மலேசிய தமிழிலக்கியத்தின் புதிய சட்டாம்பிள்ளை(நவீன்)க்கு ‘இராமனின் நிறங்கள்’ கோ.முனியாண்டியின் பதில்.
“ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!” – சேனன்
சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ் என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘அம்மா’, ‘எக்ஸில்’ ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர். எதிர், தமிழ்ஒருங்கமைப்பு ஆகிய இணையத்தளங்களின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார். சேனன் லண்டனில் தொழிலாளர்களின் போராட்டங்களையும் அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்ப்புகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுப்பவர். மார்க்சிய சிந்தனைவாதி. தமிழ்ஒருங்கமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான சேனன் கடந்த மாதம் கொழும்பில் நடத்திய கூட்டத்தில் சிறீலங்கா அரசு மீது மிகக் கடுமையாகத் தன் கண்டனத்தை வெளிப்படுத்தினார். மிக அண்மைய அவரது பயணம் குறித்து வல்லினம் அவரை நேர்காணல் செய்தது.
சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்

இந்த எதிர்வினையை எழுதும் பொழுது மேலும் மேலும் கீழ் நோக்கிச் செல்வது போன்றதொரு மனநிலையைத் தவிர்க்க இயலவில்லை. மரத்துப்போய்விட்ட மலேசியத் தமிழ் சமூகத்தை எழுத்தின் மூலமாகவும் உரையாடல்கள் மூலமாக மட்டுமே மீண்டும் மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முடியும் என்கிற படியால் சமகால இலக்கிய சூழல் மற்றும் அதை கீழ் நோக்கி இழுக்க முயலும் அரசியல் செயல்பாடுகள் இவற்றிற்கு மத்தியில் மிக நுணுக்கமாக நடக்கும் சுரண்டல்கள் குறித்து பேச விழைகிறேன். நேரடியான அறிவுப்பூர்வமான இலக்கியச் விவாதங்களுக்கு பதில் சொல்ல திரணியற்றவர்கள் இவ்வெதிர்வினையின் குரலை மாற்றி அமைக்கக் கூடும் எனும் கவனம் கூடியுள்ளது.
Continue reading
சிங்கை இளங்கோவன் நேர்காணல்
0107700210 என்ற எண்ணிலிருந்து கோழையில் குரலும்;கோ.முனியாண்டியும்!
வணக்கம் வல்லினம் வாசகர்களே! கொஞ்ச காலம் முன்பு சை.பீருக்கு நமது வல்லினம் வெளியிட்ட சிறப்பிதழில் அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டு மழையை மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது அதே மாதிரியான ஒரு பாராட்டு மழையை சித்தியவான் முனியாண்டி சிறப்பிதழில் அவருக்கு வழங்க வல்லினம் முனைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது! சை.பீர் சாமிவேலுவை வைத்து நடத்திய புத்தக வியாபாரத்தை அத்தனை சிறப்பாகப் பாராட்டியிருந்த வல்லினம் – இப்போது சாமிவேலு + ரத்தினவள்ளி அம்மையார் கூட்டணியில் முனியாண்டி நடத்தியுள்ள ராமனின் நிறங்கள் புத்தக வெளியீட்டை சும்மா விடுவார்களா என்ன? குறைந்தது ‘are u so cheap mr muni?’ என்றாவது பாராட்ட தவற மாட்டார்கள் அல்லவா? தங்களை நேர்மையான பாராபட்சம் அற்ற விமர்சகர்களாக நிரூபிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போமே. நன்றி. ஆகஸ்டு மீண்டும் சந்திப்போமா?
அன்புடன் வல்லினம் வாசகர் வட்டம்
“இது வரைக்கும் நான் விலை போகவில்லை” – பி. உதயகுமார்
வழக்கறிஞர் பி.உதயகுமார் 1961இல் நவம்பர் மாதம் ஏழாம் திகதி பிறந்தார்.இவர் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.உலகத் தமிழர்களின் கவனத்திற்கு மலேசியத் தமிழர் நிலையினை திசை திருப்பிய ‘ஹிண்ட்ராப்’ இயக்கத்தின் ஆலோசகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சத்துக்கும் மேலான மலேசிய இந்தியர்கள் கலந்துகொண்ட அந்தப் பேரணியைத் தொடர்ந்து இவரும் இதர நான்கு வழக்கறிஞர்களுக்கும் சுமார் ஓன்றரை ஆண்டு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டனர். இன்றும் மிக உற்சாகமாக சமூகப் பணியில் இயங்கி வரும் வழக்கறிஞர் உதயகுமார் அவர்களை நேர்காணல் செய்ய என்னுடன் யுவராஜன், சிவா பெரியண்ணன், மணிமொழி மற்றும் தோழி வந்திருந்தனர். எல்லா தயார் நிலைக்குப் பின் அவருக்காக அலுவலகத்தில் காத்திருந்தோம். அன்புடன் எங்களை வரவேற்ற வழக்கறிஞர் உதயகுமார் ஓர் சிறிய அறிமுகத்திற்கு பின் எங்களுக்கு எந்தச் சிரமும் தராமல் பேசத் தொடங்கினார்.
