
எல்லைகளற்று வரைமுறைகளற்று நீண்டு விரிந்திருக்கும் சிந்தனையையும் மனதையும் போல் கவிதையும் தனது சிறகை எல்லைகளற்று விரித்தபடியே இருக்கிறது. தனக்கான வெளியை கவிதையே கட்டமைக்கிறது. அந்த வெளியைத் தகர்த்து புது புது வெளிகளையும் தொடர்ந்து கட்டமைக்கும் பணியையும் கவிதை செய்கின்றது. வெறும் அழகியலையும் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் மேல்பூச்சுகளோடு பேசி வந்த கவிதைகள் இன்று கட்டுகள் உடைத்து தன்மொழியில்…