நவீன கவிதை வாசிப்பு : பகுதி 8

IMG_7318 copyமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

நவீனக் கவிதைக்கென்று திட்டவட்டமான வடிவம் ஒன்றில்லை. அதன் முழு நோக்கமும் சொற்கள் மூலமாகக் கவித்துவத்தை அடைய முயல்வதுதான். அதீத மொழி ஆற்றல் மூலமாக உருவாக்க முடியாத கவித்துவ அழகியலை சில கவிஞர்கள் மிக எளிய சொற்கள் மூலமாக உருவாக்கிவிடுவதுண்டு. இத்தகைய கவிதைகள், மொழி அல்லது வடிவப் பயிற்சியால் அடையப்படுவது அல்ல. கடலில் நீந்தி அதை அறிவது ஒரு முறை என்றால் இவர்கள் கரையில் நின்று கூர்ந்த நுண்ணுணர்வுடன் அதை அவதானிப்பவர்கள். சில சமயம்  நீந்துபவனைவிட கரையில் காத்திருப்பவனுக்குக் கடல் புதிய தரிசனங்களைத் தரலாம்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 7

devadatchanமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

கவிஞர் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைப்பதாக வாசித்தேன். நவீன கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் என் வாசிப்புக்கு மிக உவப்பானவராக தேவதச்சன் இருந்தார். தமிழில் எழுதப்பட்ட நல்ல கவிதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதமான வயதில் பிரமிளின் அடுக்கடுக்கான படிமங்கள் அடங்கிய முறுக்கிய மொழியும் ஆழ்ந்த வாழ்வனுபவங்களின் உச்சமான கனத்தைப் பிழிந்துகொடுக்கும் தேவதேவனின் கவிதைகளும் தொடர் வாசிப்பிற்குச் சோர்வை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான் தேவதச்சனின்  கவிதைகள் அறிமுகமாயின. நவீன கவிதைகள் குறித்த ஒரு கட்டுரையில் அவரது ‘காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை’ என்ற கவிதை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதுதான் நான் வாசித்த அவரது முதல் கவிதை.

Continue reading

வகுப்பறையின் கடைசி நாற்காலி : பிரளயன் அவர்களின் விமர்சனம்

pralayan‘வல்லினம்’ இணைய இதழின் ஆசிரியர், ‘பறை’ எனும் ஆய்விதழின் ஆசிரியர், ‘யாழ்’ எனும் மாணவர் இதழின் ஆசிரியர், கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்,திறனாய்வாளர், சினிமா வசனகர்த்தா, பதிப்பாளர் என பன்முகம் கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் நவீன், தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிற கட்டுரைகளே இவை.

Continue reading

சாகாத நாக்குகள் – 4 : கிளர்ந்த கொங்கை

imayamமுற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன்
நேற்றோ நாளையோ இல்லாத
இன்றானவன்
அறிதல் இல்லாத அவன் தொடுதலில்
கேள்விகளும் இல்லை
பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி, தந்தை பெயர்
பரிமாறிக்கொண்ட முத்தங்களில்
தகவல்கள் பொதிந்திருக்கவில்லை
                                                                                                                                                                                                           – லீனா மணிமேகலை

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 6

IMG_3397மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

கவிதை வாசகனின் மூலமே தன்னை முழுமைப்படுத்திக்கொள்கிறது. சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என வளரும் பழந்தமிழ் இலக்கியங்கள் எதற்குமே அதன் ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை. பின்னால் வந்த பல தமிழ் அறிஞர்களே அவற்றை வாசித்துப் பொருள் கூறினர். தமிழில் மிக முக்கிய ஆய்வாளரான முனைவர் துளசி ராமசாமி சங்கப்பாடல்களில் வரும் திணை, துறை, பாடியோர், பாடப்பட்டோர் போன்ற அடிக்குறிப்புகள் எல்லாமே பிற்கால சேர்மானம் என்று சொல்கிறார். ஆக, இன்று ஒரு நவீன வாசகன் பொருளுரையின் உதவி இல்லாமல் அவற்றை வாசித்து தனது அனுபவத்தின் திரட்சியில் அவ்விலக்கியங்களுப் பொருள் கூற முழு சுதந்திரம் உண்டு. அது முற்றிலும் வேறு பொருளாகவும் இருக்கலாம். இலக்கியத்திற்கே உள்ள சுதந்திரம் அது.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 5

pramil_1865025hமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

விவாதங்களால் அல்லது அறிவைச் சுரக்கும் நூல்களால் மட்டுமே அனைத்து உண்மைகளையும் அறிந்துகொள்ள முடியும் என ஒரு கருத்து உள்ளது. நிரூபிக்கப்பட்டதை மட்டுமே பேசமுடியும் அதுவே அறிவு என பல தோழர்கள் பேசுவதை நான் கேட்டுள்ளேன். என்னளவில் அவை அனைத்தும் சாத்தியமற்றவை. உண்மையில் தர்க்க அறிவைவிட கற்பனை மேலும் ஆழமானது. தர்க்கம் நாம் அறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டது. கற்பனை படிமங்களால் ஆனது. அதனால் நாம் காணதவற்றையும் கற்பனை செய்ய முடியும்.

Continue reading

கவிதை : நிரந்தரம்

butterfly-8205கூட்டைக்கிழித்த
ஒரு வண்ணத்துப்பூச்சி
பிரபஞ்சத்தை நோக்கி பறப்பதை கவனித்துள்ளீர்களா?
இதற்கு முன்
பறக்கும் எதையுமே பார்த்திடாத அது
தன் மெலிதினும் மெலிதான இறக்கை விரித்து
மொத்த வானமும் தனக்கென நம்புவதை
தக்கவைக்கவாவது
உடனடியாகக் கொன்று
பாடம் செய்து வைக்க வேண்டியுள்ளது

கவிதை : தப்பித்தல்

smoke-636x310ஒரு பேருந்தை தவற விடுவதுபோல
திரைப்படத்தின் ஓர் அபாரக் காட்சியில் மின்சாரம் நிர்ப்பதுபோல
இரு பறவைகள் மிகச்சரியாக நிலவுக்கு முன் பறந்து கடக்கும் தருணம்
காமிரா செயலிழப்பது போல
வரம் கேட்கும் நிமிடம் சொற்கள் திக்குவதுபோல
உணர்ச்சியற்ற ஒருவனின் முதல் கண்ணீரை அவதானிக்கும் முன்
காய்ந்து கனவாவதுபோல
முதன் முதலாய் வெளியேறும் விந்தின் சுவாரசியத்தை
நினைவில் சேமிக்காததுபோல
அத்தனை அபத்தமானவை
என்னைப்பற்றிய எல்லா புகார்களுக்குமான
தண்டனைகள் இல்லாமல் போகும் ஆச்சரியம்

கவிதை : ஆயுதம் ஏந்தாத வீரன்

1நீங்கள் அன்பு செய்ய முடிவெடுத்தப்பின்
ஆயுதங்கள் ஏந்தாத வீரனாக
உங்களை
கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

ஆயுதம் ஏந்தாத வீரன்
பாய்ந்துவரும் கணைகளை தடுப்பானேயன்றி
தாக்கமாட்டான்

Continue reading