தமிழகத்தில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் இல்லத்தில் இருந்த ஒரு பகல் வேளையில் ‘காதல் இதழ் நிறுத்தப்பட்டது’ என்ற குறுந்தகவல் மணிமொழியிடமிருந்து வந்தது. மலேசியாவிலிருந்து புறப்படும்போதே ஒரு வசதிக்காக மொட்டை அடித்திருந்த மண்டையில் ‘நங்’ என யாரோ அடித்தது போல உணர்ந்தேன். உடனே தொலைப்பேசியில் அழைத்தபோது மௌனங்களாலான பெரும் இறுக்கத்தை, அழுகையை முடிந்துவிட்டதற்கான அடையாளத்தோடு மணிமொழி வெளிபடுத்தினார். ‘காதல்’ இதழ் உருவான காலங்கள் இன்பமானவை. மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள் நான், மணிமொழி, யுவராஜன், சந்துரு, தோழி, பூங்குழலி என விடிய விடிய இதழை உருவாக்கிய கணங்கள் இன்றும் நினைவில் உள்ளன.இரண்டு மணிநேரத்திற்கு ஒரு தரம் கடையில் இறங்கி தேநீர் பருகிவிட்டு காலை ஆறு மணிக்கு வீடு திரும்புவோம். படைப்புகளைச் சேகரிப்பது திருத்துவது போன்ற பணிகளை நானும், அவற்றை டைப் செய்து திருத்தம் பார்த்து வைப்பதை மணிமொழியும் செய்ய பொருளாதாரம் குறித்தான எந்தக் கவலையும் இல்லாமல் ‘காதல்’ இதழ் நகர்ந்து கொண்டிருந்தது. சந்துருவின் பங்களிப்பு இதில் முழுமையானது. காதல் இதழுக்கு அவர் அமைத்துக்கொடுத்த பக்கங்கள் தனித்துவமானவை.

டு’ எனும் முத்தம்மாள் பழனிசாமி எழுதிய தன் வரலாற்று புத்தகம் குறித்து எழுதத்தான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினேன். ஆயினும் அப்புத்தகத்தை வாசித்து முடித்தப்பின் ஒரு சுய வரலாறு எதற்காக எழுதப்பட வேண்டும் என்ற கேள்வி முன் வந்து நின்றது. அதன் அடிப்படையில் ஏற்கனவே நாவலாகவும் சுயவரலாறாகவும் எழுதப்பட்ட சில பிரதிகள் உடனடியாக நினைவுக்கு வந்தன.



