Category: அறிவிப்பு

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது – 2024

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது 2020இல் தொடங்கப்பட்டது. மலேசியாவில் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்புலகை விரிவான தளத்தில் அறிமுகம் செய்யவும் இந்த விருது உருவாக்கப்பட்டது. விருது தொகையாக 2000 ரிங்கிட்டும் விருது கோப்பையும் வழங்கப்படுகிறது. 2024க்கான வல்லினம் இளம் எழுத்தாளர் விருது அரவின் குமாருக்கு வழங்கப்படுகிறது. அரவின் குமார் சமகால மலேசியத் தமிழ்…

மலேசியாவின் இரு சமகால நாவல்கள்: மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீன் & அ. பாண்டியன்

2023 இல் மலேசியாவில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரண்டு நாவல்களான ‘தாரா’ & ‘கரிப்புத் துளிகள்’ குறித்த கலந்துரையாடல். மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீனையும், அ. பாண்டியனையும் நேரில் சந்திக்க வாருங்கள். எழுத்தாளர்கள் குறிப்பு: ம.நவீன் ம.நவீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை…

மலேசியாவில் சௌந்தரின் யோகப் பயிற்சி

சௌந்தர் அவர்கள் தமிழகத்தில் முதன்மையான யோகப்பயிற்சியாளர்களில் ஒருவர். மரபார்ந்த யோகப் பயிற்சிகளை தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார்.  1950ல்  சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்திய மற்றும் இலங்கை பயணம் மேற்கொண்டு முழுமையான யோக கல்வியை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். சௌந்தர் அந்த குரு மரபில் வந்தவர். எனவே அதே அளவு தீவிரத்துடன் அவரின்…

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023 : தமிழ் நிகழ்ச்சிகளின் விபரம்

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) இம்மாதம் (நவம்பர்) 23-26 ஆகிய நான்கு நாட்கள் பினாங்கு ஜார்ச் டவுனில் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் பகுதிக்கு எழுத்தாளர் ம. நவீன் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் வல்லினம் இணை இயக்கமாகச் செயல்படுகிறது. நவம்பர் 25 – 26 ஆகிய இரு நாட்கள் தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றின் விபரங்கள் பின்வருமாறு:…

தமிழாசியா இலக்கியக் கலந்துரையாடல்

தமிழாசியா மாதம் ஒருமுறை இலக்கியச் சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறது. சந்திப்பில் கலந்துகொள்பவர்கள் வழங்கப்படும் சிறுகதைகளை வாசித்திருப்பது அவசியம். கலந்துரையாடலில் அனைவருமே தாங்கள் வாசிப்பு புரிதல் குறித்து கருத்தைப் பதிவு செய்தல் அவசியம். இம்மாதம் கி. ராஜநாராயணன் சிறுகதைகள் குறித்த உரையாடல் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் 0163194522 என்ற எண்ணில் ம.நவீனைத் தொடர்புக்கொள்ளலாம்.

GTLF & வல்லினம் இலக்கிய விழா

GTLF எனப்படும் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா இவ்வாண்டும் அக்குழுவினரால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை நடைபெறும் இந்த விழாவில் தமிழ் இலக்கியத்துக்கு இவ்வாண்டும் இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தமிழ் பிரிவுக்கு எழுத்தாளர்   ம. நவீனை GTLF அமைப்பு பொறுப்பாளராக நியமித்துள்ளது. மேலும் வல்லினத்தை…

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா

வல்லினம் மற்றும் யாழ் இணைவில் பரிசளிப்பு விழா ஒன்று மார்ச் 18 இல் நடைப்பெற உள்ளது. கடந்த ஆண்டு வல்லினம் குழுமம் அக்கினி சுகுமார் அறிவியல் சிறுகதை போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்தது. அதே சமயம் யாழ் பதிப்பகம் மூலம் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை போட்டி ஒன்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டது. எழுத்தாளர் ம.நவீன், அ.பாண்டியன்,…

வல்லினம் 150 

வல்லினம் கடந்த காலங்களில் இலக்கியம், பண்பாடு, வரலாறு, ஆய்வு, நேர்காணல் போன்றவற்றை உள்ளடக்கிய களஞ்சியங்களை வெளியிட்டுள்ளது. 2010இல் ‘மலேசிய சிங்கப்பூர் 2010’ என்ற தொகுப்பும் 2017இல் ‘வல்லினம் 100’ என்ற தொகுப்பும் வல்லினம் வெளியீட்டில் வெளிவந்தன.  இதனைத் தொடர்ந்து ‘வல்லினம் 150’ எனும் பெருந்தொகுப்பு வல்லினம் தயாரிப்பில் வெளிவர உள்ளது. இந்தத் தொகுப்பில் மலேசியா மற்றும்…

