இன்று (14.04.2012) வல்லினம் குழுவினரின் சந்திப்பு கோலாலம்பூரில் நடைப்பெற்றது. நான் (நவீன்), சிவா பெரியண்ணன், பாலமுருகன், மணிமொழி, தயாஜி,யோகி, பூங்குழலி, சந்துரு, ராஜம் ரஞ்சனி, , நித்தியா, தினேஸ்வரி இவர்களோடு வல்லினம் இதழில் ஆலோசகர் மா.சண்முகசிவாவும் கலந்து கொண்டார். மலேசிய இளம் தலைமுறையினர் அடுத்தக்கட்டத்தை நோக்கி இலக்கியத்தையும், சிந்தனையையும் நகர்ந்த தேவையான பயிற்சிகள் வழங்க வேண்டியது பற்றி இன்றைய கலந்துரையாடல் அமைந்தது.
நடிகர் சேரன் கேட்ட லஞ்சமும் மலேசிய இலக்கிய வியாபாரமும்!
கடந்த வார தினக் குரலில் (31.3.2012) ‘வெட்கப்படுகிறேன்’ எனும் தலைப்பில் வந்த செய்தி கண்ணில் பட்டது. இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் தான் வெட்கப்படுவதாக மலேசியாவில் வந்து கூறியிருக்கிறார். எதற்காக சேரன் மலேசியாவில் வந்து வெட்கப்பட வேண்டும் என செய்தியை முழுக்க வாசித்தால் அதிர்ச்சி.
புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம்
ஒருவன் புயலடிக்கும் பெருங்கடலில் தோணி ஓட்டுகிறான். புயல் தோணியைக் கவிழ்க்கப் பார்க்கிறது. தோணி ஓட்டுபவன் அதிலிருந்து மீள பெரும் சாகசத்தில் ஈடுபடுகிறான். அவனுக்கு அந்தச் சாகசம் பிடித்துள்ளது. புயல் எழுப்பும் அலையின் ஆக்ரோசத்தை துடுப்புகளின் லாவகம் கொண்டு சமாளிக்கிறான். புயலின் எதிர்ப்பாராதத் தீவிரத்தாக்குதல்களை, அறிவின் – உடலின் வேகத்தால் எதிர்க்கொள்கிறான். இறுதியில் அந்தப் பெரும் கடலில் , பயங்கரப் புயலில் தோணி கவிழ்கிறது. அதுவரை போராடிய தோணி அங்கு அர்த்தமற்று மூழ்குகிறது. அதற்குப் பின் பெரும் கடல் புயலில் தோணி கவிழ்ந்தது ஒரு ஒற்றை வரி செய்தி. அவனது சாகசத்தை யாரும் வர்ணிக்கப் போவதில்லை. அவன் திறமை கடல் உள்ளவரை கொண்டாடப்பட போவதில்லை. கடலுக்கு முன் அவன் சாகசம் அர்த்தமற்றவை. எளிதில் மறக்கப்பட கூடியவை. அதுதான் அதன் இயல்பு. அதுதான் வாழ்வின் இயல்பும்.
Continue reading
தமிழகத்து நாட்டாமைகள் – ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிக்கு பதில்
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி, ‘தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை’ எனும் எனது கட்டுரைக்கு எதிர்வினை எழுதியிருந்தார். அவருக்கு என் பதில்.
வணக்கம் ஸ்ரீவிஜி . தங்கள் கருத்துக்கு நன்றி. முதலில் உங்கள் வாசிப்பு இவ்வளவு மேலோட்டமானதாக இருப்பதைக் கண்டு வருந்துகிறேன். இதை உங்கள் அரசியல் பார்வையோடும் ஒப்பிடலாம்தான். என்ன செய்வது பல காலம் எழுதும் எழுத்தாளர்களுக்கே அது வாய்க்காத போது உங்களுக்கு இல்லாதது ஆச்சரியமில்லை. உங்களுக்குத் தெளிவு படுத்த வேண்டியது என் கடமை.
