அன்புள்ள ம.நவீன்,
ஒரு முறை உங்கள் பேட்டி ஒன்றை வாசித்தேன். கேள்வி கேட்டவர் உங்களின் நேர நிர்வாகத்தைப் பற்றி கேட்டார். எப்படி இவ்வளவு வாசிக்க, எழுத முடிவதோடு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறீர்கள் என்ற வியப்பு அந்தக் கேள்வி கேட்கப்பட காரணம். அந்தக் கேள்விக்கு நீங்கள் கொடுத்த பதிலில் உங்களின் ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையின் சாரமே அடங்கியுள்ளது. இதே கேள்விக்கு பிரையன் டிரேசி போன்ற சுய முன்னேற்ற நிபுணர்கள் மிக பெரிய விரிவுரை, திட்டம், பயிற்சி என்றெல்லாம் அடுக்கிச் செல்வார். ஆனால் நீங்கள் கொடுத்த, ‘‘நான் எப்போதுமே என்னை எழுத்தாளனாகக் கருதுகிறேன். தனியாக நேரம் என்று எதையும் ஒதுக்குவதில்லை…’ (உங்கள் பதில் என் நடையில்) என்ற உங்களின் பதிலே மற்ற எழுத்தாளர்களிடமிருந்த உங்களைத் தனித்து உயர்த்திக் காட்டியது. வேலை ஓய்வுபெற்ற பிறகு இந்த பதில் பலரிடமிருந்து வர வாய்ப்புள்ளது.
Continue reading