ஹிமாலயாவில் தங்குவது குறித்து முன் திட்டம் இல்லாததால் மூவர் தங்கும் ஓர் அறை மட்டுமே கிடைத்தது. எனக்கும் சுரேஷுக்கும் ஒதுக்கப்பட்ட அறை போதுமான பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாகிக் கிடந்தது.
Continue readingகுமாரிகள் கோட்டம் – 8
காலைக் குளிரை உதறிக்கொண்டு எழுந்தபோது அரவின் ஓர் அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். நேற்று அவர் குளிக்க எடுத்துச் சென்றது என்னுடைய துண்டாம். இருவருமே Decathlonஇல் வாங்கியதால் ஒன்று போலவே இருந்தன. நேற்று இரவு என்னையே நான் சந்தேகப்பட்டதை எண்ணி நொந்துகொண்டேன். அரவின் வைத்திருந்த புதிய துண்டை எடுத்துக்கொண்டு பல் துலக்கச் சென்றேன். அந்த அதிகாலை குளிரில் யாரும் குளிப்பதில்லை என்பது ஆறுதலாக இருந்தது. ஆனாலும் எங்கள் குழுவில் இருந்த கோமளா குளிரையும் பொருட்படுத்தாமல் குளித்துக் கிளம்பினார் என்பது நேபாளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அச்சாதனையைச் செய்த கோமளா தன்னடக்கத்துடனேயே காணப்பட்டார்.
Continue readingகுமாரிகள் கோட்டம் – 7
எங்கள் பயணம் தொடங்கியது. பச்சை போர்த்திய பெருமலைகள் வெயிலில் ஒளிர்ந்துகொண்டிருந்தன. காற்றில் குழுமை. மெல்ல மெல்ல மலைகளுக்குள் நுழைந்தோம். சரிவான பாதையில் பிரத்தியேகமாக வாங்கிய காலணிகள் அபாரமாக ஒத்துழைத்தன. கைத்தடிகள் வசம் வர தாமதமாகின.
Continue readingகுமாரிகள் கோட்டம் – 6
குங்குமச் சாமியார் அரவினுக்கு என்ன சாபம் கொடுத்தார் என்பது ஒருநாளைக்குப் பிறகுதான் தெரிந்தது. காலையிலேயே பித்த வாந்திக்கான மருந்து உள்ளதா எனக் கேட்டார். பின்னர் வயிற்றுப்போக்கு அவரை வாட்டத் தொடங்கியது.
Continue readingகுமாரிகள் கோட்டம் – 5
அன்று போக்ரா (Pokhara) நகரம் செல்ல வேண்டும். ஏறக்குறைய ஆறு மணி நேர பேருந்துப் பயணம்.
போக்கராவுக்குச் செல்லத் தயார் செய்துகொண்டு ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவை உண்டபோதுதான் தற்செயலாக ஸ்டார் கணேசனைச் சந்தித்தேன். அவரும் அன்னபூர்ணா மலை ஏற பினாங்கு குழுவுடன் வந்திருந்தார். சந்தித்து நெடுநாளாகிவிட்ட நிலையில் அவரை அங்குச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
Continue readingகுமாரிகள் கோட்டம் – 4
பக்மதி நதிக்கு ஆரத்தி எடுக்கும் காட்சி எனக்கு காசியில் இருந்த தினங்களை நினைவூட்டியது. காசியில் படந்திருந்த சாம்பல் பூத்த பழமையை நதிக்கு இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த படித்துறையில் காணமுடிந்தது. காணும் இடமெல்லாம் மனித தலைகள்.
Continue readingகுமாரிகள் கோட்டம் – 3
மாலை ஐந்து மணிக்கு வேன் புறப்படுவதாகத் திட்டம். எதிரில் பாதையை மறைத்து நின்ற கார் ஒதுங்கிச் செல்ல காத்திருந்ததில் 5.15 ஆனது. வழியெங்கும் சாலை நெரிசல். களைக்கப்பட்ட கோலிக் குண்டுகள் போல வாகனங்கள் நான்கு பக்கமும் உருண்டு தங்களுக்கான பாதைகளில் புகுந்தன. அப்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். எந்த நெருக்கடியான சூழலிலும் ‘ஹாரன்’ சத்தம் வாகனங்களிலிருந்து எழவே இல்லை. மக்கள் இயல்பாகவே ஒருவகை புரிந்துணர்வுடன் செயல்பட்டனர். எரிச்சலும் பரபரப்பும் இன்னும் ஒரு தொற்றுவியாதியாக அங்குப் பரவாமல் இருந்தது.
Continue readingகுமாரிகள் கோட்டம் – 2
மதிய உணவுக்கு ஒரு வித்தியாசமான இடத்திற்கு அழைத்துப்போக சுரேஷ் விரும்பினார். அது ‘தாமில்’ (Thamel) பகுதியில் உள்ள ஒரு சப்பாதிக்கடை. ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் நடைப்பயணம். கட்டடங்களும் கடை வரிசைகளும் சூழ்ந்திருந்த இடைவெளிகளில் நடை. சுரேஷ் பெரும்பாலும் நடக்கவில்லை. காற்று அவர் உடலைத் தள்ள அவர் பறந்துகொண்டிருந்தார். நாங்கள் அவரைத் துரத்திப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தோம்.
Continue readingகுமாரிகள் கோட்டம் – 1
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் விமானம் இறங்கியபோது நன்கு விடிந்திருந்தது. விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. நேபாள் ஏர்லைன்ஸ் (Nepal Airlines) ஓரளவு வசதியானது. கை கால்களை நீட்டிக்கொள்ள கொஞ்சம் கரிசனம் காட்டியது. பயணத்தினூடே சன்னல் வழியாக மலைச்சிகரங்களைக் காண முடிந்திருந்தது. முதலில் நெளிந்து படுத்திருக்கும் பெரிய உடும்புகளின் தோல்போல சாம்பல் மடிப்புகளில் மலைகள். உற்றுப் பார்த்தபோது சாம்பல் கரும்பச்சையாக மாறியது. அவற்றைக் கடந்து தொலைவில் பனி மூடிய இமைய மலைத்தொடர்கள். வெண்மையின் கம்பீரம் சிலிர்க்க வைத்தது.
Continue readingமஹாத்மன் மீண்டார்
மஹாத்மனின் இன்றைய நிலை – காணொலி
கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுத்தாளர் மஹாத்மனுக்கு வல்லினம் மூலம் நன்கொடை திரட்டத் தொடங்கினோம். மூளையில் ஏற்பட்ட வாதத்தால் மஹாத்மன் சுய நினைவு இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் அவரைப் பராமரித்த அவர் மனைவிக்கும் உதவும் நோக்கில் இந்த நன்கொடை திரட்டப்பட்டது.
Continue reading