சாகாத நாக்குகள் – 1

அம்ருதா இதழில் வரும் தொடர்…

மனிதன் நchekhovம்பிக்கைகளால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒரு கொடும் துன்பத்துக்குப் பிறகு எப்படியும் எங்காவது ஒரு நற்செய்தியை வாழ்வின் நீண்ட பயணத்தில் எதிர்க்கொள்வதே சாத்தியம் என்ற நிபந்தனையில் நிகழ்கால கசப்பிலிருந்து சிந்தனைகளை மடைமாற்று செய்துகொள்கிறான். நம்பிக்கைக்கு வசப்படாத தொடரும் இழப்புகளின்மீதும் உளைச்சல்களின் மீதும் அடுக்கடுக்காக நம்பிக்கைகளை ஏற்றி தன் வாழ்வை தானே உயிர்ப்பித்துக் கொள்கிறான்.

Continue reading

காம்யூவின் அந்நியன்

103006-camus

காம்யூ

உலக இலக்கியங்களை வாசிக்க ஆர்வம் துளிர்த்தபோது நான் முதலில் தேர்வு செய்தது ‘அந்நியன்’ நாவல்தான். சிறிய நாவல். எளிமையான அட்டைப்படம். பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் The Outsider என மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல். வெ. ஶ்ரீராம் பிரஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருந்தார். அப்போது எனக்கு இருபத்து ஐந்து வயதிருக்கும். மிக உற்சாகமாக அந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். தொடங்கியபோதே ஆல்பர் காம்யூவினால் கடும் உளைச்சல் ஏற்பட்டது.

Continue reading

குல்ஸாரின் குழந்தை

gulzar-290x160தினசரிகளை விடாமல் படிப்பவர்களிடம் இலக்கியம் குறித்த ஒரு மனப்பதிவு உண்டு. இலக்கியம் வாசிப்பதற்கும் தினசரி வாசிப்பதற்கும் பெரிதாக பேதம் ஒன்றும் இல்லை எனப் பேசத்தொடங்குவார்கள். இலக்கியம் வாசிப்பவர்களைவிட தங்களுக்கு இன்னும் அதிகமாக நாட்டு நடப்பும் உலக நிலவரமும் தெரியும் என வாதிடுவார்கள். இன்னும் இணையம் வழி உலகை அறிபவர்கள் இலக்கியம் எதையும் சுற்றி வளைத்துச் சொல்கிறது மூன்றே வரிகளில் உலகின் முக்கியத் தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கின்றன என தங்களை தாங்களே மெச்சிக்கொள்வார்கள். இலக்கியம் வாசிப்பதும் தினசரிகளை வாசிப்பதும் ஒன்றா என்ற கேள்வியை ஓர் எழுத்தாளன் பல இடங்களில் சந்திக்க வேண்டியுள்ளது.

Continue reading

பஷீரின் மதில்கள்

basheer-drawing-by-josh-1sநீங்கள் என்றாவது கேட்டுப்பார்த்ததுண்டா?

ஒரு வண்ணத்துப்பூச்சியை அறிய என்ன வழி? ஒரு சராசரி ரசனை கொண்டவன் சொல்லலாம். வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளை அகற்றிப்பார்க்க வேண்டும். பின்னர்  நுகர்ந்து பார்க்க வேண்டும். அவற்றைக் கசக்கிப் பார்க்க வேண்டும். எஞ்சியதில் மிஞ்சியதில் அவற்றைக் கண்டுக்கொள்ளலாம். ஆனால் ஒரு கலைஞன் அவ்வாறு சொல்ல மாட்டான். அவன் வண்ணத்துப்பூச்சியை அறிய அதனருகில் காத்திருக்க வேண்டும் என்பான். வண்ணத்துப்பூச்சியை உணர நிதானமாக அதை பின் தொடர வேண்டும் என்பான். அது எங்காவது மலரில் அமரும். தேனை உரிஞ்ச தனது குழாயை நீட்டும்.  பிறகு மெல்ல சிறகசைத்துப் பறக்கும். கலைஞன் அந்தச் சிறகசைபின் மென் காற்று தன் கன்னத்தைத் தீண்டியது என்பான். அவன் வண்ணப்பூச்சியை அறிந்துகொண்டிருப்பான்.

Continue reading

லூ சுன்னின் ரிக்‌ஷா

e1917ல் சீனாவில் இராணுவக் கல்வி நிலையம் ஒன்றில் லூ சுன் இவ்வாறு சொல்கிறார். “நான் சலிப்புற்று இருக்கிறேன். துப்பாக்கியை ஏந்தும் நீங்கள் இலக்கியம் பற்றி அறிய அவா கொண்டுள்ளீர்கள். ஆனால் நானோ துப்பாக்கி வேட்டு சத்தத்தைக் கேட்க ஆர்வம் கொண்டுள்ளேன். ஏனெனில் துப்பாக்கி வேட்டுகளின் சத்தம் இலக்கியத்தைவிட கேட்பதற்கு நன்றாக இருக்கிறத.”

Continue reading

சிறுகதை: அடிப்படையான கேள்விகளும் புரிதல்களும்

00314.3.2015 – ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் முதுகலை மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் பதிவு இது. இந்நிகழ்வை நூலகர் விஜயலட்சுமி அறிமுகம் செய்து பேசியப்பின் சிறுகதை குறித்த அடிப்படையான கேள்விகளுடன் நான் வழிநடத்தினேன். நூலகத்தின் அழைப்பின் பெயரிலேயே இந்தக் கலந்துரையாடலை நான் வழி நடத்தினேன். என்னுடன் பூங்குழலி,  மணிமொழி , யோகி ஆகியோர் உடன் வந்தனர்.


