மாற்றம் தமிழுக்கு ஊறு செய்யக்கூடாது! – இரா. திருமாவளவன்
Continue reading
‘நாடு விட்டு நாடு’, ‘நாட்டுப்புறப் பாடல்களில் என் பயணம்’ போன்ற வரலாற்றை அடிநாதமாகக் கொண்ட படைப்புகளை மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்குக் கொடுத்தவர் முத்தம்மாள் பழனிசாமி. தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், ஓய்வு பெற்றப்பின்னரே எழுத்துத்துறையில் தீவிரம் காட்டியுள்ளார். ஆங்கிலம் , தமிழ் என இரண்டு மொழியிலும் இயங்கும் இவர் மிக அண்மையில் ‘சயாம் மரண இரயில்வே’ குறித்த கள ஆய்வில் இறங்கி அதன் பலனாக ஓர் நூலையும் பதிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது 78 வயதிலும் இடையறாது இயங்கிகொண்டிருக்கும் முத்தம்மாள் அவர்களை நேர்காணல் செய்ய அணுகினோம். இந்த நேர்காணல் செம்பருத்தி இதழில் வெளியிடப்பட்டு இங்கு மறுபிரசுரம் காண்கிறது.
Continue reading
நான் சண்முகசிவாவைச் சந்தித்தபோது காதலித்துக்கொண்டிருந்தேன். என் காதல் பற்றிச் சொல்லதான் நான் சண்முக சிவாவைச் சந்தித்ததாகச் சொல்லலாம். எதையும் சிந்திக்கவிடாமல் செயல்படவிடாமல் சதா நச்சரித்துக்கொண்டிருந்த காதல் அது. நான் இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரவியிருப்பதாகப் பெரும் கற்பனையில் இருந்தபோது என் கால்கள் தரையில் இருந்ததைத் திரும்பத் திரும்பக் காட்டிய காதலை நான் உள்ளூர வெறுக்கத் தொடங்கியிருந்தேன். என் காதலை நான் உள்ளூர வெறுப்பதை வேறு யாராவது சொல்லி நான் கேட்க வேண்டும் போல இருந்தது. காரணம் ஒவ்வொரு கனமும் நான் காதலை நேசிப்பது போன்றதான ஒரு பாத்திரத்தில் மிகத் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தேன்.
‘Ovi yar Raja commit suicides.’
நண்பர் சந்துருவிடமிருந்து இந்தக் குறுந்தகவலை ஒருதரம் உரக்க வாசித்தபோது வீடு நிசப்தமானது. அந்நிசப்தத்தினூடே நான் சந்துருவை அழைத்துக் கேட்டபோது, விவரம் அவர் சொல்லும் வரை எனக்குத் தெரியாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
Continue reading
21-5-1964-ல் தமிழ் முரசு பத்திரிகையில் முதல் புதுக்கவிதை தோன்றியதாக வரலாறு சொல்கிறது. `கள்ளபார்டுகள்’ என்ற கவிதையை எழுதிய சி. கமலநாதன் பெயர் தொடர்ந்து எல்லா புதுக்கவிதைத் திறனாய்வு கட்டுரைகளிலும் இடம்பெற்று விடுகின்றது. இன்னும் சிலர் அது `கள்ளபார்டுகள்’ இல்லை `காலப்படகுகள்’ எனவும் கூறிவருகின்றனர். அவர் காலகட்டத்தில் புதுக்கவிதைகள் எழுதியபைரோஜி நாராயணன், எம். துரைராஜ், போன்றோர்களின் படைப்புகளும் முறையான பதிவில் இல்லாமல் எங்கோ ஓர் அலிபாபா குகைக்குள் அடைந்து கிடக்கிறது. இப்படி ஆரம்பமே ஆதாரங்கள் குறைந்திருக்கும் புதுக்கவிதை வரலாறு நமக்கு.
Continue reading
இந்த எதிர்வினையை எழுதுவதற்கு முன் மிகக் குறைந்த சொற்களை மட்டுமே பயன்படுத்தும் திறன் வாய்க்க வேண்டுமென எனக்குள் ஒருமுறை கூறிக்கொள்கிறேன். சிலருக்கு அதிகச் சொற்களைப் பயன்படுத்துவது விரயம்.