Continue reading
தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை
கடந்த சில வாரங்களாகப் பத்திரிகைகளின் முதன்மைச் செய்திகளில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் நிலைபாடு குறித்த விமர்சனங்கள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. எப்போதோ எழுந்திருக்க வேண்டிய போராட்டம். ஆங்காங்கு மிக மெல்லிய குமுறலாய் இருந்த குரல்கள் இக்காலக் கட்டத்தில் ஒன்றிணைந்துள்ளது வரவேற்கத்தக்கதே. தொடர்ச்சியாக அச்செய்திகளை கவனிப்பதில் பல மலேசியக் கலைஞர்களிடமிருந்து எழும் உள்ளார்ந்த கேள்வியில் முதன்மையாக ஒலிப்பது ஒன்றுதான். ‘ஏன் இன்னமும் மலேசியக் கலை வெளியை தமிழகக் கலைஞர்களைக் கொண்டு நிரப்புகிறார்கள்?’
Continue reading
எழுத்தாளர் சங்கத்தின் புதிய தொடக்கம்…
பொதுவாகவே எழுத்தாளர் சங்க செயல்பாடுகள் குறித்து என்னிடம் மாற்று கருத்துகள் உண்டு. தமிழ்ப்பள்ளிகள் தள்ளாடிக்கொண்டிருக்க சாமிவேலு ‘ஏய்ம்ஸ்’ பல்கலைகழகம் கட்டியது போல இலக்கிய செயல்பாடுகளில் நமது அடிப்படையான பலவீனங்களை களைய முயலாமலேயே அது தனது கால்களை அந்தரத்தில் வைத்துள்ளதாக எனக்குத் தோன்றுவதுண்டு.
சிற்றேடு இதழில் வந்த என் நேர்காணல் : சிங்கப்பூர் – மலேசிய இலக்கிய அடையாளமும் அதற்கான எதிர்ப்புகளும்!
(இளைஞராகவும் துடிப்போடும் இருப்பதோடு அபாரமான இலக்கிய ஆற்றலும் உள்ள ம.நவீன் ‘காதல்’ மற்றும் ‘வல்லினம்’ என்ற இலக்கிய யுகமாற்றத்துக்குக் காரணமான இரண்டு இதழ்களை அவருடைய துணைவி மணிமொழியுடன் நடத்தியவர். மா,சண்முகசிவா இவரைக் கோபக்கார இளைஞர் என்று எனக்கு அறிமுகப்படுத்தினார். மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஷ்ணன் மணியன் நவீனை என்னோடு தொடர்புப்படுத்தினார். தமிழக இலக்கியத்தின் மொத்த வீச்சை அறிய சிங்கப்பூர், மலேசிய இலக்கியத்தையும் அறியவேண்டும். தமிழகத்தில் பலர் உதாசினப்படுத்தும் ‘வானம்பாடி’ இயக்கம் மலேசியாவில் ஒரு பாதிப்பைச் செலுத்தியது என்ற செய்தி கடந்த 50 ஆண்டு இலக்கிய வரலாற்றைத் தொகுத்துக் கொண்டிருக்கிற எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அங்குத் தமிழிலக்கியம் வளர்வதற்குப் பிரபலஸ்தர்களும் அதிகாரம் உள்ளவர்களும் தடையாக இருப்பது தெரிகிறது. அகில உலகத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சி என்பது அகில உலகத் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தது. தமிழர்கள் அழிவு தமிழர்களால்தான் என்பது இன்று ஈழத்தில் கருணா, டக்ளஸ் தேவாநனந்தா போன்றோர் மூலம் உலகத் தமிழர்களுக்குத் தெரிந்துள்ள சூழலில் சிங்கப்பூர் மற்றும் மலேசிய இலக்கிய இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும் எதிர்ப்பார்ப்புமுள்ள தமிழ் மாணவர்கள் பதற்றத்தோடு காத்திருக்கிறார்கள். இப்பின்னணிச் சிந்தனைகளுடன் நான் ம.நவீனிடம் மேலோட்டமாக நடத்திய நேர்காணல் இது – தமிழவன்)
அம்ருதா நேர்காணல் (பாகம் 2) :ஒவ்வொரு எழுத்தாளனும் ஓர் இயக்கமாகவே செயல்பட வேண்டும்.
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமிழர்களுக்கான அரசாங்க வேலைவாய்ப்பு என்றிருக்கும்போது அங்குள்ள இளந்தலைமுறையினரது எதிர்காலம்தான் என்னாவது?
