Author: இரா.சரவணதீர்த்தா

மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள்-1

index

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் நாளிதழ்களின் பங்களிப்பு முக்கியமானது. சிறுபான்மை இனமான இந்தியர்களின் எழுச்சிக்கும் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் நாளிதழ்களே ஒவ்வொரு காலத்திலும் பெரும் பங்காற்றியுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக தமிழ்ப்பத்திரிகையை இயக்கியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து மலாயாவுக்கு வந்திருந்த படித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இந்தியாவில் இருக்கும்போது பத்திரிகைத் துறையிலும் அரசியல் இயக்கங்களிலும் அனுபவம் பெற்றவர்களாக இருந்ததால்…

லெஸ்பியன் கடவுள்

MV5BMTkxMzEyOTIwNl5BMl5BanBnXkFtZTcwMzg4MzEyMQ@@._V1_UY268_CR2,0,182,268_AL_

ஒவ்வொரு மதமும் தங்களின் கடவுளைத், தங்களின் மொழி வழியாகவும்  கலாச்சாரத்தின் வழியாகவும், நம்பிக்கை வழியாகவும் தொன்று தொட்டு கட்டிக்காத்து வருகிறது. இப்படி தாங்கள் காட்டும் கடவுளே உண்மையானவர் என்றும் தங்களுடைய வேதங்களே இறைவனின் வார்த்தைகள் என்றும் பிரச்சாரம் செய்தும் வருகின்றது. இவ்வுலகம் பாவம் நிறைந்ததாகவும், இந்தப்பாவம் நிறைந்த உலகத்தைக்காப்பற்ற மதபோதகர்களால் இயலும் என்றும் அடிப்படைவாதம் நம்புகிறது.…

பார்ச்: தரிசும் தாகமும்

IMG-20170701-WA0003

கடுமையான ஆணாதிக்க வாழ்க்கை முறையை அனுபவித்து வரும் கிராமத்துப் பெண்கள், அவர்களின் ஆசா பாசங்களை சக   தோழிகளுடன் பகிர்ந்து கொண்டு எப்படிச்  சிரிக்கவும் முடிகிறது என்று தனக்குள் எழுந்த ஆச்சரிய உந்துதலே இயக்குனர் லீனா யாதவின் பார்ச் திரைப்படத்தின் உருவாக்கம். படத்தின் ஆரம்பத்தில் வரும் எழுத்தோட்டத்தில்  இயக்குனர், அவரிடம் தங்களின் வாழ்க்கை குறித்தத்  தகவல்களை நேர்மையாகப்…

ஒசாமா: பசியும் பசிக்காத கடவுளும்

osama-457780772-large

சோவியத் யூனியன் படை எடுப்பு, தாலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சி, பின் லாடன் தலைமையிலான அல்காயிதா தீவிரவாதப் படை, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாத ராணுவப் படை, அமெரிக்கா ராணுவம் தலையீடு போன்றவற்றில் சிக்கித் தவித்த ஆப்கானிஸ்தான்,  மில்லியன் கணக்கில் கைம்பெண்களையும் அனாதைக் குழந்தைகளையும் 30 ஆண்டுகள் நடந்த போரின் வழி உருவாக்கியுள்ளது. இவர்களின் கணவர்கள்…

முஸ்தாங்: விடுதலையின் கலகக்குரல்

mustang-5

துருக்கியில் வாழும் பெண்கள் தங்களுக்கு உரிமைவேண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர்.  பெண்களின் மேல் செலுத்தப்படும் ஆதிக்கமும் வன்முறையும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலுறவுக் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கான குரல் மறுக்கப்படுகிறது.  2012 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் துருக்கியில் மட்டும் 90,483 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, சிறுவயதுப் பெண்களிடம் பாலியல்…

கோட்பாடுகளும் கௌரவக் கொலைகளும்!

theertha 2

சட்டப்படி குற்றமாகும் கொலைகளுக்கெல்லாம், சட்டப்படி  தண்டனை கிடைக்கிறதா? அல்லது கொலைகள் நியாயப்படுத்தப்பட்டு, சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனை  குறைக்கப்படுகிறதா? மண், பொன், பெண்,  ஆகிய மூன்று பழங்குடிக் கோட்பாடுகளைக் காக்கும் கடமையில் இருப்பதாக நம்பிக்கொண்டு வாழும் குடும்பங்கள், குடும்பத் தலைவர்கள், கௌரவக் கொலை என்ற பெயரில் பெண்கள் சமுதாயத்தை அணுவணுவாகக்  கொன்று தின்ற பிறகு, மதம் அல்லது பாரம்பரியத்தைக் காரணம் காட்டிச் செய்த…

ஒளி புகா இடங்களின் ஒலி: எளிமையில் உள்ள உண்மை!

tayaji

எழுத்தென்னும் பெரும்பசிக்குத் தன்னையே தின்னக் கொடுப்பதும் கலையின் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்து கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டு சிரிக்கிறேன் என்று கூறி இருக்கும் எழுத்தாளர் தயாஜி, அவர் தொகுத்திருக்கும் ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் கட்டுரை தொகுப்பின் வழி வெளிப்படுத்தி உள்ளார். எழுத்துலகில் புதிய அறிமுகம் என்றாலும் எழுத்து இவருக்குப் பழைய நண்பன் என்பதை அவருடைய…

