Author: பவித்திரா

கோ. சாமிநாதன்: தந்தையாகும் குரு

(கோ. சாமிநாதன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) கற்றலென்பது கற்றலால் மட்டுமே நிரம்பும் தருணம் அல்ல. கற்றலுக்கு அப்பால் அகம் சார்ந்த, உணர்வு சார்ந்த சூழலைக் கட்டியெழுப்பி அதனுடன் இயைந்து நீள்வது கற்றலின் ஆயுள் நீளம் என சாமிநாதன் அவர்களின் வகுப்புகளின் வழி…

சுண்ணாம்பு அரிசி: பெருமதியாகாத தகவல்களின் கலை

பிரிதோர் காலத்தின் பதிவுகளாக, ஒரு சமூகத்தின் ஆழ்மன ரணங்களாக துயரோலங்களின் எச்சங்களாக இப்படி பல்வேறு படிமங்களால் படைப்பிலக்கியத்தின் தளம் ஆழம் செல்கிறது. காலம் விழுங்கிவிட்ட பெறும் வரலாற்றை, பெறும் சம்பவங்களை, பண்டைய வாழ்வை, விழுமியங்களைப் புனைவுகள் மீட்டெடுக்கின்றன. நமக்கு மீண்டும் நினைவுப்படுத்துகின்றன. எனவே புனவுகளைக் காலத்தின் பிரதிகள் என வகைப்படுத்தலாம். ஒரு வாழ்வைத் தரிசிக்க முடிகின்ற…

இலைகளில் ஒளிந்துள்ள எழுத்து

அபிராமி கணேசனுக்கு  இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது கிடைத்துள்ளது. என்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நிலையில்   ‘புருனோ மான்சர்- காட்டில் கரைந்த காந்தியம்’ என்ற கட்டுரையின் வழியேதான் அவரை மனதில் மீட்டெடுக்க முடிந்தது.  இளம் எழுத்தாளர் விருதை வழங்க அபிராமி கணேசனைத் தேர்வு செய்ததன் காரணத்தையும் அதன் வழி அந்த விருதின் தரத்தையும் அறியும்…

இலைகளில் ஒளிந்துள்ள எழுத்து

‘2020-இல்  அபிராமி கணேசனுக்கான இளம் எழுத்தாளர் விருதை வல்லினம் அறிவித்தபோது அவரை என்னால்  ‘புருனோ மான்சர்- காட்டில் கரைந்த காந்தியம்’ என்ற கட்டுரையின் வழியேதான் மனதில் மீட்டெடுக்க முடிந்தது.  வல்லினத்தின் இந்த விருது அறிவிப்பு  சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரை போன்ற புனைவு சார்ந்த படைப்புகளுக்கு மத்தியில் ஆய்வுக்கட்டுரைகள் எவ்விதம் ஒரு எழுத்தைத் தனித்துக் காட்டிவிடும்…

பொன்னூல் வலைகள்

அருண்மொழி அவர்களை முதலில் நான் சந்தித்தது ஊட்டி முகாமில்தான். சந்தித்தேன் எனச் சொல்வதைவிட அவரது ஆளுமையை தொலைவில் நின்றபடி வியந்து ரசித்துக்கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. தனது கருத்துகளை அவர் வலுவாகப் பதிவு செய்யும் விதம் ஆச்சரியமாக இருந்தது. அதற்குப் பின்னால் அவருக்கு இருக்கும் வாசிப்புப் பின்புலத்தை முகாம் முடிவதற்குள்ளாகவே அறிந்துகொண்டேன். தொடர்ந்து கெடாவில் நடந்த ‘பேய்ச்சி’…

சிறிய காடும் சில மனிதர்களும்

மொத்தம் 18 தனித் தனி கட்டுரைகளைக் கொண்ட சிறுகாட்டுச் சுனை அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் தனித்தன்மையை, நாமறியாத பல புதிய வண்ணங்களைக் காட்டக்கூடிய தொகுப்பு. மிக எளிமையான மொழி நடையில்  சிரமமற்ற வாசிப்பை வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் அழகு நிலா. இக்கட்டுரைகள் வெறும் தகவல் கோர்வைகளாக அல்லாமல், உயிர்ப்பான அனுபவப் பின்னணியிலிருந்து யதார்த்தமான பாணியில்  எந்த…

கதைத் திருவிழா சிறுகதைகள்

முடிவற்றுச் சுரந்து கொண்டே இருக்கும் புனைவு மனத்தில் இருந்து மீள முடியாமல் திளைத்திருக்கும்  ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் வெகு சிலரே. தங்களின் வாழ்வு கொடுக்கும் ஆழ் மனப்பதிவுகளாலும் புற உலக வாழ்வை அவதானிப்பதாலும் வாழ்ந்து பார்ப்பவர்கள் அவர்கள். எனவே, தங்களுக்கான தன்னிறைவைக் கலையின் வழியே அடைகிறார்கள். வெண்முரசு நிறைவுற்றபோது  பிறப்பு முழுமையடைந்த மனநிலையை அவரிடம் பார்க்கமுடிந்தது.…