மலேசியத் தமிழர்களுக்கு அதிகம் கிடைக்கின்ற அரசாங்க வேலை என்றால் தமிழாசிரியர் பணிதான். உயர் பதவி என்றால் தலைமை ஆசிரியர் பணி. அதுவும் மிக விரைவில் அபகரிக்கபடும் அபாயம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. இன்றைய சூழலில் அரசாங்க வேலைகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் இளம் தலைமுறைகளுக்கு இல்லை. விவேகமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இது. சீனர்கள் அரசாங்க வேலைகளில் நாட்டம் செலுத்துவதில்லை. அதைப் பெற முயல்வதில்லை. அவர்கள் கவனம் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்தது. கூடுதலான கல்வி தகுதி ஒன்றே இனி வரும் தலைமுறைகளைக் காக்க ஒரே வழி. ஆனாலும் இந்நாட்டுக் குடிமகனாய் தகுதியான கல்வி பின்புலம் கொண்ட ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்காதபோது போராட்டங்கள் தொடர்கிறது. இதுபோன்ற அடிப்படை உரிமைக்கான போராட்டங்களைக் எடுத்துக்கொண்டுதான் ஹிண்ட்ராப் உருவாகியது.
நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை
ஆதவன் தீட்சண்யா மூலமாகவே தேவா அறிமுகமானார். ‘குழந்தை போராளி’ எனும் சுயசரிதையை, டச்சு மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்த்தவர். அதே போல ‘அனொனிமா’ எனும் நூலை ஜெர்மன் மொழியிலிருந்து மொழிப்பெயர்த்துள்ளார். இரண்டு முறை தொலைபேசியில் பேசினோம். அப்போது அந்தப் புத்தகம் குறித்த கருத்துரைகளை வாசித்திருப்பதாகவும் நூலை இன்னும் வாசிக்கவில்லை என உண்மையை ஒப்புக்கொண்டேன். இறுதி தமிழகப்பயணத்தில்தான் அந்நூலை நீலகண்டனிடம் வாங்கினேன். தொடர்ச்சியாகத் தமிழ் நாவல்கள் குறித்த கவனத்தில் இருப்பதால் இன்னும் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஓர் எழுத்தாளரின் ஒரு படைப்பைக்கூட படிக்காமல் அவருடன் உரையாடுவது குற்ற உணர்வையே எழச்செய்யும். ஆனால் வேறு வழி இல்லாமல் அதைதான் செய்ய நேர்ந்தது.
Continue reading
அஞ்சலி – எம். குமாரன் : காணாமல் போகும் தொலைபேசி எண்கள்!
எல்லோர் போலவும் எழுத்தாளர் எம்.குமாரனின் மரணச்செய்தியும் எவ்வித விசேட ஓலங்களை எழுப்பாமல் குறுஞ்செய்தியில் வந்து சேர்ந்தது. முதலில் இயக்குநர் சஞ்சைதான் தகவல் அனுப்பினார். பின்னர் சை.பீர் முகம்மதுவிடமிருந்து சற்று விரிவான தகவலுடன் வந்தது. அதில் ‘பிரபல எழுத்தாளர் எம்.குமாரன்’ எனும் அடைமொழி இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் சந்துரு அவர் பணிபுரியும் நாளிதழிலிருந்து அழைத்து எம்.குமாரன் படம் கிடைக்குமா எனக் கேட்டார். இணையத்தில் சுத்தமாக இல்லை. மலேசியாவில் ‘பிரபலமான எழுத்தாளர்களின்’ நிலையை எண்ணி வருந்திக்கொண்டேன்.
எம்.குமாரன் இறுதியாகக் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வு ‘3-வது வல்லினம் கலை இலக்கிய விழா’வாகத்தான் இருக்க வேண்டும். இறுதியாக அவரைச் சந்தித்த போது மலேசிய இலக்கிய சூழல் குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது முற்றிலும் மலேசிய இலக்கிய சூழல் குறித்த அதிருப்தியான மனநிலையில் இருந்தார். வல்லினத்தின் வருகை அவருக்கு உற்சாகம் தருவதாய் இருந்தது. இனி தான் எழுதினால் அது வல்லினத்துக்கு மட்டும்தான் என்றார்.
Continue reading


