குழந்தைகள் நூல் பதிப்பித்தல்

 
childrenஇன்று முழுவதும் பந்திங் நகரத்தில் கழிந்தது. பெரும் முதலீட்டில் பதிப்பகத்துறையில் இயங்கப்போகும் நண்பர் ஒருவருடன் கலந்துரையாடல். முகநூல் மூலமே அறிந்து அழைத்தார். அவர் மகள் என் வாசகியாம். வல்லினம் குறித்து விரிவாக அறிந்து வைத்திருந்தார். நல்ல நூல்களை அடையாளம் காண்பது பற்றி நான் எழுதிய சிறுகுறிப்பின் அடிப்படையில் மேலும் சில தகவல்கள் கேட்டார். எனக்கு அவ்வளவு அனுபவம் இல்லை. ஆனால் தோழர் வ.கீதா மலேசியா வந்திருந்தபோது குழந்தைகள் நூல்கள் பதிப்பித்தல் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். அவர் பதிப்பகத்தில் உருவான மாணவர் நூல்களை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அத்தனை நுட்பமாக மாணவர்களின் உளவியலை கவனத்தில் வைத்து உருவான ஒரு தமிழ் நூலையும் நான் மலேசியாவில் பார்த்ததில்லை. நண்பர் குழந்தைகள் நலனின் அக்கறைக்கொண்டிருந்ததாலும் தரத்தில் சமரசம் செய்துக்கொள்ளாததாலும் சில விடயங்களைப் பேசினோம் அதன் சாரம். அவர் டெல்லி மாணவர் நூல் கண்காட்சிக்குச் சென்ற அனுபவம் கொண்டிருந்ததால் பல புதியத்தகவல்களைக் கூறினார். பேசப்பட்டதின் சாரத்தின் அவசியமானவை:

மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மீதான அவதூறுக்கு முற்றுப்புள்ளி!

bஅண்மையில் மை ஸ்கில்ஸ் அறவாரியம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களை தங்கள் அரவணைப்பில் வைத்து, அவர்களை மீள்உருவாக்கம் செய்யும் முயற்சியில் இருக்கும் அந்த அறவாரியத்தின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பூச்சோங் முரளி போன்ற சிலரால் பரப்பப்பட்டது. சமூகத்தில் பல நல்ல செயல்திட்டங்களை உருவாக்கி முன்னெடுக்கும் வழக்கறிஞர் பசுபதி அவர்கள்மேல் கொண்ட தனிப்பட்ட காழ்ப்பால் பூச்சோங் முரளி பலமுறை இதுபோன்ற அவதூறுகளைப் பலகாலமாகப் பரப்பி வந்தது நாம் அறிந்ததே. இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் பரவிக்கொண்டிருந்த சூழலில் இது அவதூறு பரப்பும் நோக்கம் என்று உறுதியாக நம்ப தண்டிக்கப்பட்ட மாணவனின் தந்தையே சாட்சியாக நேர்காணல் வழங்கியுள்ளார்.

Continue reading →

பிபிசி தமிழோசையில் நேர்காணல்: மலாயா தமிழ் நூலகம் படிப்படியாக மூடப்படுமா?

OLYMPUS DIGITAL CAMERA

பி.பி.சி தமிழோசையில் மலாயா பல்கலைக்கழகத் தமிழ் நூலகத்தின் நிலை குறித்து நேர்காணல் செய்தார்கள். கீழே அதன் இணைப்பு உள்ளது.

பிபிசி தமிழோசை நேர்காணல்

Continue reading →

கடிதம்: தமிழ்ப்பள்ளி பற்றிய எனது அனுபவப் பகிர்வு!

70,80,90-ஆம் ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளியில் படித்தால் மலாய் மொழியில் தேர்ச்சிப் பெற முடியாது என்ற எண்ணம் பரவலாக இருந்தது. என் உறவினர் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தும், மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறாததால் ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. 8 முறை ஜூலை தேர்வு எழுதியும் தேர்ச்சி அடையவில்லை. அதனால் என் அம்மாவுக்கும் என் உறவினருக்கும் இந்த எண்ணம் தங்கள் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்ற வெறி இருந்துகொண்டே இருந்தது. என் அம்மா நான் தமிழ் கற்க வேண்டும் என்பதற்காக தமிழ்ப்பள்ளியில் சேர்த்தார். என் உறவினர் மலாய்மொழிக்காகவே அவர் மகனை தேசிய பள்ளிக்கு அனுப்பினார். இருவருமே மலாய் மொழிக்கென்று எங்கள் இருவருக்கும் ரொம்பவே மெனக்கெட்டார்கள். ஊக்கம் கொடுத்தார்கள். என் உறவினருக்கு நான் தமிழ்ப்பள்ளி என்பதால் ரிமூஃ கிளாஸ் போவேன் என மிகவும் எதிர்ப்பார்த்தார். எஸ்.பி.எம் தேர்வு வந்தது. தமிழ்ப்பள்ளியில் படித்த நான் ஏ2 எடுத்தேன். மறு ஆண்டு எஸ்.பி.எம் எழுதிய என் தேசியப் பள்ளி தம்பிக்கு மலாய் மொழியில் 7டி கிடைத்தது. தமிழ்ப்பள்ளிக்கும் தேசிய மொழியில் புலமை இல்லாமல் போவதற்கும் சம்பந்தமே இல்லை என யார் வந்தாலும் சத்தியம் செய்வேன். தமிழ்ப்பள்ளி சேர்க்க பிரச்சாரம் எல்லாம் செய்கிறார்கள். வீட்டில் யாரும் இப்பொழுதெல்லாம் தமிழ்ப்பேசுவதில்லை. ஆங்கிலம் தான் வாழ்கிறது. பொதுவில் ஒரு கருத்தை எடுத்துரைக்க ஆங்கிலம் அவசியம். அதே போல, நமது இனம் பற்றிய அறிவை கூர்மையாக்கிக் கொள்ள  தாய்மொழிக் கல்வி அவசியம்.  அதனை தமிழ்ப் பள்ளிகள் தான் தர முடியும்.