தி சர்க்கிள்: மனக் காடுகளும் மதக் கோடுகளும்

12

கிடக்கும் காடுகளைப் போல் மனிதனின் மனங்களுக்குள் அடர்ந்து கிடக்கும்  ஆசைகளும் கனவுகளும் மதக் கோடுகளால்  எல்லைப்படுத்தப்படும்  போது அதனால் விளையும் எதிர்வினைகள்  மதக் குற்றங்களாக விசாரணைக்குள் கைதாகிறது. இந்த மனக்காடுகளைச் சுமந்து கொண்டு சமூகத்தில் நடமாடும் மனிதனின் உணர்வுகள் மதக் கோடுகளால் பரிசீலனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மதத்தின் பேரில் பெண்களின் மேல் பாய்ச்சப்படும் பரிசீலனைகள் ஆண்…

“தமிழ் எழுத்தாளர்களுக்குப் பெருமளவு ISBN குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.”- விஜயலட்சுமி

விஜயலட்சுமி

சரவணதீர்த்தா: தொடக்கத்தில் வெகுஜன இலக்கிய ரசனை கொண்ட உங்களுக்கு, தீவிர இலக்கியம் குறித்த ஆர்வம் எவ்வாறு தொடங்கியது? விஜயலட்சுமி: எனக்கு எப்போதுமே அதன் பேதம் புரிந்ததில்லை. எனது வாசிப்பும் பொதுவாக ஆய்வுகள் தொடர்பானதுதான். வல்லினம் நண்பர்கள் மூலமாகவே வெகுஜன மற்றும் தீவிர இலக்கியத்தின் பேதம் புரிந்தது. ‘கடக்க முடியாத காலம்’ எனும் ம.நவீனின் நூல் மூலமாக…

வாட்டர்: கனவுகளை மூழ்கடிக்கும் புண்ணிய நதி

சரவணதீர்த்தா கட்டுரை படம்

இந்திய சமூகத்தில் விதவைகள் எந்த நிலைமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும், அந்த அவலம்  வேத சாஸ்திரத்தைக் கொண்டு சமூகத்தின் மத்தியில் எவ்வாறு ஆழமான  நம்பிக்கையாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறது ‘வாட்டர்’ திரைப்படம். சர்ச்சைக்குரிய படைப்பாளி என்று கூறப்படும் இந்தோ-கன்னடியரான இயக்குனர் தீபா மேத்தாவின் இயற்கை கூறுகள் வரிசை கொண்ட (element trilogy) மூன்றாவது படமாக ‘வாட்டர்’…

கண்றாவிகளைச் சுமக்கும் கலாச்சாரம்

நேற்று முன்தினம் முக நூலில் என் அன்புக்கினிய தோழி மாலா ஒரு கேள்வியை முன்வைத்தாள். ” மலேசிய நாட்டில் இதுபோன்ற கலாச்சாரங்களை வரவேற்கலாமா?” என்பது அக்கேள்வியின் சாரமாக இருந்தது. தாயாஜியின் சிறுகதையே இவரின் கேள்விக்குப் பின்னணியாக இருந்தது. இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்குப் பதிலாக அவளிடம் நான் கேள்வியை எழுப்பினேன். “மலேசியா நாட்டில் ஏய்ட்ஸ் நோய்…

ஐந்தடிக்கரனின் செய்தி

saravanatheertha

தமிழ்ப் பத்திரிகை நிருபரை ஐந்தடிக்காரன் என்று அழைப்பதில் மலாக்கா மாநில ம.இகா தலைவர் டத்தோ இரா பெருமாளுக்கு ( முன்னாள் மாண்புமிகு மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர்) ஆனந்தம் தருகிறதென்றால் அவர் அப்படியே அழைப்பதில் எனக்கு வருத்தமும் கோபமும் கிடையாது. ஐந்தடிக்காரன் ( அஞ்சடிக்காரன்), கொடுக்கும் செய்தி எல்லாவற்றையும் பத்திரிகையில் எழுதி விடுவாயா? என்று ஒருமுறை அவர்…

முதுமையின் குளியலறை

இளமைக்காலங்களின் அழுக்குகளை துவைத்தெடுப்பதற்கு முதுமைக்குக் கிடைத்த “புனித நதி” குளியலறைகள்.. மீண்டும் மீண்டும் வந்துப் போகுது இந்தக் குளியலறைக்கு பகிரங்கப் படுத்தாமலேயே  கழுவி எழுக்கமுடியாத அழுக்குகளை சுமந்துகொண்டு நதியும் முதுமையும் இதுவரையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது யாரோ பேச்சைகேட்டு

மே 5 வாழ்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு!

ஒரு தலை ராகமாக ஊடகங்களில் செய்திகள் .உயரத்திலிருந்து கோழிக்குஞ்சு நடமாட்டத்தை கூர்மையாக கவனிக்கும் பருந்துபோல  வெளிநாடுகள் மலேசியாவை பார்த்துக் கொண்டிருகின்றன. ஜாதகக் காரர்கள், என் கணித நிபுணர்கள், கேரளா நம்பூர்தி, இந்தோனேசியா போமோ ஆகியோர்களை இரவு விருந்தோம்பலில் கவனிக்கும்  படுபிசியில் அரசியல்வாதிகள். ஹோட்டல் ரூம்பில் நடக்கும் உள்ளரங்கு விளையாட்டு பொது மைதானம் வரை பார்வைக்கு வைக்கும்…