் பொருத்தம். பொதுவாக வண்ணம் நிறைந்த பாப்பத்திகளையே விரும்பும் என்னைப் போல பல வாசகர்களிடம் ஒரு வெள்ளைப் பாப்பாத்தியின் அழகைப் பேசிய இந்தக் கதை ஒரு தேவதைக்கான கதை.

Continue reading

கண்டநற் சக்திக் கணமெலாம் நான்

01இதுவும் மற்றுமொரு நாள்தான் எனும் தத்துவத்தையெல்லாம் நான் புதிய ஆண்டின் தொடக்கத்தில் சட்டை செய்வதே இல்லை. நான் இந்து புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு என எதையும் கொண்டாடுபவன் அல்ல. எந்த மத, இன பண்டிகைகளையும் விரும்புவதும் இல்லை. ஆனால் வருடத்தின் முதல் திகதியை ஒரு பண்டிகையைப்போல அவ்வளவு மெல்ல ரசித்து நகர்த்துவேன். எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்கலாம் என்றும் எல்லா கவலைகளும் தீர்ந்துவிட்டது என்றும் இனி எல்லாம் நலமாக நடக்கும் என்றும் நானே எனக்குள் சொல்லிக்கொள்வேன். புதிய சட்டை போட்டுக்கொள்வேன். அது தோலை நீக்கி புதுத்தோலை போர்த்திக்கொண்டதுபோல தோன்றும். புதிய வருடத்தின் மற்றுமொரு உற்சாகம் கடந்து சென்ற வருடத்தை முழுக்க அலசிப்பார்ப்பதில் தொடங்கும். அநேகமாக அந்த நாள் முழுவதும் அவ்வாறு கடந்தவற்றை எண்ணி அவற்றை ஒரு கனவுபோல கடப்பதிலேயே முடியும். அக்கனவு புதிய வருடத்தை கொஞ்சம் கவனமாக நகர்த்திச் செல்ல உதவக்கூடியதாக மாறும்.

Continue reading

மனசலாயோ : கடிதங்கள் 4

indexகேரளாவிற்கு மூன்று முறை பயணம் செய்திருக்கிறேன். நீண்ட கால இடைவெளிகளில். சட்டென்று பார்ப்பதற்கு மாற்றம் இல்லாததுபோலிருக்கும். ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் பெரும் மாற்றம். நவீனின் மனசிலாயோ தொடரைப் படித்த பின்னர் நான் அறிந்த சில விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் எனத் தோன்றியது.

முதலாவது, பூமி முழுக்க பருவநிலை மாறிவிட்டது. குளிர்காலத்து காலை நேரக் குளிர்ச்சியை கேரளாவில் இப்போது எல்லா இடங்களிலும் அனுபவிக்க முடியவில்லை. மலைப் பகுதிகளில்தான் நடுங்க வைக்கும் காலைக் குளிரை உணரமுடிகிறது. மற்றது வேகமாக நடைபெற்று வரும் நகரமயமாக்கலில் கேரளத்தின் பசுமைச் சூழல் மெல்ல மெல்ல கண்ணுக்குச் சட்டென்று தெரியாமல் குறைந்து வருகிறது.

Continue reading

மனசலாயோ : கடிதங்கள் 3

புனிதாதிரு.நவீனின் பயணக்கட்டுரை  மிகவும் உயிரோட்டமாக இருக்கும். அலங்காரச்சொற்கள் கிடையாது. ஜிகினா தூவல் கிடையாது. உள்ளதை உள்ளபடியே ஒரு திரைப்படமாக சலிப்புத்தட்டாமல்  வாசகரின் முன் வைத்து எழுதும் முறை மிகவும் வியக்கத்தக்கது. ஒரு வாசகரைப் கைப்பிடித்து  அழைத்துச்சென்று ஒவ்வொரு காட்சியை நேரடியாக பார்த்த அனுபவம் கிடைக்கும். அவரின் எழுத்துக்கள் ஓவ்வொன்றும் வாகனின் கண்கள் எனலாம். நாமே சென்று நேரடியாகப்பார்த்தாலும் இவ்வளவு  கூர்மையாக் கவனிப்போமா என்பது சந்தேகமே. சிகிச்சைச்சென்றும் அடங்கமாட்டாரா  இந்த சார்? காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் நடனமணியை போல கையில் கட்டிக்கொண்டே ஆடுகிறாரே எனக் குழப்பம் வந்தது.   ஆனால் கட்டுரைப்படிக்கப்படிக்க நான் சுயநலவாதியாக மாறிவிட்டேன். அவரின் எழுத்தைப் பார்வையாககொண்டு நானும் எல்லாக்காட்சிகளையும்  இரசிக்க ஆரம்பித்தேன் .

