திரு நவீன் அவர்களுக்கு,
நான் ராமனின் நிறங்கள் தொடர்பான விவாதங்களை தொடர்ந்து படித்து கொண்டு வருகின்றேன், அது தற்பொழுது வாக்கு வாதத்தில் வந்து முடிந்து இருக்கின்றது, நமது தொடர்புகள் மிக நீளம் என்றாலும் எனக்குள் நாம் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்ற உணர்வு எப்பொழுதும் இருக்கும், அந்த உணர்வில்தான் இப்பொழுது இதை எழுதுகிறேன், எனக்கு தெரிந்த வரை நமது தமிழர் வரலாற்றில் தமிழ் புலவர்கள் எத்தனையோ பேர் நமது வாழ்கை முறைமைகளையும் நமது மரபுகளையும்,பண்பாடுகள் பழக்க வழக்கங்கள்,மருத்துவ முறைகள்,இல்லற நெறிகள்,நமக்கு சொல்லி விட்டு தமிழுக்காக வாழ்ந்து மறைந்தார்கள், அந்த காலத்தில் ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது மன ஓட்டத்தை அவர்களது தமிழ் புலமையில் படைத்தார்கள், அவர்கள் பயணிக்கும் இடம் வேறாக இருந்தாலும் முடியும் இடம் ஒன்றாகத்தான் இருந்துள்ளது, தமிழுக்காக ஒரு நல்ல பணியை செய்கின்றோம் என்பதுவே அது. தற்காலதில் தமிழ் பற்றாளர்கள் என்று உங்களை போன்றவர்களை நினைத்து பெருமை படும் இந்த நேரத்தில் இது போல போன்று வாக்கு வாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை என்றே தோன்றுகின்றது.சம்பந்தமே இல்லாமல் இதில் எங்கு வந்தது இந்த கருப்பு பிரச்சினை, நான் உங்கள் எதிமரையாலரை பார்த்தது இல்லை, அனால் அவரும் கருப்பு கலந்த நிறமாகத்தான் இருப்பார் என்பது எனது கற்பனை,அவர் உருவாக்கிய மண் பொம்மை நன்றாக உள்ளது என்று அவருக்கு தோன்றும் ஆனால் அதை வாங்கி உபயோகபடுத்த நினைபவனுக்கு அதன் உண்மையான தன்மை இந்த பொம்மையில் கை கொஞ்சம் நீளமாக உள்ளது வடிவம் சரி இல்லை, இதை பார்க்கும்பொழுது எனக்கு பொம்மையாகவே தெரியவில்லை என்பது புரியும் என்று அவருக்கு புரியவில்லை. நீங்கள் இந்த விவாதத்தை இனியும் தொடராமல் நமக்கே உரிய பெருந்தன்மையுடன் இதை இத்துடன் நிறுத்தி விட்டு வேறு எதாவது ஆரோக்கியமான் தொகுப்புகளை வெளியிட வேண்டுமென்று வேண்டுகின்றேன். Continue reading →