பொதுவாகவே சிற்றிதழ் குறித்த மரபான ஒரு மனப்பதிவு நம்மிடையே உண்டு. சிற்றிதழ் என்பது அதிகம் விற்கப்படாத, தரம் குறைந்த காகிதத்தில் தயாராகி, விளம்பரம் இல்லாமல், 2000 அல்லது அதற்கும் குறைவான பிரதிகள் அச்சாகி, வண்ணங்கள் இல்லாமல் கறுப்பு வெள்ளையில் வெளிவரும் பிரதி என்பதை வரையறைகளாகச் சொல்வதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கப்படும் அளவீடுகள். ஆனால் இந்தப் புறத்தோற்றத்துக்கான அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் ஆராயப்படுவதில்லை.
கடிதம் – கிருஷ்.ராமதாஸ்
‘காத்திருப்பதும் சுமப்பதும் காயப்படுவதும் இதழுக்காகத்தான் என்றால் எனக்கு அது சம்மதமாகவே இருந்தது.’
வணக்கம் நவீன். இணையத்தில் சிற்றிதழ் தேடித் தேடி, பித்துப்பிடித்து அலையும் கிருஷ்.ராமதாஸ், துபாய் (பெரம்பலூர், தமிழ்நாடு) எழுதுவது. நல்வாழ்த்துகள். நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல இணையத் தேடலின் போது ‘ஜெயமோகனுக்கு எதிர்வினை’ என்ற தலைப்பைப் பார்த்த உடன் உங்கள் இணையப் பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கிறேன். ஏன் மேய்ந்து என்ற வார்த்தை? உண்மை அதுதான். நான் இலக்கியவாதி இல்லை. எழுத்தாளன் இல்லை. ஆனால் 1980களில் இருந்து சிற்றிதழ்களின் மீது அளவற்ற பிரியமும், வெறியும் கொண்டவன். எப்படி அவை என்னை ஈர்த்தன என்று இன்றளவும் விடை காண முயற்சிக்கிறேன்.
ஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது…
இரு மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தனது அகப்பக்கத்தில் ‘சிற்றிதழ் என்பது…‘ எனும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் முதல்பகுதி என் குறித்த வசை. மற்றவை சிற்றிதழ் குறித்து நான் ‘பறை’ ஆய்விதழில் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையும் அதையொட்டிய சிற்றிதழ் வரலாறும் எனச்சென்றது. வல்லினம் கலை இலக்கிய விழா 7, அதனை ஒட்டிய பயணங்கள், சொந்த வாழ்வின் சிக்கல்கள் இவற்றோடு சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து தொடர்ந்து எழுதவேண்டி இருந்ததால் தொடர்ச்சியான வாசிப்பு,எழுத்து என இரண்டு மாதங்கள் ஓடியே போனது.
மாயாவின் ஜனனம்
ஆதிக்கும் ஆதியில் உலகில் இருந்தது என்னவென்று கேட்ட மாயாவிடம்
இருள் என்றேன்
அவள் வெளியே விரல்களை நீட்டி
அந்த இருளா என்றாள்.
வாகனங்களும் தெருவிளக்கும் நட்சத்திரங்களும்கூட இல்லாத
மாபெரும் ஆதி இருள்
அகப்படாது என்றேன்.
கதவையும் சன்னல்களை அடைத்து
இந்த இருளா என்றவள்
நான் பதில் சொல்லும் முன்பே
விளக்கின் விசைகளை அடைத்து
எஞ்சியிருந்த சின்னஞ்சிறிய தீபத்தையும் ஊதினாள்
அது அளவிட முடியாத
அடர்தியான இருள் என்றேன்
அருகில் வந்தவள்
இந்த இருளா என்றாள்
நான் அவள் முகத்தைத் தடவித்தேடி
மூடியிருந்த கண்களை அடைந்தேன்
ஆதி இருள்
இரு சிறு விழியளவு
அவளிடம்
அகப்பட்டிருந்தது.
***
ஓஷோவும் அரியட்னா குடியர்ரெஸும்
ஓஷோவின் பிரபலமான ஒரு குட்டிக்கதை இன்று காலை நினைவுக்கு வந்தது.
ஒரு பெரும் பணக்காரன் தன்னிடம் உள்ள செல்வங்கள் அனைத்தையும் தங்கக்கட்டிகளாக மாற்றி ஒரு துறவியின் காலடியில் வைக்கிறான். துறவியிடம் அந்தத் தங்கங்களையெல்லாம் பெற்றுக்கொண்டு தான் இழந்திருக்கும் மகிழ்ச்சியை எப்படியாவது மீட்டுத் தரும்படி கேட்கிறான். துறவி சட்டென அந்த தங்கக்கட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அந்தத் துறவி போலியானவர் எனக் கருதிய பணக்காரரும் பின் தொடர்ந்து துரத்துகிறார். துறவி ஊர் முழுவதும் சுற்றி ஓடுகிறார்; மலை, நதிகளைக் கடந்து ஓடுகிறார். செல்வந்தரும் தன் வாழ்நாளெல்லாம் சம்பாதித்த பணம் ஒரே நிமிடத்தில் கொள்ளைப்போனதினால் விடாமல் துரத்துகிறார். இறுதியில் துறவி எங்கு அமர்ந்தாரோ அங்கேயே வந்து அமர்கிறார். பணக்காரரும் மூச்சிரைக்கத் துறவியின் முன் நிற்கிறார். துறவி புன்னகையுடன் அவரிடம் அந்தத் தங்கக் கட்டிகளைத் தருகிறார். ‘இப்போது உனக்கு எப்படி இருக்கிறது,’ எனக் கேட்கிறார்.