Continue reading

மனசலாயோ : கடிதங்கள் 2

46670559_299852633983828_6854628398367506432_nஎழுத்தாளர் நவீன் அவர்களுக்கு வணக்கம், நல்ல படைப்புகளை வாசிக்கும்போது நானுமே என்னை நல்ல வாசகனாக நினைத்துக்கொள்ளுமபடியான ஒரு உணர்வு என்னுள் ஏற்படுகிறது. அதன் மீதான புரிதல் நமக்குள் ஒரே இடத்தில் நிலையாய் நின்று விடுவதில்லை. அது ஒரு கொடியைப் போல படர்ந்து பரவிக் கொண்டே செல்லும். அப்படி ஒரு ஆழமான புரிதல் நம்மில் நின்று வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு படைப்பாகத்தான் உங்களின் இந்த பயணக் கட்டுரையை நான் பார்க்கிறேன். பொதுவாக நான் யாருடைய படைப்புகளையும் வாசித்து விமர்சித்ததும், கருத்துரைத்ததும் இல்லை. காரணம் அந்த அளவிற்கு நான் ஒரு தீவிர வாசகரல்ல.

Continue reading

மனசலாயோ 12: மின்னல் பொழுதே தூரம்

1203கொச்சியில் ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு மறுநாள் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று மலேசியா திரும்பலாம் என்றே திட்டம். ஆனால் கொச்சிக்கு ஏற்றிச்சென்ற காரோட்டி சொல்லியே அங்கும் ஒரு விமான நிலையம் இருப்பதும் அங்கிருந்தும் மலிண்டோ விமானம் கோலாலம்பூர் வருவதும் புத்திக்கு உரைத்தது. அது முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம்.  ஒரு கணினி மையத்தில் இறங்கி டிக்கெட்டை திருவனந்தபுரத்திலிருந்து கொச்சினுக்கு மாற்றினேன். ஆனால் பணத்தை தொலைபேசியின் வழியே அழைத்து பல விபரங்களை உறுதி செய்தபின்னரே செலுத்த முடியும்.

Continue reading

மனசலாயோ 11: ஞாயிறு போற்றுதும்

0மறுநாள் மந்தமாக விடிந்தது. திகதி, நேரம் மறந்திருந்தேன். மெதுவாக எழுந்து வெளியே சென்ற போது படகுகள் காயலில் மிதந்துகொண்டிருந்தன. பிள்ளைகள் புத்தகப் பைகளுடன் படகில் சென்றுகொண்டிருந்தனர். கொண்டு வந்திருந்த டீ சட்டைகளை துவைக்கவில்லை என்பதால் புதிதாக சில வாங்கியிருந்தேன். குளித்துவிட்டு அணிந்தபோது உற்சாகம் தொற்றிக்கொண்டது. காற்றில் இன்னும் அதிகாலையின் குளிர்ச்சி இருந்தது. பிளாக்கி (நாய்க்குட்டி) யாரோ புதியவர் ஒருவரிடம் கொஞ்சிக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் “தொ வரேன்” என்பதுபோல வாலை ஆட்டியது.

Continue reading

மனசலாயோ 10: தாயார் பாதம்

10 -1சுற்றுலாவில் இரண்டு வகை உண்டு. முதலாவது மனமகிழ்ச்சிக்காகச் சுற்றுலா செல்வது. மற்றது அனுபவத்திற்காகச் செல்வது. ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்றெல்லாம் இல்லை. வட்டமிடும் கருடனை இங்கிருந்து ரசிப்பது ஒரு ரகம் என்றால் அதனுடன் சேர்ந்து அது என்னவாக இருந்து உலகைப் பார்க்கிறது என அறிய முயல்வது மற்றுமொரு வகை. நான் தனியாகச் செல்கையில் இரண்டாவது ரகத்தையே தேர்ந்தெடுக்கிறேன். அதில் ஒரு வசதி உண்டு. எந்த வசதியின்மை ஏற்பட்டாலும் யாரிடமிருந்தும் முகச்சுளிப்புடன் அசூசையின் குரல் ஒலிக்காது. அவ்வகை முணுமுணுப்பு மொத்தப் பயணத்தையும் கெடுக்கும் ஒலி. அதைவிடக் கொடுமை சகித்துக்கொள்வதாகக் காட்டப்படும் சாந்தமுகம். பயணம் என்பது பயணம்தான். அங்கு எதுவும் நடக்கும். அப்படி நடக்கும் ஒவ்வொன்றுமே பயணம் கொடுக்கும் அனுபவம்தான். புகார்கள் இன்றி  நிகழ்வதை கவனிப்பதே  பயணம் நம்முள் உருவாக்கும் இன்னொரு மாயவழியை அனுமதிக்கும் சூத்திரம்.

Continue reading