Author: தயாஜி

பூங்குழலியின் கவிதைகள்

ஒ

முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். அறிவிற்கும் மனதிற்குமான இடைவெளியை வார்த்தைகள் மூலம் நிரப்புவது கவிதை. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பாதிப்பில் உழன்று கொண்டிருக்கும் மனிதனின் வாழ்வில் விடுபட்ட பக்கங்களை நினைக்க வைப்பதும், அவன் விட்டுவிட்ட இடங்களை நிரப்ப வைப்பதும் கவிதையின் செயல்பாடாகப் பார்க்கிறேன். இன்னொன்றையும் இங்கு…

நீயின்றி அமையாது உலகு – 4

10728338-Vintage-cartoon-little-girl-with-flower-Stock-Vector

புத்தக அலமாரியை சரிப்படுத்த எத்தனிக்கும்போது சில சமயங்களில் இது நடக்கலாம்.  பழைய நினைவுகள்.  மறக்க முடியாத தருணங்கள்.   கொடுத்ததும் கிடைத்ததும்.   வலிகள்.   இன்ப அதிர்ச்சி என அடுக்கிக்கொண்டே போகலாம் கிடைத்தது நமது நாட்குறிப்பாக இருக்கும்போது. . . நாட்குறிப்பு என்பதைவிட குறிப்புகள் எழுதுவதில் இருந்துதான் என் எழுத்து இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.  எனக்கு எதையும்…

நீயின்றி அமையாது உலகு – 3

taya g

துர்க்கனவு போல அவள் முகம் வந்துபோனது. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அவள் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்………… எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. விடுமுறையைச் சம்பளமாக்கிட தற்காலிகமான வேலையை தேடிக்கொண்டிருந்தேன். அச்சமயம் தோட்டங்களை துண்டாடிய பின் அங்கு தொழிற்சாலைகளைக் கட்டியிருந்தார்கள். இதற்கு முன் அங்கு வாழந்தவர்களுக்குத்தான் முதல் வேலை வாய்ப்பு…

நீயின்றி அமையாது உலகு

01

இந்த எழுத்துகள் மூலம் உங்கள் வாழ்வின் சில பக்கங்களை புரட்டிக்கொடுத்தவர்களை நீங்கள் நினைவுகூர்ந்தால் அதுவே தற்போதைய நமது இருப்புக்கான அர்த்தத்தை கொடுக்கும். ஒருவகையில் அது என் நினைவுகளில் சுற்றித்திரியும் பெண்களுக்கு நான் செய்யும் நன்றியும் கூட. பெண்கள் இல்லாமல் வாழ்வில் உச்சம் என்பதன் தரிசனம் கிடைக்காது என்றே நம்புகிறேன். அப்படிக் கொடுப்பவர்கள் நம்முடனேயே வாழ்கின்றவர்களாக இருக்கவேண்டிய…

நீயின்றி அமையாது உலகு

13

அந்தப் பெண்ணை நினைவில் வைத்துக்கொள்ள அவளின் முகமோ அவளின் பெயரோ என்னிடம் இல்லை. காலியாய் கிடக்கும் வீடொன்றே போதுமானதாக இருந்தது. உண்மையில் எனக்கும் பெண்களுக்குமான மனத்தொடர்பும் அவர்கள் மீதான ஈர்ப்பும் ஏற்பட அந்த பெண் காரணமாக இருக்கலாம். இத்தனைக்கும் அவள் குறித்து நான் அறிந்தது உண்மைதானா என்கிற சந்தேகம் கொள்ளக்கூடிய வயதெல்லாம் அப்போது இல்லை. இன்றும்…

கேள்விகளிலிருந்து பதிலுக்கு

tayaji cover

என் முதல் புத்தகம் இது. ஐந்தாண்டுகள் வல்லினத்தில் நான் எழுதிய பத்திகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக்கப்பட்டுள்ளது. பெயருக்குத்தான் பல ஆண்டுகள் எழுதியதாகச் சொல்லிக்கொண்டாலும் அந்தந்த காலக்கட்டத்தோடு சில படைப்புகள் காலாவதியாகிவிடுவதை இந்த நூலுக்காகக் கட்டுரைகளைத் தொகுக்கும் போது உணர்ந்தேன். இது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. எழுத்தென்பது கருத்து ரீதியில் முரண்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் காலம் கடந்தும் நிற்கவேண்டும். அப்படியான…

பட்டு: புரிந்து கொள்ளாத அன்பு நிரந்தரமாகிறது

தயாஜி கட்டுரை படம்

காதலுக்கு ரசாயன மாற்றங்களைக் காரணமாக சொன்னாலும், அத்தகைய ரசாயன மாற்றம் ஏற்படும் நேரம் காலமெல்லாம் நம் கைவசம் இருப்பதில்லை. ‘இருபது வயதில் காதல் வராவிட்டாலும் தப்பு; அறுபது வயதில் காதல் வந்தாலும் தப்பு’ என்று சில பேச்சாளர்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். அந்த வசனங்களுக்கு கைதட்டல்களின் சத்தம்தான் இருக்குமே தவிர வாழ்வின் உண்மையை அவை நெருங்குவதே இல்லை.…

அபத்தங்களைப் பேசுதல் கூடாதா..?

