கவிதை : பறவை

mmமின்கலம் தீர்ந்துவிட்ட மடிக்கணினியை
வேறெதுவும் செய்யத்தோன்றாமல்
வலதுபுறம் திரும்பி
சன்னலைப்பார்க்கிறேன்.
இரண்டு தலைகள் நுழையும் அளவில் வானம்.
ஒரு பறவை இந்த மூலையில் தொடங்கி
அங்கே சென்று மறையும் வரை
இறக்கையைச் சிலதரம் அசைத்தது.
மின்கலம் தீர்ந்த மடிக்கணினியை
ஓரிருதரம் மூடி மூடி திறந்தேன்.

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 4

sivaமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

தொ.பரமசிவம் அவர்களின் அறியப்படாத தமிழகம் எனும் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் அவர் ஒரு வரி சொல்கிறார். அக்காலத்தில் தமிழர்களுக்கு முக்கிய ஊதியமாக உப்பும் அரிசியும் இருந்துள்ளது. பின்னர் ஊதியமாகப் பணம் வழங்கும் நிலை வந்தபோது அரிசியின் சம்பா என்ற பெயரும் உப்பு விளையும் களமான ஆளம் என்ற சொல்லும் இணைந்து சம்பளம் என்ற சொல் உருவானது என்கிறார். இதை நான் என் இலக்கிய நண்பருடன் பகிர்ந்தபோது அவர் அதை முற்றிலுமாக மறுத்தார். உப்புக்கு அப்படி ஒரு செல்வாக்கு இருந்திருக்க முடியாது. அது மலிவானது எளிதில் கிடைக்கக் கூடியது என வாதாடினார். என்னாலும் உறுதியாகச் சொல்ல முடியாததால் மௌனம் காத்தேன். ஆனால் எனக்கு விடை ஒரு சங்கப்பாடலில் இருந்து கிடைத்தது.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 3

manushyaputhiranமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

மிகை உணர்ச்சி, உணர்வெழுச்சி இவை இரண்டுக்கும் அடிப்படையான வித்தியாசம் தெரியாமல் நம்மால் ஒரு கவிதையை அறிவது சாத்தியமில்லை. மிகை உணர்ச்சி என்பது ஓர் உணர்ச்சி மனநிலையை ஒரு படைப்பு மிகைப்படுத்திக் காட்டுவதிலிருந்து அறியலாம். அதாவது ஒரு துக்கமான காட்சியைச் சொல்லும்போது அக்காட்சியை விளக்குபவன் வாசகனை அழவைக்க மிகவும் மெனக்கெடுவான். வாசகனை அழச்சொல்லி உழுக்குவான். ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால் சீரியல்களை ஓர் எடுத்துக்காட்டாக்கலாம். அவை ரசிகனின் உணர்ச்சியை சீண்ட திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் அழுது அழுது நம்மையும் அழவைக்கும்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 2

sivamமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

கவிதையில் இடைவெளி நவீனக் கவிதை தனக்குப் புரிவதில்லை எனச்சொல்பவர்களை நான் பல இடங்களில் சந்தித்துள்ளேன். அவர்களின் குற்றச்சாட்டு சங்க இலக்கியப் பாடல்கள் தங்களுக்குப் புரிகிறதென்றும் ஆனால் நவீன கவிதைகள் புரிவதில்லை என்பதாக இருக்கும். உண்மையில் அவர்கள் தங்களுக்குச் சங்கப்பாடல்கள் புரிவதாக நம்புவது அதன் விளக்க உரையின் துணையால்தான். அல்லது தொடர்ச்சியான மேடைப்பேச்சில் உதிரியாக வந்துவிழும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் நினைவில் வைத்து பொருள் அறிந்திருக்கலாம்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 1

மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

kulalyதமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பதை  பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழி என புரிந்துகொள்ளலாம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். தமிழ்மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி மரபிலிருந்து இன்று உருவாகும் நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்கள் கொடுக்கும் அதே வகையான உணர்வெழுச்சியை வழங்குவதாய் உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாய் நவீன கவிதை குறித்த தீராத வாசிப்பில் இருக்கும் எனக்கு நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்களோடு பொருந்தி போவதைப் பார்க்க முடிகிறது.

Continue reading

மின்னல்; கவிதை; பிறந்தநாள்

padamகாலையிலிருந்து பல்வலி. மனிதனுக்குக் கடுமையாக வலி கொடுக்கக் கூடியது காது வலியும் பல்வலியும் என கேள்விப்பட்டதுண்டு. இரண்டுமே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நோகாமல் தலை முழுமைக்குமாக வலியைப் பரப்பும்.

இன்றுதான் மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் ஒலிபரப்பாகும் ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியிக்காகக் குரல் பதிவு செய்ய திகதி கொடுத்திருந்தேன். அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்  புனிதா சுப்ரமணியம் மீண்டும் இலக்கியம் குறித்து பேச வாய்ப்பளித்துள்ளார். அவருக்கு நன்றி. தீவிர இலக்கியத்தில் இயங்கத்தொடங்கிய காலம் முதலே இவற்றையெல்லாம் எப்படி பொதுமக்களிடம் கொண்டுச் சேர்ப்பது என்றும் ஆரோக்கியமான வாசிக்கும் தலைமுறையை எப்படி உருவாக்குவது என்றும் ஏங்கியது உண்டு. புனிதா சுப்ரமணியம் போன்றவர்களால் அந்த எண்ணம் சாத்தியப்படுகிறது. ஏற்கனவே 13 வாரங்கள் உலக இலக்கியம் குறித்துப்பேசியது பரவலான பார்வைக்குச் சென்றிருந்தது. சிலர் மொழிப்பெயர்ப்பு எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியிருந்தனர். வானொலி போன்ற ஊடகங்கள் மிக விரைவாக ஒன்றை எளிய மனிதர்களிடமும் எடுத்துச்செல்லும் சக்தி கொண்டவை.  எளிமை படுத்தி கூறுவதென்பதே அதில் உள்ள சாகசம்.