ஜகாட் : ஒரு பார்வை
நேற்று ‘ஜகாட்’ திரைப்படத்தின் சிறப்புப் திரையிடலுக்குப் போயிருந்தேன். இவ்வாறு நான் போகும் இரண்டாவது திரைப்படம் இது. முதல் படம் ‘வெண்ணிர இரவுகள்’. அதில் கதாநாயகி எழுதும் வலைப்பூவின் ‘குரங்கு – அணில்’ கதை தொடரை எழுதும் பணி எனது. ‘ஜகாட்’ திரைப்பட கதை உருவாக்கத்தில் நான் பங்கு பெற்றிருந்தேன். இயக்குனர் சஞ்சை கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்படத்தின் கதையை ஒரு சிறுகதையாக எழுதியபோதே முழுமையாக அதன் அசல் தன்மையை உள்வாங்க முடிந்தது. அதன் அரசியல் எனக்கு உவப்பானதாக இருந்தது. இன்றோடு மூன்றாவது முறை அப்படத்தைப் பார்க்கிறேன். இது செறிவு செய்யப்பட்ட இறுதி வடிவம். முந்தைய இரண்டு வடிவங்களைக் காட்டிலும் கூடுதல் விறுவிறுப்பு இணைந்துள்ளது.
‘ஜகாட்’ திரைப்படத்தை ஏன் திரையரங்கில் பார்க்க வேண்டும்… 3
கல்விச்சூழலை விமர்சிப்பதாக இதுவரை தமிழில் சில படங்கள் வந்துள்ளன. இதில் ‘சாட்டை’ மற்றும் ‘தங்கமீன்’ திரைப்படங்கள் மீண்டும் ‘வெற்றி’ எனும் போதை குறித்தே பேசுகின்றன. கெட்டிக்காரன் என்பவன் ஏதோ ஒன்றில் வெற்றிப்பெறுபவன் எனும் பழைய சூத்திரத்தைப் புதிய அம்மியில் போட்டு அரைத்து கொடுத்திருக்கும் படங்கள் அவை. அமீர் கானின் ‘taare zameen par’ மற்றும் ‘3 idiots’ இரண்டும் முக்கியமான திரைப்படங்கள். மிக கவனமாகக் கல்விச்சூழலின் மீது விமர்சனத்தை வைப்பவை. அமீர் கான் போன்ற கலைஞர்களால்தான் அது சாத்தியமாகிறது. அதற்கு மிக முக்கியக்காரணம் அரசியல் தெளிவுதான்.
லதா சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள் (5)
தமிழகத்தில் ஒருமாதம் தங்கியிருந்த காலம் எனக்கு முக்கியமானது. அக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருந்த முக்கிய வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வதில் முழு ஈடுபாடு காட்டினேன். அழைத்துச்செல்லும் நண்பர்களிடம் வைத்த கட்டளை ஒன்றுதான். தமிழகத்தில் சராசரி பக்தன் ஒருவன் எவ்வகையில் மூலஸ்தானத்தை அடைய அவகாசம் எடுக்கிறானோ அந்த வழிதான் எனக்கு வேண்டும் என்றேன். மலேசியாவிலிருந்து தமிழகக் கோயில்களுக்குச் செல்பவர்கள் ‘எக்ஸ்பிரஸ் பாதை’ என தனியாக ஒதுக்கப்பட்ட பாதைகளில் கூடுதலான கட்டணம் செலுத்தி வழிபட்ட சிறப்புகளையெல்லாம் வாயில் எச்சில் ஒழுகச் சொல்வதைக் கேட்டுள்ளேன். நான் செல்வது கடவுளை அறிய அல்ல; அங்குள்ள மனிதர்களை அறிய என்பதில் கவனமாகவே இருந்தேன். வழிபாட்டின் இறுதி இடமாக திருப்பதிக்கும் சென்று யாரோ கால்மட்டில் படுத்துக்கிடந்து மலேசியா வந்து சேர்ந்தேன்.
ஜகாட் : மலேசியாவின் முதல் தமிழ் லும்பன் திரைப்படம்! … 2
ஜகாட் திரைப்படம் குறித்து… 1
மலேசியத் தமிழ்த்திரைப்படங்கள் குறித்த எதிர்மறையான பார்வைகளே பெரும்பாலும் வருவதுண்டு. ஏதோ மலேசியக் கலைஞர்களுக்கு ஆதரவு தருகிறோம் என்ற ரீதியில் பேசும் ரசிகர்களைப் பார்க்கும்போது எரிச்சலாக வரும். கலைஞர்களும் ‘உள்ளூர் கலைஞர்களுக்கு ஆதரவு தாங்க… ஆதரவு தாங்க…’ என நேர்க்காணலில் கெஞ்சுவதைப் பார்க்கையில் இவ்வளவுதானா இந்தப்படைப்பாளியின் தரம் என வருத்தமாகவே இருக்கும். இதே நிலையைதான் நான் இலக்கிச்சூழலிலும் ஒப்பிட்டுப்பார்க்கிறேன். இவ்விடயத்தை இரண்டு விதமாக அணுக வேண்டியுள்ளது.