போரின் கதைகள் : தாசெக் ஷாஹ்டு

‘தாசெக் ஷாஹ்டு மற்றும் வேறு சில கதைகள்’ (Tasik Syahdu dan cerita-cerita lain) தேசிய இலக்கியவாதியும் மூத்தபடைப்பாளியுமான சமாட் சாய்ட் எழுதிய சிறுகதை தொகுப்பு. 2003 -இல்  பிரசுரிக்கப்பட்ட இத்தொகுப்பின் 22 கதைகளும் அவரே தேர்ந்தெடுத்து பிரசுரித்தவை. இத்தொகுப்பில் ‘ரிம்பா செனி செவோராங் செனிமான்’ அதாவது ஒரு கலைஞனின் கலை வனம் என்ற தலைப்பிலான …

விலங்குகள் திரியும் கதைகள்

சமகால மலேசிய புனைவிலக்கிய வெளியில் ம.நவீனின் எழுத்துகள், எண்ணிக்கையாலும் அது அடைந்திருக்கும் வாசகப் பரப்பாலும் கவனம் கொள்ள வைக்கின்றன. ஆழமற்ற நேர்கோட்டுக்கதைகளை அதிகம் வாசித்துப் பழக்கியிருக்கும் மலேசிய வாசக சூழலில் ம.நவீனின் புனைவுகள் மாறுபட்ட வாசிப்பனுபவத்தைத் தருபவை. வாசகனின் உழைப்பைக் கோருபவை. காலத்தால் நிகழக்கூடிய அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கியே இலக்கியம் பரிணமிக்கிறது. மொழி, சொல் முறை,…

குருபூர்ணிமா: கலையும் வாழ்வும்

கலைக்குள்ளிருக்கும் நுட்பத்தை உரையாடுவது இலக்கியச் சந்திப்புகளில் பிரதானமான அம்சம். அதைக்காட்டிலும் அதன்  அடிக்கல்லாய், வேராய்ப் படிந்து கிடக்கும் கலைஞனின்  கைரேகைகளை  அறிவதும் சுவாரசியமானது. அது இளம் படைப்பாளிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று எனலாம். குரு பூர்ணிமா ஒரு கலைநிறைவின் கொண்டாட்டமாகி 5 ஜூலை 2020 அன்று நடந்தபோது எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடலை யூடியூப் வழி கண்டேன்.…

அந்திமழை சிறுகதை சிறப்பிதழ்: ஒரு வாசக பார்வை

கொரோனா காலத்திலும் எந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுமின்றி இலக்கிய வாசகர்ளுக்கான பயணங்கள் மட்டும் இன்னும் திறந்தே கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய நிலத்தில், புதிய மனிதர்களோடு, பல்வேறு அனுபவங்களை, கண்டடைதல்களை வெவ்வேறு திசைகளில் இருந்து இலக்கியங்கள் வழங்குகின்றன. இலக்கிய வாசகர்கள் பூட்டிய அறைக்குள்ளிருந்தே உலகை தரிசிக்கக்கூடியவர்கள். அப்படி என் வாசிப்பை அர்த்தப்படுத்திய படைப்புகளில் மே மாத அந்திமழை…

மூன்று நாவல்களும் முழுமையின் கலைவடிவும்

காலங்களில் படர்ந்து கிடக்கும் வாழ்வின் அவதானிப்பையும், நிலங்களின் குறிப்பையும், வாழ்வின் ஓசையையும் அதன் நிசப்தத்தையும் விரிந்த தளத்தில் பேசக்கூடிய இலக்கிய வடிவம் நாவலாகும். மொழியால், மீட்டெடுக்கப்படும் உணர்வுபூர்வமான வரலாறுகள் அவை. மலேசியாவைப் பொறுத்தவரை சிறுபான்மை இனமாக இருப்பதாலேயே தமிழ் நாவல்களில் வரலாற்றுக் குறிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகம். யாருடைய வரலாறு அழியும் பலவீனத்தைக் கொண்டுள்ளதோ அவை மறுபடி…

உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி

காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக்…

இன்றைய உலக இலக்கியம்: சில புரிதல்கள்

கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சிறுகதைப் பட்டறையே நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சி. அதற்குப்பின் வல்லினக் குழு நடத்திய எந்தக் கலந்துரையாடலையும், நிகழ்ச்சியையும் தவர விட்டதில்லை. அப்படிதான் இந்த முகாமிலும் வல்லினத்துடனான எனது இலக்கியப் பயணம் நான்காவது முறையாகத் தொடர்ந்தது.  சிறுகதைப் பட்டறையில் என்னை ஓர்இலக்கிய வாசகியாக உருவகித்துக் கொண்ட நான் இலக்கியத்தின்…

மண்ணும் மனிதர்களும்: வரலாற்றில் பயணம்

ஒரு கலைஞனுக்கான உலகம் நிச்சயம் சராசரியர்களிடமிருந்து மாறுபட்டவை. தான் கடந்து போகும் ஒவ்வொன்றையும் வரலாறாக்க தெரிந்தவர்கள் அவர்கள். நமக்கு முன் வாழ்ந்த பல தலைமுறைகளின் வரலாற்றை படைப்பாக்கவும் அறிந்தவர். ஓர் இனத்தை, ஒரு மதத்தை, ஓர் ஆட்சியை, ஒரு மண்ணை அதன் மக்களை, அவர்களின் பின்புலத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன் சென்று அறிய மட்டுமே வரலாறு…