Continue reading

சாகாத நாக்குகள் – 3

untitled1_1854843gமலேசியாவில் கோ.புண்ணியவான் முக்கியமான படைப்பாளி. அண்மையில் அவருடன் ஒரு சிறிய கருத்து விவாதம் நடந்தது. எழுத்தாளர்கள் தமிழ் சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது விவாதத்தின் சாரம். எழுத்தாளன் ஏன் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதே என்னுடைய அடிப்படையான கேள்வியாக இருந்தது.

நாம் எல்லோருமே கதை சொல்கிறோம். பாட்டி பேரனிடம் கதை சொல்வதுபோல எழுத்தாளன் சமூகத்திடம் கதை சொல்கிறான். காலம் காலமாக கதை சொல்லும் பழக்கம் சமூகத்துடன் பேச்சு மொழியில் கலந்திருந்தது. அச்சு ஊடக வருகைக்குப் பின் எழுத்து நூலாக்கப்படுகிறது. நூல் ஒரு பண்டமாகிறது. ஆனால் எழுத்தாளனின் அகங்காரம் அப்படி சொல்ல ஒப்புவதில்லை. தனது எழுத்துக்கு விலை இல்லை என தன் எழுத்தைப் புனிதப்படுத்த மெனக்கெடுகிறான். அந்தப் புனிதத்தை அறியாதவனைப் பாமரன் என வைகிறான். இவர்கள் வசைப்பாடும் எளிய மனிதனின் வாழ்வைப்பற்றி துளியும் தான் அறிந்து வைத்திருக்காதது குறித்து எழுத்தாளன் ஒருபோதும் வருந்துவதே இல்லை.

Continue reading

சாகாத நாக்குகள் – 2

சாகாத நாக்குகள் – 2

.நவீன்

 

“சிகரெட்டிலிருந்து

வெளியே தப்பிச்செல்லும்

புகையைப் போல்

என் உடன்பிறப்புகள்

நான்

சிகரெட்டிலேயே

புகை தங்க வேண்டுமெனக்

கூறவில்லை

வெளிச்செல்கையில்

என்னை நோக்கி

ஒரு புன்னகை

ஒரு கையசைப்பு

ஒரு மகிழ்ச்சி

இவைகளையே

எதிர்ப்பார்க்கிறேன்

அவ்வளவு தானே

Continue reading

எமிலியின் பொம்மை

emiliஎமிலி நஸ்ரல்லா (emily nasrallah) ‘பெய்ரூட் கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்புக்கு எழுதிய முன்னுரையை  முன்பு பிரான்ஸிலிருந்து வெளிவந்த ‘மௌனம்’ என்ற சிற்றிதழில் முதன் முதலில் வாசிக்கக் கிடைத்தது. எஸ்.வி.ராஜதுரை அதை தமிழில் மொழிப்பெயர்ந்திருந்தார். உண்மையில் நான் அதை எஸ்.வி.ஆர் மொழிப்பெயர்த்ததால்தான் படித்தேன் என்றுக்கூறலாம். அதன் பின்னர் எஸ்.வி.ஆரும் வ.கீதாவும் இணைந்து மற்றுமொரு ‘மௌனம்’ இதழில் எமிலி நஸ்ரல்லா சிறுகதை ஒன்றையும் மொழிப்பெயர்த்திருந்தனர். அக்கதைக்கு ‘முட்டைகோஸ் பொம்மை’ எனத் தலைப்பிட்டிருந்தார்கள். இதே  சிறுகதையை  எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் மொழிப்பெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் எஸ்.வி.ஆரின் மொழிப்பெயர்ப்பு வாசிக்க இக்கதை இன்னும் நெருக்கமானது.

Continue reading

விர்ஜிலியோ பினேராவின் தசை

0hஎதார்த்தமான கதை சொல்லும் முறை ஒரு புறம் இருக்க மிகையான கற்பனை மூலம் உருவாக்கப்படும் புனைவுகள் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடியது. அதிகாரத்தால் கலைஞர்கள் கட்டுப்படுத்தப்படும் சூழலில் பெரும்பாலும் நுட்பமான அரசியலைப் பேசவும் பூடகமாக நடப்பு அரசியல் சூழலைக் கிண்டல் செய்யவும் இதுபோன்ற படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. காலம், தேசம், மொழி ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் வாசிக்கும் போது காலம் கடந்த அதுபோன்ற படைப்புகள் புதிய அர்த்தங்களையும் கொடுப்பதுண்டு. ஆனால் பெரும்பாலும் விமர்சகர்கள் ஒரு படைப்பை இந்த மூன்று கூறுகளின் அடிப்படையில் அணுகி ஒரு புனைவு உருவான பின்புலத்தை உள்வாங்க முயல்கின்றனர்.

Continue reading