Continue reading
விஸ்கி மணியத்தின் சகாக்களும் சாமிவேலுவின் அடிவருடிகளும் காரணம் இல்லாமல் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சடங்கு பூர்வமான சர்ச்சைகள் போல, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை விமர்சிப்பதும் ஒரு குழு சார்ந்த அரசியலாக சில சமயங்களில் அதன் தலைவராலேயே வர்ணிக்கப்படும் ஆபத்து இந்தக் கட்டுரைக்கும் நிகழலாம். பல்வேறு சூழல்களில் எழுத்தாளர் சங்கத்தின் போக்கு குறித்து விமர்சித்ததின் பலனாக வரும் தொலைபேசி அழைப்புகளின் மூலம் காதில் இரத்தம் வழிந்ததுதான் மிச்சம். சுய புராணங்களும்… வெட்டிப் பேச்சுகளும்… அங்கலாய்ப்புகளும்… மிரட்டல்களும் வெளிபடுமே தவிர நிபுணத்துவத்தோடு அவர்கள் தரப்பு சார்ந்த தெளிவான விளக்கம் இதுவரையில் வெளிவந்தபாடில்லை. ஆச்சரியமாக நான் ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் எழுத்தாளர் சங்கத்தின் போக்கு குறித்து ஒரு நேர்காணலில் பதிவு செய்த எனது கருத்துகளுக்கு அதன் தலைவர் பெ.இராஜேந்திரன் பதிலுரைக்கும் விதமாக அதே ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் சில கருத்துகளை முன் வைத்திருந்தார். அதில் ஒரு ஆய்வாளனுக்கே உரிய சில புதிய கண்டுபிடிப்புகளின் வழி தன் அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதில் அவர் எப்போதும் போல ‘எழுத்தாளர் சங்கத்தைக் குறை சொல்பவர்கள் சிறு கூட்டத்தினர்தான். அவர்கள் 6 அல்லது 7 பேர் மட்டுமே’ என கணக்கெடுப்பெல்லாம் செய்திருந்தார். தந்தை பெரியாருக்குப் பிறகு அதிகம் சிந்திக்கத்தூண்டும் கருத்துகளைக் கூறுபவர் இராஜேந்திரனாகத்தான் இருக்க வேண்டும். அந்த நேர்காணலில் அவர் முன் வைத்த கருத்திலிருந்து இந்தக் கட்டுரை:
Continue reading
மலேசிய இலக்கியம் பரந்துபட்ட தளத்தில் வாசிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. வெகுசன எழுத்துகள் அல்லது எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியத்தின் அடையாளமாகக் காட்டப்படுவது அதில் முக்கியமானது. தொடர் உரையாடல்கள், விவாதங்கள் மூலமாக முந்தைய படைப்பிலக்கியங்கள் மற்றுமொரு காலக்கட்டத்தில் விவாதங்கள் மூலம் மீட்கப்படாமல் இருப்பதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். அதேபோல மலேசிய எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளர்களின் பினாமிகள் போல மலேசிய இலக்கியத்தை ஒட்டிய விரிவான வாசிப்பு இல்லாமல் அதன் மீது ஆழமான விமர்சனங்களை வைக்காமல் ‘ஒன்றும் இல்லை’ என மொண்ணையாக கருத்துக்கூறுவதும் மோசமான அரசியல்தான். இதைவிட முக்கியமாக தமிழகத்தில் கா.நா.சு, சு.ரா, ஜெயமோகன், அ.மார்க்ஸ், போன்ற ஆளுமைகள் ஒவ்வொரு காலத்திலும் தமிழ் இலக்கியத்தின் மீது தங்களின் ஆழமான பதிவுகளைச் செய்வது போல இலங்கை இலக்கியத்தை ஒட்டிய மதிப்பீடுகள் கைலாசபதி, கா.சிவதம்பி, எம்.ஏ.நுஃமான், மு.தலையசிங்கம் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. மலேசியாவின் இலக்கியத்தை அவ்வாறான ஒரு பரந்த வாசிப்பு மற்றும் தீவிரமான விமர்சன போக்கில் முன்னெடுக்கும் ஆளுமைகள் இல்லை எனலாம். துரதஷ்டவசமாகப் பேராசிரியர்கள் சிலர் அப்பாத்திரத்தை மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் போதிக்கும் ஒரே தகுதியினால் ஏற்கின்றனர்.
Continue reading
கேள்வி : இலக்கியம் சார்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்த வல்லினம், இம்முறை வரலாற்றை முன்னெடுக்கிறது. என்ன காரணம்?
ம.நவீன் : இலக்கியத்தை ஓர் அரசியல் செயல்பாடாகக் கருதுபவன் நான். வார்த்தைகள் கொடுக்கும் சிலிர்ப்புகளும் , கற்பனைகளும், பிரச்சாரங்களும், போலி உணர்ச்சிகளும் எனச் சூழ்ந்திருக்கும் மலேசிய இலக்கிய உலகில் உண்மையான வாழ்வை அதன் அரசியல் பார்வையோடு உரைடாலுக்குட்படுத்த வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். இதற்கு நமக்கு நமது வரலாறு, சமகால அரசியல் சூழல், தத்துவங்கள் எனப் பலவும் தேவையாய் இருக்கின்றன.
Continue reading