GTLF & வல்லினம் இலக்கிய விழா நிரல்

25.11.2022 (வெள்ளிக்கிழமை) இடம் : பிரம்ம வித்யாரண்யம் (சுங்கை கோப், கெடா) மாலை மணி 4.00: தேனீர் உபசரிப்பு மாலை மணி 5.00: தமிழ் விக்கி அறிமுகவிழா இரவு மணி 7.00 : ஷேக்ஸ்பியரின் மூன்று நாடகப் பகுதிகள் அரங்கேற்றம் இரவு மணி 8.30 : இரவு உணவு 26.11.2022 (சனிக்கிழமை) இடம் : பிரம்ம…

வல்லினம் & GTLF இணைவில் மாபெரும் இலக்கிய விழா

இம்மாத இதழ், வல்லினம் மற்றும் ஜார்ச் டவுன் இலக்கிய விழா குழுமத்தின் இணைவில் நடைபெற உள்ள மாபெரும் இலக்கிய விழாவின் சிறப்பிதழாக மலர்கிறது. இலக்கிய விழா தகவல்களோடு அதில் பங்கெடுக்கும் இலக்கிய ஆளுமைகள் குறித்த விரிவான கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. உலகில் தலைசிறந்த இலக்கிய விழாக்களில் ஒன்றான ஜார்ச் டவுன் இலக்கிய விழாவில் வல்லினமும் ஒரு…

சமகால நாவல் சிறப்பிதழ்

சமீபத்தில் வந்த தமிழ் நாவல்கள் குறித்த விரிவான அறிமுகத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கில் இச்சிறப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி சிறந்த நாவல்களை மட்டும் அறிமுகப்படுத்துவற்கானதல்ல. இலக்கியச் சூழலில் தொடர்ந்து உரையாடப்பட்ட நாவல்களை மேலும் கூறிய வாசிப்புக்கு உட்படுத்தி அதனை இன்னும் அணுக்கமாக அறிவதற்கான ஒரு முயற்சி.  இதில் கடந்த ஆண்டுகளில் வந்த சில நாவல்கள் விடுபட்டுள்ளன. அவற்றைக் குறித்த…

நவீன கவிதை முகாம்

வணக்கம். வல்லினம் ஏற்பாட்டில் இரு நாட்கள் நவீன கவிதை குறித்த பட்டறை நடைப்பெறுகிறது. அதன் விபரங்கள்.  நாள் : 10-11 ஜூன் 2022 (வெள்ளி – சனி) இடம் : கோலாலம்பூர்  40 பேருக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ள இந்த முகாமை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வழிநடத்துவார். யுவன் சந்திரசேகர் பற்றிய குறிப்பு யுவன் சந்திரசேகர் கடந்த…

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022

·  அறிவியல் சிறுகதை போட்டி ஏற்பாட்டு குழுவினரும் அவர்தம் குடும்பத்தாரும்  இந்தப் போட்டியில் பங்கெடுக்க முடியாது.   ·  மற்றபடி போட்டியில் மலேசியப் பிரஜைகள், வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம். ·  போட்டியில் பங்கு பெறும் கதைகள் பக்க வரையறைக்கோ சொற்களுக்கோ கட்டுப்பட்டதல்ல. ·    ஒருவர் எத்தனை சிறுகதை வேண்டுமானாலும் அனுப்பலாம். ·  அறிவியல் கூறுகள் இருந்தால்…

யாழ் சிறுகதை போட்டி

அ. யாழ் நிறுவனத்தின்  இச்சிறுகதைப் போட்டியில் மலேசியாவில் உள்ள அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் அல்லது உயர்நிலைப் பள்ளிகளில்  இவ்வாண்டு படிவம் 4,5,6 -ல் (17 வயது முதல் 20 வயது வரை)  பயிலும் மாணவர்கள் பங்கெடுக்கலாம். ஆ. யாழ் நிறுவனம் வழிநடத்திய பட்டறையில் பங்கெடுத்து பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தப் போட்டில் பங்குபெற முடியும்.  இ. இந்தப்போட்டி…

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022

அக்கினி சுகுமார் மலேசிய புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். மலேசியாவின் மூத்த பத்திரிக்கை ஆசிரியராகத் தன் பணியை ஆற்றினாலும் சமகால புனைவு குறித்தும் அதன் போக்குகள் குறித்தும் தன் இறுதி காலம் வரை அக்கறையுடன் கவனித்தவர். அவரது கட்டுரைகள் மலேசிய இலக்கியச் சூழலில் அதிகம் கவனம் பெற்றவை. வறண்டிருந்த கட்டுரை மொழியை இவரது எழுத்து நடை நவீனமாக்கியது.…