colored-150x150

பத்திரிகைகளில் எனது படைப்புகள் வரத்தொடங்கிய காலம். பெரும்பாலும் நகைச்சுவை துணுக்குகள்தான் எனக்கு சுலபமாகக்  கை கொடுத்தன. நண்பர்களுடனான உரையாடலில் இருந்தும் வீட்டிலும் உறவினரிடத்திலும் கிடைத்த நகைச்சுவை உரையாடல்களையும் கொஞ்சம் மாற்றி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். பள்ளியில் பிரசுரமான படைப்புகளை காட்டி, பள்ளிக்கு வெளியிலாவது நான் கெட்டிக்காரனாக இருக்க வேண்டியிருந்தது. இப்படி வளர்ந்த என் எழுத்து…

சாதி மயிர்

jegan_5-150x150

“ஆசிரியருக்கும் முடிவெட்டறவருக்கும் என்ன வித்தியாசம்..?” “ஆசிரியர் பிழை திருத்துவார் முடிவெட்டறவர் முடி திருத்துவார்..” சமீபத்தில் சில மாணவர்களைக் கடக்கும் போது அவர்கள் பேசியது எனக்கு சிரிப்பை வரவைத்தது . இதனை கவனித்த இரண்டு மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இடத்தைவிட்டு மெல்ல மறைந்தார்கள். தற்போது பணி நிமித்தம் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.…

ஊர்க்காரர்களும் உள்ளூர்க்காரர்களும்

vijay-in-jilla-150x150

‘பிறக்க ஓர் ஊர் பிழைக்க ஓர் ஊர்’ என்ற வசனம் இன்னமும் அதே பிரபலத்துடன் பழக்கத்தில் இருக்கிறது. அதற்கான காரணம் ஒன்றுதான். அச்செயல் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பணத்திற்காகத்தான் இப்படி ஊரை விட்டு ஊர் வருகிறார்கள் என சட்டென கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் மனதினுள்ளே ஒரு சந்தேகம். இங்கு வேலைக்கு வந்திருப்பவர்கள், சாக்கடை அள்ளுகிறவர்கள்,…

காரட்டுக்கு பழகிய கழுதைகள்

donkey_shrek-150x150

மனித மனம் குறித்து பேசுவதென்றால் என்னவெல்லாம் பேசலாம் என்று மனதிற்கும் தெரிந்திருக்காது. மனம் என்பதின் இருப்பிடம் எதுவாக இருக்கலாம் என ஆளுக்கு ஆள் ஓரிடத்தை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அறிவில்தான் மனம் இருக்கிறது. இதயத்தில்தான் மனம் இருக்கிறது. அறிவுக்கும் மூளைக்கும் தொடர்பு இல்லை. இதயத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனம் என்ற ஒன்று இல்லவேயில்லை. எண்ணங்களைத்தான்…

ஒளிப்புகா இடங்களின் ஒலி

ombre de prostituée sur mur de briques

2008-ல் வானொலி அறிவிப்பாளராகத் தொடங்கிய பணியில் 2013 வரை பலதரப்பட்ட அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தது. அனுபவம் சார்ந்த அவை அனைத்தையும் எழுத்துகளாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அப்போது நான் எழுதி வானொலியில் ஒலிபரப்பிய கண்ணாடித்துண்டுகள் என்ற நிகழ்ச்சி எனக்குச் சமூகத்தின் பல முகங்களை அறிமுகம் செய்தது. ‘மலேசியத் தமிழ்ச் சமுதாயம்’ என…

ஆண்குறி சுடும் போட்டி

target-frontpagethumbs

எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு வசதி உண்டு. அத்தனை நீளமும் கைப்பிடியளவு அமைந்திருக்கவேண்டும். இல்லையேல் விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காது. விளையாட்டு என்பதே சுவாரஸ்யம் மிகுந்ததுதானே. இப்போது உடம்பை குறைக்கவும் வயதை மறைக்கவும் ஓடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நினைவுகளில் சூழ்ந்திருப்பது அந்த போட்டி விளையாட்டுதான். இது குழு முறை விளையாட்டு. குழுவாக செயல்படவேண்டும். ஆண்களும் பெண்களும்…

இதான் மனநோயா அடேங்கப்படிங்கப்பா

000

நெடுஞ்சாலையில் நண்பருடன் காரில் போய்க்கொண்டிருந்தேன். தூரத்தில் மேம்பாலம் தெரிந்தது. நடந்து சாலையை கடக்க போடப்பட்டிருந்த மேம்பாலத்தில் மோட்டார்களில் பலர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். இதனை கண்ட நண்பருக்கு கடுங்கோபம். “எதை எதுக்கு பயன்படுத்தனுமோ அதை அதுக்குத்தான் பயன்படுத்தனும். மனுசனுங்க நடக்கறதுக்கு மேம்பாலம் கட்டினா இதுங்களை பாரேன். இந்த பன்றிங்க மேம்பாலத்துல போய் மோட்டார்ல போகுதுங்க” என…

பிடிக்கலைன்னா மூடிட்டு போங்க…

தயாஜி படம்

பார்த்து, படித்து பிடித்த புகைப்படங்களையும் கருத்துகளையும் முகநூலில் பகிர்வது வழக்கம். பலருக்கு இது பழக்கம். அப்படி பகிர்வது எல்லோருக்கும் பிடிக்கும் என சொல்வதற்கில்லை. பிடிக்காதவர்களைன் நாம் பொருட்படுத்துவதும் பொருட்படுத்தாமல் போவதும் அவர் செய்யும் பின்னூட்டத்தில்தான் இருக்கிறது. சமீபத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்திருந்தேன். ‘நீங்கள் யாரோடும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையென்றால்; நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று…