Continue reading
இசங்களை விமர்சன ரீதியில் அணுக வேண்டும் – எம். ஏ. நுஃமான்
எம்.ஏ.நுஃமான் தமிழ் இலக்கியச் சூழலில் மிக முக்கிய விமர்சகர். கல்விதுறை சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் இவர் வெளியிட்ட புத்தகங்கள் ஏராளம். இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தற்பொழுது மலாயா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார். வல்லினத்திற்காக அவரை நேர்காணல் செய்தோம்.
Continue reading
ஸ்டார் கணேசனுடன் உரையாடல்…
காட்சி 1 : 1986 . புடு சிறையில் நோயாளிகளைச் சோதிக்க வந்த நான்கைந்து மருத்துவர்கள் கைதிகளால் பிணைப்பிடிக்கப்படுகின்றனர். போலிஸார்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களுக்குத் தகவல் பறக்க செய்தியாளர்கள் குழுமுகின்றனர்.ஒருவருக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை. அந்தச் சம்பவம்தான் நாளை முதல் பக்கச் செய்தி.சரியான படம் வேண்டும். தயாரான கேமராவோடு எல்லோரும் புடு சிறை வாசலில் காத்திருக்கின்றனர்.அதில் ஒருவர் மட்டும் யாரிடமும் அனுமதி பெறாமல் எதிரே இருக்கும் ஐ.பி.கெ கட்டடத்தின் மீது ஏறுகிறார். அப்போதும் காட்சியை சரியாக காண முடியாதபடி மரக்கிளைகள் மறைக்கின்றன. அங்கிருந்து மற்றொரு கட்டடத்திற்கு தாவுகிறார். இப்போது நடக்கும் காட்சிகள் தெளிவாகத்தெரிகின்றன. அவர் கேமராவில் காட்சிகள் பதிவாகிறது.
“என்னை மீறி எழுதுவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை” – ரெ. கார்த்திகேசு
முனைவர் ரெ.கார்த்திகேசு மலேசியாவின் வட மாநிலமான கெடாவில் பீடோங் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தை திராவிடர் இயக்கத்தில் தீவிரப் பற்றுடையவர்; எனினும் பக்தி இலக்கியங்களும் நவீன இலக்கியமும் படிப்பவராக இருந்தார். சைனீஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தொடக்கக்கல்வி கற்ற ரெ.கார்த்திகேசு ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளியிலும் சுங்கைப் பட்டாணி சரஸ்வதி பள்ளியிலும் தமது கல்வியைத்தொடர்ந்தார்.பின்னர் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் கல்வியை முடித்து, மலாயாப் பல்கலைக் கழகத்தில் 1968 ஆம் ஆண்டு இந்திய இயலில் பி.ஏ.ஆனர்ஸ்; நியூ யார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1977 ஆம் ஆண்டு பத்திரிகைத் துறையில் M.Sc., இங்கிலாந்து லெஸ்டர் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் Ph.D என தனது கல்வியைத் தொடர்ந்தார்.
மலேசிய வானொலியில் 1961 முதல் 1976 வரை அறிவிப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்த இவர் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் 1967 முதல் 1998 வரை விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், ஒலிபரப்புத் துறை தலைவர், தொடர்புத் துறை துணை டீன், பேராசிரியர், செனட் உறுப்பினர் என பல பொருப்புகளை ஏற்று பணிபுரிந்துள்ளார்.
1996ஆம் ஆண்டு பேரரசரிடமிருந்து KMN விருது பெற்ற முனைவர் ரெ.கார்த்திகேசு இதுவரையில் 5 நாவல்களையும், 4 சிறுகதை தொகுப்புகளையும் , 1 கட்டுரை நூலையும் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். இவரது சிறுகதைகள் பல மலேசியா மட்டுமல்லாது தமிழக இதழ்களிலும் பரிசுகளைத் தட்டிச்சென்றுள்ளன.
பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வந்திருந்த அவரை ஒரு காலை வேளையில் நானும் சிவமும் அருகிலிருந்த பூங்கா ஒன்றுக்கு அழைத்துச்சென்றோம். நடந்தபடியும் அமர்ந்தபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
Continue reading
மாற்றம் தமிழுக்கு ஊறு செய்யக்கூடாது! – இரா. திருமாவளவன்
Continue reading