மோகனா

உதயசங்கரின் நேர்காணல்; எதிர்வினை

Uthaya-Sankar-SB_webஉதயசங்கர் எஸ்.பி தமிழ்ப்பள்ளிகள் குறித்து கூறிய அவதூறுகளுக்கு இன்னும் அவர் மன்னிப்பு எதுவும் கேட்காத சூழலில் தொடர்ந்து தனது முகநூலில் இப்பிரச்சனை குறித்து பேசுபவர்களை நக்கல் அடித்து வருகிறார். பொதுவாகவே உதயசங்கர் போன்ற அற்பமான அடையாளத்தேடிகளின் பாணி அது. இந்நிலையில் அவரது நேர்க்காணல் ஒன்றை வாரப்பத்திரிகை ஒன்று தன் அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ளது. நடப்பு சூழல் குறித்து உதயசங்கர் சொல்லும் பதில்கள் அனைத்துமே பசப்பலானவையாக உள்ளது. உதயசங்கர் பதில்களின் அடிப்படையில் இடைக்கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டியது நேர்காணல் செய்தவரின் பொறுப்பு. ஆனால், நேர்காணல் இன்னும் அச்சுக்கு வராத சூழலில் முகநூலில் அவர் பகிர்ந்திருந்த பதில்களைக் கொண்டு நாம் சில எதிர்க்கேள்விகளைக் கேட்கவேண்டியுள்ளது.

Continue reading →

உதயசங்கர் எஸ்.பி … (கடிதங்கள்)

தமிழ்ப்பள்ளி குறித்த தங்கள் அக்கறை என்னை வெகுவாகக் கவர்ந்தது. கட்டுப்படுத்தப்பட்ட ஊடகத்தில் இருப்பதால் உடன்வர முடியவில்லை. ஆனால் மனதார வாழ்த்துகிறேன்.

உங்கள் நண்பன்

Continue reading →

“திருட்டுத்தனத்தைப் போதிக்கும் தமிழ்ப்பள்ளிகள்” – உதயசங்கர் எஸ்.பி

UthayaSBநம் நாட்டில் பல புத்திஜீவிகளுக்குத் தூங்கி எழுந்தவுடன் சட்டென ஞானம் பிறந்து உளறுவதைப் பார்த்துள்ளேன். அப்படிச் சமீபத்திய உளரல்களில் முக்கியமானது தமிழ்ப்பள்ளியை இந்நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட்டு தேசியப்பள்ளி என்ற ஒற்றை அடையாளத்துடன் இயங்குவது. அதன் மூலம் தேசியப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவது. அப்படியே இந்நாட்டில் தமிழை வளர்த்துவிடுவது.

Continue reading →

வனம் புகுதல்

jungle-forest

 

 

 

 

 

நெடுநாள் வருகை செய்யாத வனத்தில்
விட்டுச்சென்ற மரங்கள்
பழைய அன்புடன் நலம் கேட்டன.
கொடிய இருள் குறைந்து
ஆங்காங்கு புதிதாய் அமைக்கப்பட்ட கூடாரங்களில் குரங்குகள்.
ஆச்சரியமாக கைத்தொலைப்பேசியில்
சிக்னல் கிடைக்கிறது.
அதற்குமேல் பாதை இல்லாத
மைய வனத்தில்
யாரேனும் அலுவலகம் நடத்திக்கொண்டிருப்பார்களோ
என்ற அச்சம் தன்னிச்சையாக எழுவதை சொன்னபோது
மாயா உறக்கத்தில் இருந்தாள்.

Continue reading →

சிற்றிதழ்களின் அரசியலும் ஆய்விதழின் தேவையும்

தமிழில் உருவான சிற்றிதழ் சூழல் முயற்சியோடுதான் மலேசிய சிற்றிதழ் சூழலை பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது. இலக்கியம், கலை, இதழியல் என தமிழகத்தை எப்போதும் முன்னோடியாகக் கொண்டிருக்கின்ற மலேசியத் தமிழ் கலை இலக்கிய உலகத்தை அறிய இந்த ஒப்பீடு அவசியமாகிறது.

Continue reading →