நிகழ்வில் பேசியதில் ஒரு பகுதி :

0004நண்பர்களே, சிறுகதைகள் குறித்து பார்ப்பதற்கு முன் இலக்கியம் ஏன் அவசியமாகிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் தேடுவோம். இலக்கியம் குறித்து நம்மிடம் சில முன் முடிவுகள் உண்டு. உண்மையில் அவை போலியானவை. யாரோ நம் மனதில் ஏற்றிவிட்டவை. நாம் அந்த முடிவுகள் குறித்து ஆராய்ந்ததே இல்லை. எந்தக் கேள்வியும் இல்லாமல் கல்விக்கூடங்களிலோ நூல்களிலோ சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். இன்று அதன் சில அம்சங்களை ஆராய்வோம்.

Continue reading

டோட்டோ சானின் தொப்பி

F201212011327141194012301உண்மைக்கு நிகரான கதை ஒன்று உள்ளதா என பலமுறை கேள்வி எழுந்துள்ளது. ஒருவர் தன் கற்பனையில் சொல்லும் ஒரு கதைக்கும் தன் வாழ்விலிருந்து சொல்லும் அனுபவத்துக்கும் அதை வாசிக்கும் வாசகர்களின் மனநிலையில் மாற்றம் நிகழ்வதுண்டு. உதாரணமாக கற்பனையால் வடிவமைக்கப்படும் ஒரு நவீன கட்டத்தைவிட வரலாற்றில் அம்பெத்காரோ அல்லது தந்தை பெரியாரோ பயன்படுத்திய ஒரு பேனாவைத் தொடும்போது ஏற்படும் சிலிர்ப்பு வித்தியாசமானது.

Continue reading

மண்டோவின் துப்பட்டா

நீங்கள் எந்தக் கதையையாவது படித்து குற்ற உணர்ச்சி அடைந்ததுண்டா? உங்களை நீங்களே கீழான மனோநிலைக்கு நகர்த்தி வைத்ததுண்டா? உங்கள் மனதில் உள்ளிருக்கும் மிருகத்தை அடையாளம் கண்டதுண்டா?

என்னை அப்படியொரு படைப்பு செய்தது என்றால் அது மண்ட்டோவின் சிறுகதையாகத்தான் இருக்கும். ஒரு சிறுகதையில் வாசகனின் பங்களிப்பு என்ன என்பது மிக முக்கியமான கேள்வி. அவன் கதை கேட்பதை மட்டுமே வேலையாகச் செய்கிறான் என்றால் நிச்சயம் சிறந்த வாசகனாக இருக்க முடியாது. நாம் இன்று காணும் பெரும்பாலோர் சிறுகதையை வாசித்து அதன் சாரத்தை மட்டுமே அறிந்துகொண்ட சாரசரி வாசகர்கள்தான். அவர்களால் கதையை மட்டுமே சொல்ல முடியும். கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகள் பிரயோகத்தைச் சுட்டிக்காட்டமுடியும். வெகுசிலரே சிறுகதையுடன் உரையாடல் நடத்துகின்றனர். ஒரு சிறுகதையை வாசித்து முடித்தப்பின் உடன்பட்டும் முரண்பட்டும் தான் யாராக இருந்திருக்கிறோம் என்று மீளாய்வு செய்கின்றனர்.

Continue reading

ஹெமிங்வேயின் மீன்

hemiஒரு நதியில் இரு குச்சிகள் விழுகின்றன. ஒன்று குறுக்காகவும் மற்றது நேர்கோட்டிலும் மிதக்கின்றன. நேர்கோட்டில் விழுந்த குச்சி நதிக்கு தான்தான் பாதை காட்டுவதாக ஆனந்தத்தில் நதியுடன் இணைந்து பயணித்தது. குறுக்கே விழுந்த குச்சி தான் நதியின் ஓட்டத்தைத் தடைப்படுத்தப் போவதாகக் கடைசி வரை சாகசங்கள் செய்து பார்த்தது. இறுதியில் இரு குச்சிகளுமே பெரும் பள்ளத்தில் போய் விழுந்தன. நதிக்குக் குச்சிகள் குறித்து ஒன்றுமே தெரியாது. ஓஷோ சொன்ன இந்தக் கதையை நான் பலமுறை நினைவு படுத்தியுள்ளேன்.

Continue reading

மாப்பஸானின் குதிரை

110dசிறுகதை என்றவுடன் நம் மனதில் அது ஒரு சம்பவத்தைச் சொல்லும் படைப்பு முறை என தோன்றலாம். அதாவது ஒரு சம்பவம் நடக்கிறது, அந்தச் சம்பவத்தின் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். அந்தத் திருப்பமே கதையை வாசிப்பவருக்குச் சுவாரசியத்தையும் இதுவரை வாசித்ததற்கான மொத்த அனுபவத்தையும் கொடுக்கும் என பொதுவான ஒரு கருத்து இன்றும் உண்டு. சில சமயம் அதுபோன்ற படைப்புகள் வாசகர்களிடையே வெற்றி பெறுவதையும் பார்க்கிறோம். பொதுவாகவே படைப்பிலக்கியங்கள் ஓர் இலக்கணத்தை அடிப்படையாக வைத்து அதன் சட்டகத்திற்குள் பயணிப்பதில்லை. படைப்புகளே புதிய இலக்கணங்களை உருவாக்குகின்றன. அதற்குமுன் நடப்பில் இருந்த கட்டமைப்பை உடைத்து மறுநிர்மாணிப்பு செய்கின்றன. எனவே நிலையான படைப்பிலக்கணம் என ஒன்று இருக்க சாத்தியம் இல்லை.

Continue reading